பாடம் 1.4 கனவு பலித்தது
Hello, Friends and Families.,
Here we have provided the SSLC Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 1.4 கனவு பலித்தது to prepare for exams. The solutions are accurate and as per the SSLC syllabus.
வினாக்கள்
அத்தையின் கடிதக் கருத்துக்களைச் சுருக்கி எழுதுக
முன்னுரை
அத்தை இன்சுவைக்கு எழுதிய கடித்தத்தின் சுருக்கத்தை நோக்குவோம்.
மொழி தடையில்லை
தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனைக்கு மொழி தடையே இல்லை. நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள், தமிழி இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்னறன.
அறிவியல் சிந்தனைகள்
தொல்காப்பியர் தன் நூலில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து இவ்வுலகம் என்றும், உலக உயிர்களை ஒரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியுள்ளதையும் காணலாம்.
கடல் நீர் ஆவியாகி மேகமாவும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். இதனை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை போன்ற இலங்கியங்களில் காண முடிகிறது.
திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்பதை ஒளவையார் தனது பாடலில் கூறியுள்ளார்.
வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைப் பதிற்றுப்பத்து நூலில் கூறுகிறது. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை நற்றிணை நூல் கூறுகிறது. இதன் வழி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம் பெற்றுள்ளது.
முடிவுரை
சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்து கொள்; நூலகம் செல்; நூல் வாசி; தொடர்ந்து முயற்சி செய்; நீ வெல்வாய்!
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல்.
- தொல்காப்பியம்
- பதிற்றுப்பத்து
- கார்நாற்பது
- நற்றிணை
விடை: பதிற்றுப்பத்து
2. திருவள்ளுவமாலை நூலின் ஆசிரியர்
- டி.கே.சி
- அருட்பிரகாசம்
- திருவள்ளுவர்
- கபிலர்
விடை: கபிலர்
குறுவினா
1. யாரெல்லாம் தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்?
- மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்
- இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
- இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.
2. எவையெல்லாம் கலந்தது என தொல்காப்பியர் கூறுகிறார்?
தொல்காப்பியர் தன் நூலில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து இவ்வுலகம் என்று கூறுகிறார்.
3. கடல் நீர் ஆவியாகி மழையாக பொழிவதை எந்த நூல்களிலெல்லாம் காணலாம்?
கடல் நீர் ஆவியாகி மேகமாவும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். இதனை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை போன்ற இலங்கியங்களில் காண முடிகிறது.