குறுந்தொகை 6th – 12th

குறுந்தொகை

பாம்பு, முதலை, மீன், செய் – குறுந்தொகை

‘பாலொடு வந்து கூழொடு பெயரும்’

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
– பெருங்கடுங்கோ

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே.
– வெள்ளிவீதியார்

தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுவது – குறுந்தொகை

‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்ட தொகை நூல் குறுந்தொகை

குறுந்தொகையில் உள்ள பாடல்கள் – 401

குறுந்தொகையின் அடி எல்லை  4–8 

குறுந்தொகையைத் தொகுத்தவர்- பூரிக்கோ

குறுந்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் – சௌரி பெருமாள் அரங்கனார்.

குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

“உணவு உண்ண யாரேனும் உள்ளீர்களா” என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, கூறும் நூல் – குறுந்தொகை.

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ”

‘செம்புலப் பெயல் தீர்போல’

‘வினையே ஆடவர்க்குயிர்’

“தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவவர்”குறுந்தொகை (வெள்ளிவீதியார்).

உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் – குறுந்தொகை

முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் – குறுந்தொகை.

“நன்று நன்றென்னும் மாக்களோடு இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே”

அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்குவது குறுந்தொகை.

தாய்வழி சொத்து அனைத்தும் பெண்களுக்கும் வழங்கப்பட்டது குறுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.

“மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே”

குறுமை + தொகை குறுந்தொகை

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

அடிவரையறை  4 – 8

குறுந்தொகை

Leave a Comment