திரிகடுகம் – சிறப்பு தொகுப்பு
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடங்களில் இருந்து அனைத்து திரிகடுகம் பாடப்பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இது உங்கள் Smart Study முறைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
திரிகடுகம் – நல்லாதனார்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் – தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.
நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
1. திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.
2. இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.
3. இவரைச் ‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப் பாயிரம் குறிப்பிடுவதனால், இவர் ஒரு போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
4. திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
5. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 வெண்பாக்களை உடையது.
6. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்.
7. இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும். இதனைப் போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம்பெற்றுள்ள மூன்று அறக்கருத்துகளும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்தும்.
8. திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும்.
தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிகட்கும் தலைமையாக உள்ள தகுதியும், அவற்றிலும் மிக்க மேன்மை உடையதுமான மொழியே உயர்தனிச் செம்மொழி. இவ்விலக்கண அடிப்படையை ஆராயுமிடத்துத் தமிழ்மொழியானது தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும், அவற்றினும் மிக்க மேன்மையும் உடையதாகையால் உயர்மொழியாகத் திகழ்கிறது. தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல மொழியே தனிமொழி எனப்படும். திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி, புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம்.
– பரிதிமாற் கலைஞர்
கூடுதல் தகவல்கள்
திரிகடுகம் என்னும் சொல் திரி + கடுகம் எனப் பிரியும். ‘திரி’ என்றால் மூன்று, ‘கடுகம்’ என்றால் கார்ப்புத் தன்மையுள்ள மருந்துப் பொருள். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் எவ்வாறு உடலின் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றையும் சரி செய்து நோயைத் தீர்க்கின்றனவோ, அதுபோல இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள மூன்று நீதிகள் மனத்தூய்மைக்கு வழிவகுக்கின்றன. “முறை செய்யான் பெற்ற தலைமை” என்பது நீதி தவறிய மன்னனின் ஆட்சி வீணானது என்பதை உணர்த்துகிறது. தூயவர்கள் என்று யாரைச் சொல்லலாம் என்பதற்கு நல்லாதனார் தரும் விளக்கம் மிகவும் உயர்வானது. உடல் சுருங்கி முதுமை எய்தினாலும், சான்றாண்மை எனப்படும் நற்பண்பு குறையாமல் இருப்பதே தூயவர் செய்கை என்கிறார் கவிஞர்.
வினா விடைகள்
1. திரிகடுகம் நூலில் இடம்பெற்றுள்ள மருந்துப் பொருள்கள் யாவை?
அ) ஏலம், இலவங்கம், சுக்கு
ஆ) சுக்கு, மிளகு, திப்பிலி
இ) சுக்கு, மிளகு, கடுகு
ஈ) திப்பிலி, ஏலம், சுக்கு
உ) விடை தெரியவில்லை
விடை: ஆ) சுக்கு, மிளகு, திப்பிலி
2. “செருஅடுதோள் நல்லாதன்” என்னும் குறிப்பு எதனைக் காட்டுகிறது?
அ) அவர் ஒரு மருத்துவர்
ஆ) அவர் ஒரு அரசர்
இ) அவர் ஒரு போர்வீரர்
ஈ) அவர் ஒரு வணிகர்
உ) விடை தெரியவில்லை
விடை: இ) அவர் ஒரு போர்வீரர்
3. திரிகடுகம் நூலில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?
அ) 80
ஆ) 90
இ) 100
ஈ) 102
உ) விடை தெரியவில்லை
விடை: இ) 100
4. “தூற்றின்கண் தூவிய வித்து” என நல்லாதனார் எதனைக் குறிப்பிடுகிறார்?
அ) முறை தவறிய தலைமை
ஆ) ஒழுக்கம் இல்லாதவன் பெற்ற அழகு
இ) நெஞ்சில் உறுதி இல்லாதவன் செய்யும் தவம்
ஈ) இவை அனைத்தும்
உ) விடை தெரியவில்லை
விடை: ஈ) இவை அனைத்தும்
5. திரிகடுகம் ஆசிரியர் பிறந்த ஊர் எது எனக் கருதப்படுகிறது?
அ) கடியலூர்
ஆ) திருத்து
இ) உத்தமதானபுரம்
ஈ) சிறுகூடல்பட்டி
உ) விடை தெரியவில்லை
விடை: ஆ) திருத்து
சங்க இலக்கியத்திற்குப் பின் வந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்வியலுக்குத் தேவையான அறங்களை எளிய முறையில் போதிக்கின்றன. திரிகடுகம் போன்ற நூல்கள் மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், தெளிவான சிந்தனையைப் பெறவும் பெரும் துணையாக நிற்கின்றன.
சரியான திட்டமிடல் மற்றும் இந்த Online Guidance மூலம் நீங்கள் வரும் அரசுத் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும்.
Most Useful Links
• Updated TNPSC Group 4 Study Material Syllabus Wise & Preparation Guide
