Iravana Kaaviyam (இராவண காவியம்)
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இராவண காவியம் தொடர்பான செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
இராவண காவியம்
– புலவர் குழந்தை
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி
பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்
அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்
மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே
பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்
பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகுஅ ணைக்குமால்
முதிரையும் சாமையும் வரகும் மெய்மணி
குதிரைவாலியும்களம் குவித்துக் குன்றுஎனப்
பொதுவர்கள் பொலிஉறப் போர்அ டித்திடும்
அதிர்குரல் கேட்டுஉழை அஞ்சி ஓடுமே!
மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ
இன்னிளம் குருளைமிக்கு இனைந்து வெம்பிடத்
தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
நன்னரில் வலியசெந் நாய்உய ங்குமே.
கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார்
படிக்குற எருத்துக்கோடு அன்ன பாலைக்காய்
வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால்
அடிக்கும் ஓசையின்பருந்து அஞ்சி ஓடுமே
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்*
மரைமலர்க் குளத்தில் ஆடும்
மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட
பொருகரிக் குருத்து அளந்து
பொம்மெனக் களிப்பர் ஓர்பால்
குரைகழல் சிறுவர் போரில்
குலுங்கியே தெங்கின் காயைப்
புரைதபப் பறித்துக் காஞ்சிப்
புனைநிழல்அருந்து வாரே
பசிபட ஒருவன் வாடப்
பார்த்துஇனி இருக்கும் கீழ்மை
முசிபட ஒழுகும் தூய
முறையினை அறிவார் போல
வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை நன்னீர்
கசிபட ஒளிமுத் தோடு
கரையினில் குவிப்பார் அம்மா
வருமலை அளவிக் கானல்
மணலிடை உலவிக் காற்றில்
சுரிகுழல் உலர்த்தும் தும்பி
தொடர்மரை முகத்தர் தோற்றம்
இருபெரு விசும்பிற் செல்லும்
இளமைதீர் மதியம் தன்னைக்
கருமுகில் தொடர்ந்து செல்லுங்
காட்சி போல்தோன்று மாதோ.
1) “இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” – பேரறிஞர் அண்ணா
2) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
3) 5 காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது
1. தமிழகக் காண்டம்
2. இலங்கைக் காண்டம்
3. விந்தக் காண்டம்
4. பழிபுரி காண்டம்
5. போர்க்காண்டம்
4) இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
5) தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
6) யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
7) இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம்.
Related Links கம்பராமாயணம் 6th – 12th