ஐம்பெருங் காப்பியங்கள்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஐம்பெரும் ஐஞ்சிறுங் காப்பியங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
• சிலபதிகாரம்
• மணிமேகலை
• சீவகசிந்தாமணி
• வளையாபதி
• குண்டலகேசி
சிலபதிகாரம் மணிமேகலை thoda
சீவகசிந்தாமணி
1) குணமாலை என்னும் தலைவி, யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்படும் நூல் – சீவகசிந்தாமணி.
2) சீவகசிந்தாமணியின் ஆசிரியர் – திருத்தக்கதேவர். ‘இயற்கைத் தவம்’ – சீவக சிந்தாமணி
3) சீவகசிந்தாமணியின் கதைத் தலைவன் – சீவகள்.
4) ‘மணநூல்’ என அழைக்கப்படுவது – சீவகசிந்தாமணி.
5) மயிற்பொறி விமானம் பற்றி குறிப்பிடும் நூல் – சீவகசிந்தாமணி.
அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,”ஓர்
எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றான்
6) சீவகனைத் தலைவனாகக் கொண்டு தோன்றிய காப்பியம் – சீவக சிந்தாமணி.
7) இன்பங்களைத் துறந்து துறவு பூண வேண்டும் சீவக சிந்தாமணி காப்பியத்தின் மையக்கருத்தாகும்.
8) சீவகசிந்தாமணி-இலம்பகங்கள்
*நாமகள் இலம்பகம்
*கோவிந்தையார் *இலம்பகம்
*காந்தருவதத்தையார் இலம்பகம்.
9) சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ‘நரிவிருத்தம்’ என்னும் நூலை இயற்றியவர் திருத்தக்க தேவர்.
10) திருத்தணிகையுலாவில் முதலாவதாக வைக்கப்பட்டுள்ள நூல் – சீவக சிந்தாமணி.
11) கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘கல்லூரி’ என்று கூறும் நூல்- சீவக சிந்தாமணி.
12) சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள். குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல் சிந்தாமணி எள்ளல் தகுதியுடையதாயிற்று.
13) சீவகசிந்தாமணி காப்பியத்தை இயற்றித் தமிழன்னைக்கு அணி செய்தவர் திருத்தக்கதேவர் என்னும் புலவர் பெருமானாவர்.
14) திருத்தக்கதேவர் சோழ நாட்டைச் சேர்ந்தவர். சமண சமயஞ்சார்ந்த துறவி.
15) திருத்தக்கதேவர் நரிவிருத்தம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.
16)சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாகப் 13 இலம்பகங்களைக் கொண்டிலங்குகின்றது.
17) விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் சிந்தாமணியே.
18) சீவகன் பிறந்த பொழுது அவள் தாய் விசயை ‘சிந்தாமணியே’ என்று அவனை அழைத்தார். அக்குழந்தை தும்மிய பொழுது ‘சீவ’ என்ற வாழ்த்தொலி கேட்டது. அதனால் அவன் சீவகள் என்று அழைக்கப்பட்டான். சீவகன் வரலாற்றைக் கூறும் காப்பியமாதலின் அந்நூல் சீவகசிந்தாமணி என வழங்கலாயிற்று.
கருங்கொடிப் புருவம் ஏறா
கயல்நெடுங்கண்ணும் ஆடா
அருங்கடி மிடறும் விம்மா
அணிமணி எயிறும் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய்
திறந்திவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவில்
நவின்றதோ என்று நைந்தார்.
19) பெருங்காப்பியத்திற்கு உரிய நான்கு வகை உறுதிப் பொருட்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அடையப் பெற்று விளங்கும் காப்பியம் – சீவக சிந்தாமணி.
20) விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்தவை – சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்.
21) சீவகசிந்தாமணி; 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள்.
வளையாபதி❌
குண்டலகேசி
1) ‘குண்டலம்’ என்னும் அணிகலன் எங்கு அணிவது? காதில்.
2) ‘குண்டலகேசி’ எனும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் – நீலகேசி.
ஐஞ்சிறுங் காப்பியங்கள்
சூளாமணி
நீலகேசி
யசோதர காவியம்
உதயண குமார காவியம்
நாககுமார காவியம்
சூளாமணி
1) மதங்க சூளாமணி என்ற நூலை இயற்றியவர் யார் விபுலானந்த சுவாமிகள்.
2) சருக்கம் -சூளாமணி, பாரதம்
3) சூளாமணி பதிப்பித்தவர் – சி. வை. தாமோதரனார் (1895).
நீலகேசி
1) நீலகேசி சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது
2) சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூல்
3) நீலகேசியின் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
4) நீலகேசியின் சருக்கங்கள் – 10
5) நீலகேசி கூறும் நோயின் வகைகள் – 3
6) நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறுவது – நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்.
7) பத்தமத துறவியருடன் நீலகேசி வாதம்புரியும் பகுதியில் விரவியிருக்கும் அறிவியல் சிந்தனைகளை விளக்கும் நூல் நீலகேசி.
8) நீலகேசியின் பாவகை – விருத்தப்பா.
9) நீலகேசிக்கு வழங்கப்படும் வேறுபெயர் – நீலகேசித் தெருட்டு.
10) ‘குண்டலகேசி’ எனும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் – நீலகேசி.
11) சமண சமயப் பெண் ஒருவர் சமயத் தலைவர் பலரிடம் வாதம் செய்து சமண நெறியை நிலைநாட்டுவதாக அமைந்த நூல் – நீலகேசி.
12) தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் – நீலகேசி.
13) தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் – நீலகேசி
14) நீலகேசி நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 11 பகுதிகளும், 894 பாடல்களும் உள்ளன.
15) நீலகேசி நூலின் உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர்.
16) ‘ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மையாம் இனி’
17) “பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்”
யசோதர காவியம்
1) வடமொழியிலிருந்து தமிழில் தழுவப்பெற்ற நூல் – யசோதர காவியம்
2) யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுவது – யசோதர காவியம்.
3) யசோதர காவியத்தில் உள்ள சருக்கங்கள்- 5
4) யசோதர காவியத்தில் உள்ள பாடல்கள்-(320-330).
5) “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக”
6) ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
உதயண குமார காவியம்❌
நாககுமார காவியம்❌
Related Links மணிமேகலை தொடர்பான செய்திகள்