சீறாப்புராணம்
சீறாப்புராணம் 6th – 12th old and new books + sirappu tamil old and new books fully covered below.
1) இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம்.
2) இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம்.
3) ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு ‘வாழ்க்கை’ என்பது பொருள்
4) புராணம் – வரலாறு
5) நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் நூல்.
6) வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர்.
7) இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் 3 காண்டங்களையும், 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது.
8) நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் ‘பனி அகமது மரைக்காயர்’ இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார்.
9) உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
10) நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
11) உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்கள்
*வள்ளல் சீதக்காதி,
*அபுல்காசிம் மரைக்காயர்.
12) காலம் : 17 ஆம் நூற்றாண்டு.