சிலபதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்

சிலபதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்

சிலபதிகாரம்

1) ‘தமிழ்நாடு’ என்னும் சொல் முதலில் இடம்பெற்றுள்ள இலக்கியம் சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்).

2) “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம்.

3) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள்.

4) தமிழின் முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம்.

thingalai potrudhum thingalai potrudhum

5) இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்? சேர மரபு.

6) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம், மணிமேகலை.

7) சிலப்பதிகாரம் எந்த காப்பிய வகையை சேர்ந்தது? ஐம்பெருங்காப்பியம்.

8) மணிமேகலை எந்த நூலின் தொடர்ச்சி? சிலப்பதிகாரம்.

9) பூம்புகார் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.

10) மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைத்திருந்ததாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.

11) சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் – 2 ஆம் நூற்றாண்டு

12) “ஓங்குசீர் மதுரை,
மதுரை மூதூர் மாநகர்,
தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரை,
மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை,
பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் – சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்).

13) “ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் சுற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” என்னும் வரிகள் இடம்பெற்ற நூல்-சிலப்பதிகாரம்.

14) “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”

15) ஐம்பெருங்காப்பியங்கள்
*சிலப்பதிகாரம்,
*மணிமேகலை,
*சீவகசிந்தாமணி,
*வளையாபதி,
*குண்டலகேசி

16) இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் மணிமேகலை சிலப்பதிகாரம்.

17) கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப்பலவகையான குழல்கள் இருந்ததாகக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.

18) தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக குறிப்பிடும் நூல் – சிலப்பதிகாரம்.

19) சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நாடகமேத்தும் நாடக காணிக்கை என்று மாதவியை குறிப்பிடுகிறார்.

20) நாடகக் கலையைப் பற்றியும் காட்சித் திரையைப் பற்றியும் கூறும் நூல் – சிலப்பதிகாரம்.

21) ‘ஏறு தழுவுதல்’ பற்றி குறிப்பிடும் இலக்கிய நூல் சிலப்பதிகாரம்.

22) தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்வது – சிலப்பதிகாரம், மணிமேகலை.

23) “ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து மலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்” – சிலப்பதிகாரம்.

24) சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம் பெற்றுள்ளது.

25) சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வெவ்வேறு நூல்களாயினும் ஒரே கதைத் தொடர்புடையன. எனவே, இவை இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்பெறுகின்றன.

26) பெருஞ்சித்திரனார் என்றும் நிலைத்து நிற்பதாக சிறப்பிக்கும் நூல் சிலப்பதிகாரம்.

27) “வாழையும் கமுகும் தாழ் குலைத்தெங்கும் மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் – சிலப்பதிகாரம் (காடுகாண் காதை).

28) “வண்டோடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் குறிப்பிடும் நூல் சிலப்பதிகாரம்.

29) “தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்ளை” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் – சிலப்பதிகாரம்.

30) இளங்கோவடிகளின் தந்தை – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

31) இளங்கோவடிகளின் தமையன் – சேரன் செங்குட்டுவன்.

32) இளங்கோவடிகளின் சமகாலத்தவர் –சீத்தலைச் சாத்தனார்

33) இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு தங்கிய இடம் குணவாயிற் கோட்டம்.

34) சிலப்பதிகாரத்தின் கதை உருவம் இசைநாடகம்.

35) சிலப்பதிகாரம் 3 காண்டங்களைக் கொண்டது.
அவை புகார்க்காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக்காண்டம்.

36) ஆடலரசி எனப்பட்டவள் – மாதவி.

37) சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்-30
புகார்க் காண்டம் -10
மதுரைக் காண்டம் -13
வஞ்சிக்காண்டம் 7 காதைகள், 5001 வரிகள்.

38) சிலப்பதிகாரம் ‘உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள்’ எனவும் வழங்கப்படும்.

39) “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் போற்றியவர் – பாரதியார்.

40) சிலப்பதிகாரத்தின் ‘வழக்குரைகாதை’ மதுரைக் காண்டத்தின்.

41) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று கூறும் குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம்.

42) சிலப்பதிகாரம் உணர்த்தும் முப்பெரும் உண்மைகள்-
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”
“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்”
“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”

43) சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

44) “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் சிலப்பதிகாரம்.

45) “பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும்”

46) தமிழ்நாட்டின் எல்லையைப் பற்றி கூறும் நூல்கள் சிலப்பதிகாரம், புறநானூறு.

47) த மிழகத்தின் வடக்கெல்லையை வேங்கட மலையாகவும் தெற்கெல்லையை குமரி முனையாகவும் குறிப்பிட்ட நூல்கள்- சிலப்பதிகாரம், புறநானூறு.

48) தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய இலக்கியமாக மா.பொ.சி. கருதியது -சிலப்பதிகாரம்.

49) தமிழினத்தை ஒன்றுபடுத்தக் கூடிய இலக்கியமாக மா.பொ.சி. கருதியது -சிலப்பதிகாரம்.

50) தமிழினத்தின் பொதுச்சொத்து என மா.பொ.சி குறிப்பிடும் நூல் – சிலப்பதிகாரம்.

51) தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தியவர் – மா.பொ.சி

மருவூர்பாக்கம்
மருவூர்பாக்கம்

52) “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்”  -திருத்தணிகையுலா.

53) சிலப்பதிகாரம் – மூவேந்தர்கள் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.

54) சிலப்பதிகாரம், புகார்க்காண்டத்தின இந்திரவிழா ஊரெடுத்த காதை – சிலப்பதிகாரம், புகார்க்காண்டம்.

54) சிலப்பதிகாரம் 3 காண்டங்களையும், (பெரும்பிரிவு), 30 காதைகளையும்{உட்பிரிவு) கொண்டது.

55) சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்‘ என சிலபதிகாரம் காப்பியத்தை படைத்தார் என்பர்.

56) சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள்:
முதல் காப்பியம்
குடிமக்கள் காப்பியம்
முத்தமிழ்க்காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
தமிழ் தேசிய உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள் காப்பியம்.

57) உரைப்பாட்டு மடை (உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்) ‘உரைப்பாட்டு மடை’ என்பது சிலப்பதிகாரத்தில் வரும்.

58) சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், பெருங்கதை ஆகிய காப்பியங்களும் -அகவற்பாவில் அமைந்துள்ளது.

59) “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட” எனும் வரி இடம் பெற்ற நூல் சிலப்பதிகாரம்.

60) கோவலன் கொலை செய்யப்பட்ட இடம் – மதுரை.

61) கோவலனுக்கு தவறான தீர்ப்பு கொடுத்த மன்னன் ஆரியப்படை கடந்த – நெடுஞ்செழியன்.

62) ‘ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்’ என்ற பாடல்வரி சிலப்பதிகாரத்தில் எந்த காதையில் வருகின்றது ஊர்காண்காதை.

63) திருக்குறளிலும், சித்தன் என்று சிலப்பதிகாரம் நாடுகாண் காதையிலும் வழங்கப்படுகிறார்கள்.

64) வேங்கடசாமி சிலப்பதிகார உரையாசிரியர்.

65) கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த கதையாதலினால் (சிலம்பு + அதிகாரம்) சிலப்பதிகாரம் என்று பெயர் சூட்டப்பட்டது.

66) கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ‘தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம், எனப் பாராட்டியுள்ளார்.

67) “நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று;
பட்டேன், படாத துயரம், படுகாலை” -சிலப்பதிகாரம்.

68) சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் (அரங்கேற்று காதை)

69) புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

70) “இறும்பூது போலும்…”-சிலப்பதிகாரம்.

71) உரோமாபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்படையில் இடம் பெற்றிருந்தார்கள் என்ற குறிப்பு இடம் பெற்ற நூல் – சிலப்பதிகாரம்.