TNPSC Group 4 Study Material Syllabus Wise & Prep Guide 2026

TNPSC Group 4 Study Material Syllabus Wise & Prep Guide

Best TNPSC Group 4 Study Material Syllabus Wise & Prep Guide

Finding the right tnpsc group 4 study material syllabus wise is the first step toward securing a government post in 2026.

Our team provides this comprehensive resource to ensure every aspirant has access to high-quality notes for their journey.

Many candidates achieve better results by combining this tnpsc group 4 study material syllabus wise with professional Online Coaching.

Expert guidance helps in understanding the complex nuances of the recruitment cycle and the latest examination patterns.

Our researchers curate the tnpsc group 4 study material syllabus wise to match the highest standards of competitive training.

We focus on accuracy and depth to support your career development goals through this tnpsc group 4 study material syllabus wise portal.

Below, you will find the tnpsc group 4 study material syllabus wise modules organized for easy navigation and efficient learning.

முக்கிய அறிவிப்பு

⇒Note: 2025 நடை பெற்ற தேர்வின்படி கேட்கப்பட்டிருந்த 30- 40 வினாக்கள் பழைய புத்தகத்திலும் மற்றும் வெளியில் இருந்தும் கேட்கப்படுகிறது. இது மதிப்பெண்களை குறைப்பதற்கு மட்டுமே.

பகுதி இ : தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (SSLC Standard – 100 Questions)

அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:
1. பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
2. சந்திப்பிழை
3. குறில், நெடில் வேறுபாடு
4. லகர, ளகர, ழகர வேறுபாடு
5. னகர, ணகர வேறுபாடு
6. ரகர, றகர வேறுபாடு
7. இனவெழுத்துகள் அறிதல்
8. சுட்டு எழுத்துகள்
9. வினா எழுத்துகள்
10. ஒருமை பன்மை அறிதல்
சொல்:
1. வேர்ச்சொல் அறிதல்
2. வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்
3. பெயரெச்சம் வகை அறிதல்
4. அயற்சொல் – தமிழ்ச்சொல்
5. எதிர்ச்சொல்– (ம) வினைச்சொல்
6. எழுத்துப் பிழை, (ம) ஒற்றுப்பிழை அறிதல்
7. இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)
(i)
1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் (Repeated from – எதிர்ச்சொல்)
2. ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல்
3. ஒருபொருள் தரும் பல சொற்கள்
4. பொருந்தா சொல்லைக் கண்டறிதல்
5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
6. ஒருபொருள் பன்மொழி
7. இருபொருள் குறிக்கும் சொற்கள்
8. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
9. சொல்லும் பொருளும் அறிதல்
10. ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல். (Repeated from – ஒரு பொருள் தரும் பல சொற்கள்)
(ii)
1. கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) – வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்);
2. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் (எ.கா.) ஊடகம் தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) (சமூகம் – மக்கள் குழு, மக்கள் குழு – கூட்டம்) (Repeated from – சொல்லும் பொருளும்)
3. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை மயிலாப்பூர் – மயிலை
4. பிழை திருத்துக. (எ.கா) ஒரு – ஓர்
5. பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி.
(iii)
1. பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது;
2. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் மற்றும் அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்
3. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன் – தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்.
4. பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ-பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ – நெருப்பு (Repeated – ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை கண்டறிதல்)
5. பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக. (எ.கா) கமலம், கஞ்சம் முளரி, பங்கயம் – இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும். (Repeated from – ஒரு பொருள் தரும் பல சொற்கள்)

அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)
(i)
1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்
2. தொடர் வகைகள்
3. செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல். (Repeated from – பிழை திருத்துக)
(ii)
1. மரபுத் தமிழ்: திணை மரபு உயர்திணை: அம்மா வந்தது அம்மா வந்தாள்; அஃறிணை மாடுகள் நனைந்தது மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர். ஒன்றன் பால்: அது வந்தன அது வந்தது. பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன; காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் நேற்று வந்தேன்; இளமைப் பெயர்: பசு – கன்று: ஆடு குட்டி, ஒலிமரபு: நாய் கத்தியது நாய் குரைத்தது; வினைமரபு: கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை;
2. நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.

அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் (உதாரணம்: search engine தேடு பொறி, வலசை Migration, ஒவ்வாமை Allergy, மரபணு Gene, கடல் மைல் – Nautical மைல்).

அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)
1. கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் 
2. செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன்
3. உவமைத் தொடரின் பொருளறிதல்
4. மரபுத் தொடரின் பொருளறிதல்
5. பழமொழிகள் பொருளறிதல் 
6. ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.

அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)
1. ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் 
2. பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) – (Repeated from – கலைச் சொற்கள்)
3. ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் – கடிதங்கள் – மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
1. திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்) ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை –  மேற்கோள்கள்)
2. அறநூல் தொடர்பான செய்திகள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது (Not found), சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்).
3. தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
4. உ.வே சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள். (Not found)
5. தேவநேய பாவாணர், அகரமுதலி (Not found), பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்.
6. தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர்,  டி.கே.சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.

பொது அறிவு (75 கேள்விகள்), திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (25 கேள்விகள்) மற்றும் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (100 கேள்விகள்) அடங்கிய ஒரு தாள்!

பகுதி அ: பொது அறிவு (பத்தாம் வகுப்புத் தரம்)

அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)
பேரண்டத்தின் இயல்பு இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்; தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்; உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம். மனித நோய்கள்; சுற்றுப்புறச் சூழல் அறிவியல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு II: புவியியல் (5 கேள்விகள்)
புவி அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்; போக்குவரத்து – தகவல் தொடர்பு; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்; பேரிடர் – பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)
சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு; தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி ஆர் அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்; தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள்; இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.

அலகு IV: இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்; ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்; கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்; தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி; பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்; தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்; வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – பம் மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி; பொருளாதார போக்குகள்; வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை; சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்; தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்; தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்; நலன்சார் அரசுத் திட்டங்கள்; தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள்; நடப்பு நிகழ்வுகள்.

அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்; திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை – மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு – திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்; விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு; தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.

பகுதி ஆ: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் 25 கேள்விகள்)

அலகு : திறனறிவு (15 கேள்விகள்)
சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெரு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM); விகிதம் மற்றும் விகிதாச்சாரம்; தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.

அலகு II: காரணவியல் (10 கேள்விகள்)
தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.

Preparation Tips for Aspirants

To master the tnpsc group 4 study material syllabus wise, you should first analyze the previous year's question papers.

This helps in identifying which sections of the tnpsc group 4 study material syllabus wise require more focus and training.

Consistent revision of the tnpsc group 4 study material syllabus wise is key to retaining complex information.

We recommend setting a daily schedule that includes Online Coaching insights to improve your speed and accuracy.

Frequently Asked Questions (FAQ)

  1. Is this tnpsc group 4 study material syllabus wise updated for 2026?
    Yes, our team ensures that every module in the tnpsc group 4 study material syllabus wise is cross-verified with the latest data.
  2. Can I use this tnpsc group 4 study material syllabus wise for VAO exams?
    Absolutely. The tnpsc group 4 study material syllabus wise covers the combined civil services patterns for both Group 4 and VAO.
  3. Do I need Online Coaching along with these notes?
    While this tnpsc group 4 study material syllabus wise is comprehensive, expert guidance can provide additional strategies.

For official updates, visit the Official TNPSC Website or check the Commission Overview on Wikipedia.

Stay connected with our portal for more updates on the tnpsc group 4 study material syllabus wise and preparation strategies.