இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து தொடரும் தொடர்பும் அறிதல் பற்றி அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.
இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
- திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” – பாரதிதாசன்.
- “திருக்குறளில் இல்லாது இல்லை, இணை இல்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்.
- மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் என்பவர் 1812-ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
- திருக்குறளை போற்றிப்பாடும் நூல் – திருவள்ளுவமாலை.
- “வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
- வேரூன்றி நாள் முதல் உயிர்மொழி – பெருஞ்சித்திரனார்.
- திருந்திய பண்பும், சீர்த்த நாகரிககமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம் – பரிதிமாற்கலைஞர்.
- தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது – கெல்லட்.
- தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004 (12.10.2004).
- “தமிழ் மிகவும் பண்பட்ட மொழி” எனக் கூறிய மொழியியல் அறிஞர் மாக்ஸ்முல்லர்.
- பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்ட செம்மொழி எனக் கூறியவர் – பாவணர்
- இன்றைய மொழியில் அறிவியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது என்றவர் – எமினோ
- பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
- தமிழ்மாெழியில் பெயர்த்தல் வேண்டும்
- இறவாத புகழ்உடைய புதுநூல்கள்
- தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் – பாரதியார்
- இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம் – குணவாயிற்கோட்டம்.
- “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று போற்றியவர் – பாரதியார்
- எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
- இலக்கணநூல் புதியாக இயற்றுதலும் வேண்டும்
- செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
- எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
- இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் – பாரதிதாசன்
- தமிழ் ஒளியை மதங்ககளிலே சாய்க்காமை வேண்டும்
- தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் – பாரதிதாசன்
- தொண்டு செய்து பழுத்த பழம்
- தூயதாடி மார்பில் விழும்
- மண்டைச் சுரப்பை உலகு தொழும்
- மனக்குகையில் சிறுத்தை எழும் – என்று பெரியாரைப் புகழந்தவர் – பாரதிதாசன்
- நாட்டில் உள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருத்தல் – பெரியார்
- பெண்ணடிமைக்கு முதன்மைக் காரணம் சொத்துரிமை இல்லாதது – பெரியார்
- அரசின் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படும் – பெரியார்.
- குகனின் ஊர் ‘சிருங்கிபேரம்’
- “யாதினும், இனியநண்ப இருத்திஈண்டு எம்மோடு” என்று குகனிடம் இராமன் சொன்னான்.
- “அன்புள்ள இனிநாம் ஓர்ஐவர்கள் உளரானோம்” ஐந்தாவது ஆள் குகன்
- “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய்வினைப் பயனே” – நற்றிணை – நல்வேட்டனார் பாடியது.
- சான்றோர் செல்வம் என்று சொல்வது புகலிடம் தேடி வந்தோரைக் கைவிடாமை
- “சான்றோர் சான்றோர் பாலர் ஆப. சாலார் சாலார் பாலர் ஆகுபவே” – புறநானூறு – கண்ணகனார் பாடல்
- நுண்ணிய நூல்பல கற்றவர்க்கே அமைந்த அரியகலை – பேச்சுக்கலை
- மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் – பேரறிஞர் அண்ணா, திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரம், பாரதியார், குன்றக்குடி அடிகளார் போன்றோர் ஆவர்.
- “இப்போது இங்கவன் உதவான்” என்று அப்பூதியடிகள் தன் மூத்த மகனைப் பற்றித் திருநாவுக்கரசரிடம் கூறினார் – பெரியபுராணம்
- தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருளுக்கும் திருநாவுக்கரசர் என்று பெயர் சூட்டியவர் – அப்பூதியடிகள்
- “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” – என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
- நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் இயக்குநர் என்பர்.
- படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு.
- இயக்குருப் படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
- ஓவியங்களைக் கொண்டு எடுக்கும் திரைப்படம் – கருத்துப்படம்.
- ஓவியத்திற்கு பதில் பொம்மைகள் கொண்டு எடுக்கப்படும் படம் – இயக்குருப்படம்.
- “அரியாசனம் உனக்கே யானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே” – தமிழ்விடுதூது.
- “போலிப் புலவர்களைத் தலையில் குட்டியவர்” – அதிவீரராமபாண்டியன்
- “போலிப் புலவர்களின் தலையை வெட்டியவர்” – ஒட்டக்கூத்தர்
- “போலிப் புலவர்களின் காதை அறுத்துவர்” – வில்லிபுத்துரான்
- மாந்தன் தோன்றிய இலெமுரியா கண்டத்தை “மனித நாகரிகத்தின் தொட்டில்” என்பர்.
- இறைவனைப் “பண்ணொடு தமிழ் ஒப்பாய்” என்று தேவாரம் கூறுகிறது.
- தமிழரின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
- இறந்தோரை இட்புப் புதைக்கும் தாழி முதுமக்கள் தாழி
- நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
- நகரத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோர் – திருநாவுக்கரசர்
- உலகம் – உலவு (சுற்றுதல்) என்ற சொல்லடியாகப் பிறந்தது.
- ஞாலம் – ஞால் (தொங்குதல்) என்ற அடியாகப் பிறந்தது.
- வளிது நிலைஇய காயம் – புறநானூறு. இது வானத்தில் காற்று இல்லாப் பகுதியும் உண்டு என்று கூறுகிறது.
- “தீப்பிழி எந்திரம் பந்தல் வருந்த” பதிற்றுப்பத்து கூறுவது. கரும்புச்சாறு எடுக்கும் இயந்திரம்.
- உடம்பார் அழியின் உயிரார் அழிவர் – திருமூலர் திருமந்திரம்
- அறுவைச் சிகிச்சையை உவமையாக கூறும் நூல் – கம்பராமாயணம்.
- இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே பெருமைக்கூரியது. – காந்தியடிகள்
- “அனைத்து இழப்பினும் உண்மையை இழக்கில்லேன்” – அரிச்சந்திரன்
- திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர் தால்கதாய் (டால்ஸ்டாய்)
- “பகைவனிடமும் அன்பு காட்டு” என்று கூறும் நூல் ‘பைபிள்’
- அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை – எளிமையும், சிக்கனமும்
- தானோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
- கோனோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே – குலசேகர ஆழ்வார்
- உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
- உறவு கலவாமை வேண்டும் – இராமலிங்க வள்ளலார்
- கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
- கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக” – வள்ளலார்
- ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
- ஒருமையுளர் ஆகிய உலகியல் நடத்தல் வேண்டும் – வள்ளலார்
- இராமலிங்கர் சத்திய தருமசாலையை நிறுவிய இடம் – வடலூர்
- இறவாத நிலை தரும்மொழி தமிழ்மொழி – வள்ளலார்
- உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக் காக்கும் – அயோத்திதாசப் பண்டிதர்
- வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் – தாராபாரதி
- வினையே ஆடவர்க்கு உயிர் – குறுந்தொகை
- முந்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை – தொல்காப்பியம்
- உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமூலர்
- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் – நாமக்கல் கவிஞர்
- மக்களுக்கான நூலகங்களை முதன் முதலாகத் தொடங்கியவர்கள் – கிரேக்கர்கள்
- கல்கத்தா தேசிய நூலகம் இந்தியாவில் முதன்மையானது.
- நூலகப் பயன்பாட்டு விதிகளை உருவாக்கியவர் – சீர்காழி ஆர்.அரங்கநாதன்.
- இந்தியாவில் மொத்தம் 4 மொழிக் குடும்பங்கள் உள்ளன.
- இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 325
- இந்திய நாட்டை மொழிகளின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டவர் ச.அகத்தியலிங்கம்
- தனிச்சிறப்பும், பலமொழிகள் தோன்றி வளர அடிப்படையாகவும் உள்ள மொழி மூலமொழி ஆகும்.
- தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல் உருவானது என்றவர் ஈராஸ் பாரதியார்.
- தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை – பாரதிதாசன்
- நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா எனப் பாராட்டப பெற்றவர் – பாரதியர். பாராட்டியவர் – பாரதிதாசன்.
- மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
- மாதவம் செய்திட வேண்டும்மா – கவிமணி
- தமிழன் என்றோர் இனமுண்டு
- தனியே அதற்கோர் குணமுண்டு – நாமக்கல் இராலிங்கனார்.
- அமெரிக்க கவிஞர் வால்விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற நூலின் சாயலில் பாரதியார முதன் முதலில் வசனகவிதை எழுதினார்.
- புதுக்கவிதை வளர்ச்சியில் வல்லிக்கண்ணனின் பங்கு போற்றத்தக்கது.
- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
- எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்
- “உண்பது நாழி உடுப்பை இரண்டே” – புறநானூறு
- “செல்வத்துப் பயனே ஈதல்” – புறநானூறு
- வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போால் இன்னொன்று வரும், அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமையாகாது – கெலன் கெல்லர்.
- ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் தாய், தாய், தாய் என்று போற்றுகின்றான் – திரு.வி.க.
- “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தாேரே” -இவ்வடி புறநானூறு, மணிமேகலை இரண்டிலும் வருகிறது.
- மீதூண் விரும்பேல் – ஒளவையார்
- பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் – சுரதா
- நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி – திருக்குறள்
- நகல்லவர் அல்லர்க்கு பகலும் இருட்டாக இருக்கும் – திருக்குறள்
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் – வள்ளலார்.
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அடைமொழி | சான்றோர் |
---|---|
உலகச் சிறுகதையின் தந்தை | வால்டர் ஸ்காட் |
சிறுகதை மன்னன் | புதுமைப்பித்தன் |
திருவாதவூரார், அழுது அடியடைந்த அன்பர் | மாணிக்க வாசகர் |
முத்தமிழ் காவலர், தமிழ் பெரும் காவலர் | கீ.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை |
ஆட்சிமொழி காவலர், நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர் | இராமலிங்கனார் |
கவி ஞாயிறு | எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை |
கிருத்துவக் கம்பர் | தாராபாரதி |
சொல்லின் செல்வர் (இலக்கியம்) | இரா.பி.சேதுப்பிள்ளை |
மூதறிஞர் | இராஜாஜி |
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா | மு. வரதராசனார் |
தமிழ் நாடகத் தந்தை | பம்மல் சம்மந்த முதலியார் |
நாடகத் தலைமை ஆசிரியர், நாடகத் தமிழ் உலகின் இமயமலை | சங்கரதாஸ் சுவாமிகள் |
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா | அறிஞர் அண்ணா |
தமிழ்நாட்டின் மாப்பசான் | ஜெயகாந்தன் |
கவிமணி | தேசிக விநாயகம் பிள்ளை |
புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர், பாவேந்தர், புதுமைக் கவிஞர் | பாரதிதாசன் |
புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர் | கபிலர் |
குழந்தைக் கவிஞர் | அழ.வள்ளியப்பா |
தொண்டர் சீர்பரவுவார், அருண்மொழித்தேவர், உத்தமசோழ பல்லவராயன், தெய்வச் சேக்கிழார், | சேக்கிழார் |
கவிச்சக்கரவர்த்தி, கல்வியிற் பெரியவர், கவிராட்சசன் | கம்பர் |
விடுதலைக்கவி, மகாகவி, தேசியக்கவி, ஷெல்லிதாசன், மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துவுக்கு தந்தை, மக்கள் கவி, தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா, எட்டயபுரத்துக் கவி, புதுக்கவிதையின் தந்தை | பாரதியார் |
பெருந்தலைவர், கல்விக் கண் திறந்தவர் | காமராஜர் |
தமிழ்த்தென்றல, உரைநடையின் தந்தை | திரு.வி.க |
தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை | டி.கே.சண்முகம் சகோதரர்கள் |
ஆளுடை நம்பி, வன் தொண்டர், தம்பிரான் தோழர், நாவலூரார் | சுந்தரர் |
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா | அண்ணா |
உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர் | நாச்சினார்க்கினியர் |
பகுத்தறிவு பகலவன், பெரியார், சுய மரியாதைச் சுடர், வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரா் | ஈ.வெ.ரா.ராமசாமி |
முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர் | திருவள்ளுவர் |
இசைக்குயில் | எம்.எஸ்.சுப்புலெட்சுமி |
மொழி ஞாயிறு, செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர், என 174 சிறப்புப் பெயர்கள் | தேவநேயப்பாவாணர் |
பாவலர் ஏறு | பெருஞ்சித்தரனார் |
சந்தக்கவி | அருணகிரிநாதர் |
தமிழ்த்தாத்தா, மகாமகோபாத்தியாய | உ.வே.சாமிநாத ஐயர் |
தமிழ் தியாகப்பர் | பாபாநாசம் சிவன் |
தத்துவ போதக சுவாமி | இராபர்ட். டி. நொபிலி |
வள்ளலார், அருட்பிரகாசர், ஓதாது உணர்ந்த பெருமாள், சன்மார்க்க்கவி, வடலூரார், இறையருள் பெற்ற திருக்குழந்தை | இராமலிங்க அடிகள் |
இறைவனின் பிள்ளை, தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல், திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, இன்தமிழ் ஏசுநாதா் | திருஞானசம்பந்தர் |
சிலம்புச் செல்வர் | ம.பொ.சிவஞானம் |
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் | வ.உ.சிதம்பரனார் |
பெருமழைப்புலவர் | பொ.வே.சோமசுந்தரனார் |
உரையாசிரியர், உரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர் | இளம்பூரணர் |
தசாவதானி | செய்குத் தம்பியார் |
சிறுகதை தந்தை | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி |
பண்டிதமணி, மகோமகோபாத்தியாய | மு.கதிரேசன் செட்டியார் |
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த், கவிஞரேறு, பாவலர் மணி | வாணிதாசன் |
கலைத்தந்தை | கருமுத்து தியாகராசச்செட்டியார் |
மருள்நீக்கியார், அப்பர், தாண்டக வேந்தர், வாகீசர், தேசம் உய்ய வந்தவர் | திருநாவுக்கரசர் |
ஆளுடையப்பிள்ளை | திருஞானசம்பந்தர் |
குறுமுனி | அகத்தியர் |
பட்டர் பிரான், வேயர்கோன், விஷ்ணுசித்தர் | பெரியாழ்வார் |
கற்பனைக் களஞ்சியம் | சிவப்பிரகாசர் |
இரட்டைப்புலவர்கள் | இளஞ்சூரியர், முதுசூரியர் |
நாவலர் | சோமசுந்தர பாரதியார் |
சூடிக்கொடுத்த நாச்சியார், சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி, கோதை | ஆண்டாள் |
பதிப்புச் செம்மல் | ஆறுமுக நாவலர் |
பகுத்தறிவுக் கவிராயர் | உடுமலை நாராயண கவி |
பரிதிமாற் கலைஞர் | வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி |
சடகோபன், காரிமாறன், தமிழ்மாறன், பராங்குசன் | நம்மாழ்வார் |
தனித்தமிழ் இசைக் காவலர் | இராசா.அண்ணாமலைச் செட்டியார் |
பரகாலன், கலியர், மங்கை வேந்தர், திருமங்கை மன்னர், நாலுகவிப் பெருமாள், வேதம் தமிழ் செய்த மாறன், ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் |
ரசிகமணி | டி.கே.சி |
தமிழர் தந்தை | சி.பா. ஆதித்தனார் |
கூடலர்கோன், கொல்லிகூவலன் | குலசேகராழ்வார் |
தென்நாட்டின் ஜான்சிராணி | அஞ்சலையம்மாள் |
தமிழ் வியாசர் | நம்பியாண்டார் நம்பி |
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் | அம்புஜத்தம்மாள் |
திராவிட ஆச்சாரியார் | திருமழிசையாழ்வார் |
பன்மொழிப்புலவர் | கா. அப்பாத்துரையார் |
நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை | கந்தசாமி |
விப்பிரநாராயணன் | தொண்டரடிப் பொடியாழ்வார் |
திவ்விய கவி | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன் | சீத்தலைச் சாத்தனார் |
முதல் சித்தர் | திருமூலர் |
திராவிட சாஸ்திரி, தமிழ் நாடகப் பேராசிரியர் | பரிதிமாற்கலைஞர் |
பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி | வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் |
தமிழ் மூதாட்டி | ஒளவையார் |
அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி, தெய்வக்கவிஞர் | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
வெண்பாவிற் புகழேந்தி | புகழேந்தி |
திருக்குற்றால நாதர், கோயில் வித்வான் | திரிகூட ராசப்பக் கவிராயர் |
தமிழ்ப் புலவர்களுள் இளவரசர் | திருத்தக்கத் தேவர் |
நீதியரசர் | மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
மகாவித்வான் | மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் | அநுத்தமா |
நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர் | அரசஞ்சண்முகனார் |
குலோத்துங்கன் | வா.செ.குழந்தைசாமி |
மக்கள் திலகம், எம்.ஜி.ஆர், புரட்சி நடிகர், இதயக்கனி | எம்.ஜி.ராமச்சந்திரன் |
திருக்குறளார் | வி.முனுசாமி |
உலக உத்தமர் | மகாத்மா காந்தியடிகள் |
கவிப்பேரரசு | வைரமுத்து |
தேசியம் காத்தச் செம்மல் | பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் |
புஷ்பா தங்கதுரை | ஸ்ரீவேணுகோபாலன் |
காலா காந்தி, படிக்காத மேதை | காமராஜர் |
சர்தார் | வேதரத்தினம் பிள்ளை |
சிற்பி | பாலசுப்ரமணியம் |
கலைஞர் | மு. கருணாநிதி |
ஒப்பிலக்கணத் தந்தை | கால்டுவெல் |
வானம்பாடிக் கவிஞர் | நா. காமராசன் |
கவிக்கோ | அப்துல் ரகுமான் |
கலைவாணர் | என்.எஸ்.கிருஷ்ணன் |
எஸ்.கே.மதுசூதன் | ஆத்மாநாம் |
நடிகவேள் | எம்.ஆர்.ராதா |
அண்ணாமலை கவிராஜன் | அண்ணாமலை ரெட்டியார் |
கற்பனைக் களஞ்சியம் | செய்குத்தம்பி பாவலர் |
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் | கல்கி |
தமிழ் உரைநடையின் தந்தை | திரு.வி.க |
காரைமுத்து புலவர், வணங்காமுடி, பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, கமகப்பிரியன் | கண்ணதாசன் |
உவமைக் கவிஞர் | சுரதா |
தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ் | சுஜாதா |
தென்னாட்டுத் தாகூர் | வேங்கடரமணி |
இஸ்லாமியத் தாயுமானவா் | குணங்குடிமஸ்தான் |
கவிக்குயில் | சரோஜினி நாயுடு |
கோணக் கோபாலன் | மாதவய்யர் |
விபர நாராயணா் | தொண்டரடிப் பொடியாழ்வார் |
தமிழறிஞர் | கி.வா. ஜெகநாதன் |
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை | மறைமலை அடிகளார் |
பசுவய்யா | சுந்தர ராமசாமி |
பொதுவுடைமைக் கவிஞர், மக்கள் கவிஞர் | பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் |
சிலம்புச் செல்வர் | ம.பொ.சிவஞானம் |
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அடைமொழி (Q) | நூல் (ans) |
நெடுந்தொகை | அகநானூறு |
தமிழர் வரலாற்றுக் களஞ்சியம், புறப்பாட்டு, புறம் | புறநானூறு |
கற்றறிந்தோர் ஏத்தும் தொகை | கலித்தொகை |
வஞ்சிநெடும்பாட்டு | பட்டினப்பாலை |
நறுந்தொகை | வெற்றிவேற்கை |
வாக்குண்டாம் | மூதுரை |
பாணாறு | பெரும்பாணாற்றுப்படை |
கூத்தராற்றுப்படை | மலைபடுகடாம் |
பெருங்குறிஞ்சி காப்பியபாட்டு | குறிஞ்சிப்பாட்டு |
நெஞ்சாற்றுப்படை | முல்லைப்பாட்டு |
புலவராற்றுப்படை | திருமுருகாற்றுப்படை |
தமிழ்மறை, தெய்வநூல், உத்திரவேதம், உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து, முப்பால், வள்ளுவப்பயன், பொய்யாமொழி | திருக்குறள் |
முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானூறு | பழமொழி |
இரட்டைக் காப்பியங்கள் | சிலப்பதிகாரம், மணிமேகலை |
மூவேந்தர் காப்பியம், சிலம்பு, முதல் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், சமுதாயக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைசெய்யுள் | சிலப்பதிகாரம் |
மணிமேகலை துறவு | மணிமேகலை |
மணநூல் இயற்கைத்தவம் | சீவசிந்தாமணி |
பெளத்தகாப்பியங்கள் | மணிமேகலை, குண்டலகேசி |
நீலகேசி திரட்டு | நீலகேசி |
அழகிய வாய்மொழி தெய்வத்தன்னமை பொருந்திய வாய்மொழி | திருவாசம் |
தமிழர் வேதம் தமிழ் மூவாயிரம் | திருமந்திரம் |
திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் புராணம் வழிநூல் அறுபத்து மூவர் புராணம் | பெரியபுராணம் |
நேமிநாதம் | சின்னூல் |
குட்டித் தொல்காப்பியம் | இலக்கண விளக்கம் |
குழந்தை இலக்கியம்குறவஞ்சி | பிள்ளைத்தமிழ் |
குறத்திப்பாட்டு | குறவஞ்சி |
Useful Links
• புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
• பொருத்துதல் பொருத்தமான பொருளைtத் தேர்வு செய்தல்
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study — Group 4 Science Where to Study 2024