Useful Links
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study 2024
Uvamaiyal Vilakaperum Poruthamana Porul Therinthueluthuthal – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல்
இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால் விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேட்கப்படுகிறது. எனவே இப்பகுதிக்காக ஏராளமான உவவமைகளையும் அதற்குரிய பொருட்களையும் பட்டியலிட்டுள்ளோம்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல | பொறுமை |
நன்பால் கலந்தீமையால் திரிதல் போல் | கெடுதல் |
மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல | மயங்குதல் |
அடுத்தது காட்டும் பளிங்கு போல் | வெளிப்படுத்தல் |
அத்தி பூத்தாற்போல | அரிய செயல் |
அயடிற்ற மரம்போல் | வீழ்தல் |
இலவு காத்த கிளி போல | ஏமாற்றம் |
உடலும் உயிரும் போல | ஒற்றுமை, நெருக்கம் |
கல்மடை திறந்தாற்போல | வெளியேறுதல் |
பகலவனைக் கண்ட பணி போல | நீங்குதல் |
உள்ளங்கை நெல்லிக்கனி போல | தெளிவு |
தாமரையிலைத் தண்ணீர் போல | பற்றின்மை |
பேடிகை வாளான்மை போலக்கெடும் | முயற்சின்மை |
ஒற்கத்தின் ஊற்றாம் துணை போல | ஊன்றுகோல் |
பொருபுலி புலியோடு சிலைத்த போல | எதிரெதிரே நின்று போரிடல் |
கடலில் கரைத்த காயம் போல் | பயனற்றது |
கொடுக்கும் தேளாய்க் கொட்டுவதேன் | வருத்தம் |
இடியோசை கேட்ட நாகம் போல | நடுக்கம் |
செந்தமிழும் சுவையும் போல | ஒற்றுமை |
தாயைக் கண்ட சேயைப் போல | இன்பம், அதிக மகிழ்ச்சி |
நகமும் சதையும் போல | இணை பிரியாமை |
மழை காணாப் பயிர் போல | வாடுதல் |
வேலியே பயிரை மேய்ந்தது பேல | நயவஞ்சம் |
அன்றலர்ந்த மலர் போல | புத்துணர்வு |
அனலில் விழுந்த புழுப்போல் | வேதனை |
கண்கட்டு வித்தை போல | மாயத்திரை |
பத்தரை மாற்றுத்தங்கம் போல | பெருமை |
நாயும் பூனையும் போல | பகை |
அலை ஓய்ந்த கடல் போல | அமைதி |
பசுமரத்தாணி போல் | எளிதாகப் பதிதல் |
குன்றின் மேலிட்ட விளக்கு போல | பயனுடைமை / பயன்/ வெளிச்சம் |
கனியிருப்பக் காய் கவரந்தது போல | அறியாமை, தேவையற்ற செயல் |
இலைமறைக் காய் போல் | வெளிப்படுதல் |
ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் | துன்பம் |
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல | நாசம் |
செவிடன் காதில் ஊதிய சங்குபோல் | பயனின்மை |
செந்தமிழும் சுவையும் பேல | ஒற்றுமை |
ஞாயிறு கண்ட தாமரை போல | மகிழ்ச்சி |
நீர்மேல் எழுத்து போல | நிலையற்றது |
பழம் நழுவி பாலில் விழந்தது போல | இன்பமிகுதி |
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல | வருத்தம் |
அனலிற் பட்ட மெழுகுபோல | துன்பம் கண்டு உருகுதல் |
குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வருவது போல் | குறும்புகளில் ஈடுபடுவது |
பொன்மலர் மணம் பெற்றது போல் | பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது |
உமி குற்றிக் கை சலித்தது போல் | வருத்தம் |
கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போல | தவிப்பு |
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல | அத்துமீறல் |
அச்சில் வார்த்தாற்போல | ஒரே சீராக |
அவலை நினைத்து உரலை இடித்தாற்போல | கவனம் |
ஆப்பறைந்த மரம் போல | உறுதி |
அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல் | ஏமாற்றுதல் |
அரை கிணறு தாண்டியவன் போல | ஆபத்து |
ஆப்பசைத்த குரங்கு போல | சிக்குதல் |
ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் | திட்டமிடாமை |
இஞ்சி தின்ற குரங்கு போல் | விழித்தல் |
இடி விருந்த மரம் போல் | வேதனை |
இரும்பைக் கண்ட காந்தம் போல் | கவர்ச்சி |
உடும்புப் பிடி போல | பிடிப்பு |
உமையும், சிவனும் போல் | நட்பு, நெருக்கம் |
உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல் | உறுதி |
ஊமை கண்ட கனவு போல | தவிப்பு, கூற இயலாமை |
எள்ளில் எண்ணெய் போல் | ஒளிந்திருத்தல், மறைவு |
எட்டாப்பழம் புளித்தது போல் | ஏமாற்றம் |
ஏழை பெற்ற செல்வம் போல் | மகிழ்ச்சி |
ஒண்ட வந்த பிடாரி வளர்ப்பு பிடாரியை ஓட்டினாற்போல் | விரட்டுதல் |
கண் கெட்டபின் சூரிய நமஸ்கராம் போல | காலம் தாமதித்து உணர்தல், வருமுன் காவாமை |
கயிறற்ற பட்டம் போன்று | தவித்தல், வேதனை |
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது | பிறரை ஏமாற்றுதல் |
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது | கலக்கம், வருத்தம் |
கானமயிலாட அது கண்டு ஆடம் வான்கோழி போல | தாழ்வு, உயர்வின்மை |
குடத்தில் இட்ட விளக்கு பேல | இகழ்ச்சி, அடக்கம் |
சிதறிய முத்து பேல | பயனின்மை |
காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் மேய்ந்தாற்போல | வேகம் |
சீரிய நாகம் போல் | கோபம் |
செல்லரித்த ஒலைபோல் | பயனின்மை |
நீரும் நெருப்பும் போல | விலகுதல் |
பாம்பின் வாய்த்தேரை போல | மீளாமை |
முக்காலம் உணர்ந்த முனிவர் போல | அறிதல் |
பாய்மரம் சாய்ந்தது போல | விழுதல் |
மரமேற்றின வண்டி போல் | சுமை |
பால் மணம் ஆறாத குழந்தை போல | வெகுளி |
புளியம் பழமும் தோடும் போல | ஒற்றுமை |
புற்றீசல் போல | பெருகுதல் |
மலரும் மணமும் போல | ஒற்றுமை |
வேம்பு அரசும் போல | ஒற்றுமை |
மேகம் கண்ட மணில் போல | மகிழ்ச்சி, ஆனந்தம் |
காட்டுத்தீ போல | வேகமாக பரவுதல் |
பற்று மரமில்லாக் கொடி போல | ஆதரவின்மை, துன்பம் |
கோலை எடுத்தால் குரங்கு போல் | பயம் |
சர்க்கரைப் பந்தலில் தேன் பொழிந்தாற்போல | இன்பம் |
சாயம் போன சேலை | மதிப்பின்மை |
சித்திரப் புதுமை போல | அழகு |
சிவபூஜையில் கரடி போல | விருப்பமின்மை, தேவையற்ற வரவு |
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல | வேண்டாத வேலை, கேடு செய்தல் |
சேற்றில் பிறந்த செந்தாமரை போல் | உயர்வு, மேன்மை |
சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை போல | திரும்பச் செய்தல் அறிவின்மை |
திருடனைத் தேள் கொட்டியது போல | சொல் முடியாத வேதனை |
தோன்றி மறையும் வானவில்லைப் போல் | நிலையற்ற, நிலையாமை |
நத்தைக்குள் முத்துப்போல் | உயர்வு, மேன்மை |
நாண் அறுத்த வில் போல | பயனற்றது |
தொட்டனைத் தூறம் மணற்கேணி போல் | அறிவு |
நீருக்குள் பாசி போல் | நட்பு |
பசுத்தோல் போர்த்தி புலி போல் | நயவஞ்சகம், ஏமாற்றுதல் |
தாயைப் போல பிள்ளை | தொடர்பு |
இதனை pdf ஆக download செய்யமுடியுமா?
எப்படி download செய்வது என்று தெரிந்தால் அதை தயவுசெய்து கூறுங்கள்.