அகநானூறு 6th – 12th

அகநானூறு

பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ
இருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்
போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந்து
அறனெறி பிழையாத் திறனறி மன்னர்
அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்
கழித்தெறி வாளின் நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி நாளும்
கொன்னே செய்தியோ அரவம் பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்
பொலிந்த ஆயமொடு காண்டக இயலித்
தழலை வாங்கியும் தட்டை 1யோப்பியும்
அழலேர் செயலை அந்தழை 2அசைஇயும்
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய மழையே.

கோடை-அகநானூறு
மருந்து- அகநானூறு

‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என்னும் வரி இடம்பெற்ற நூல் – அகநானூறு.

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது கடல்.

“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் மருதன் இளநாகனார்.

“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்” பெற்றுள்ள நூல் அகநானூறு எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.

“கொற்கையில் பெருந்துறை முத்து” முத்துக்களைப் பற்றிக் கூறும் நூல் – அகநானூறு.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்” எனும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் – அகநானூறு.

யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள் எனக் கூறும் நூல் – அகநானூறு.

“பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி”

“கறங்கு இசை விழவின் உறந்தை”

“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமாவியல் நகர்க் கருவூர் முள் துறை”

“வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி”

“கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த”

அகம் + நான்கு + நூறு = அகநானூறு

அகநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400

பாலை – 200
குறிஞ்சி – 80
முல்லை – 40
மருதம் – 40
நெய்தல் – 40
மொத்தம் = 400

பாடல் பாடியோர் – 145

மூன்று பிரிவுகளை கொண்டது
1..களிற்றியானைநிரை – 120
2. மணிமிடைபவளம் – 180
3. நித்திலக்கோவை – 100

3 அடிச் சிறுமையும் 31 அடிப் பெருமையுங் கொண்ட அகப்பொருள் சார்ந்த 400 அகவற்பாக்களால்  தொகுக்கப்பெற்ற தொகை நூலாகும்.

தொகுத்தவர் – மதுரை உப்பூரிகுடிகிழார்மகனார் உருத்திரசன்மர்.

தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.

பல்வேறு காலங்களில் புலவர் பலரால் இயற்றப்பெற்று, மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மரால் தொகுக்கப்பட்டது.

‘நெடுந்தொகை’  ‘நெடுந்தொகை நானூறு’ என்று அழைக்கப்படும் நூல் அகநானூறு.

சொல்லவந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடலின் சிறப்பு.

அகநானூற்றுப் பாடலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.

“பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு” எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் & ஆசிரியர் அகநானூறு & வீரை வெளியன் தித்தனார்.

அகநானூறு

உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஔ்எரி மருங்கு அறிந்து ஒய்ய,
– மருதன் இளநாகனார்

அகநானூறு

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,
இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே
– அம்மூவனார்

திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டில் கணவன் சேர்ந்து வாழ்வது பாரதி பற்றி அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment