திருவிளையாடற் புராணம்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து திருவிளையாடற் புராணம் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.(Desktop mode இல் போட்டு படிக்கவும்).
மன்னன் புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்
புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப்
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.
1) சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்: தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல் புராணம் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
2) தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறும் நூல் – திருவிளையாடற்புராணம்.
3) திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் – பரஞ்சோதி முனிவர். பரஞ்சோதி முனிவர் சிவபக்தி மிக்கவர்.
4) காலம் – 17 ஆம் நூற்றாண்டு.
5) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள (திருமறைக்காடு{ வேதாரண்யம்.
6) திருவிளையாடற்புராணம் அரங்கேற்றப்பட்ட இடம் – மதுரை சிவபெருமாள் கோவிலுக்கு எதிரேயுள்ள அறுகால் மண்டபம்.
7) பரஞ்சோதி முனிவரின் தந்தை பெயர் மீனாட்சி சுந்தர தேசிகர்.
7) திருவிளையாடற்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை – 3
மதுரைக் காண்டத்தில் உள்ள படலங்கள் – 18
கூடற் காண்டத்தில் உள்ள படலங்கள் – 30
திருவாலவாய்க் காண்டத்தில் உள்ள படலங்கள் – 16
8) திருவிளையாடற் புராணத்தில் உள்ள உட்பிரிவுகளின் படலங்கள் எண்ணிக்கை – 64
9) திருவிளையாடற் புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை – 3363.
10) திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர் – ந. மு. வேங்கடசாமி நாட்டார்.
11) திருவிளையாடற் புராணத்தில் உள்ள நயம் – தொடைநயம்.
Related Links நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்