ஏலாதி – சிறப்பு தொகுப்பு
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடங்களில் இருந்து அனைத்து ஏலாதி பாடப்பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இது உங்கள் Smart Study முறைக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

ஏலாதி – கணிமேதாவியார்
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து,– கணிமேதாவியார்
1. ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
2. இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
3. இவர், சமண சமயத்தவர் என்பர்.
4. இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
5. இவர் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு.
6. இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
8. இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
9. நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
10. இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
11. ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
12. இம்மருந்து, உண்ணuபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நூலின் நற்கருத்துகள் கற்போரின் அறியாமையை அகற்றும். இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல், நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.
13. மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி.
கூடுதல் தகவல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருந்துப் பெயரால் அமைந்த நூல்கள் மூன்று. அவை திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகும். ஏலாதி என்னும் பெயர் ஏலம் + ஆதி என்பதன் சேர்க்கையாகும். ஏலத்தை முதன்மையாகக் கொண்ட ஆறு மருந்துப் பொருள்கள் இதில் கூறப்படுகின்றன. இதேபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்கள் கூறப்படுவது இதன் தனிச்சிறப்பு. கணிமேதாவியார் எழுதிய மற்றொரு நூலான திணைமாலை நூற்றைம்பது அகப்பொருள் சார்ந்த நூலாகும். சமண சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், உலகியல் வாழ்விற்குத் தேவையான அனைத்து அறங்களையும் பொதுவான நோக்கில் வழங்கியுள்ளார். ஏலாதி நூலின் கருத்துக்கள் மனிதனின் மனநோயாகிய அறியாமையை நீக்கி, அறிவை வளர்க்கும் வல்லமை கொண்டவை.
வினா விடைகள்
1. ஏலாதி நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் எத்தனை அறக்கருத்துகளைக் கூறுகின்றன?
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
உ) விடை தெரியவில்லை
விடை: ஈ) ஆறு
2. கணிமேதாவியார் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது?
அ) பௌத்தம்
ஆ) சமணம்
இ) சைவம்
ஈ) வைணவம்
உ) விடை தெரியவில்லை
விடை: ஆ) சமணம்
3. ஏலாதி நூலில் பாயிரம் உட்பட மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
அ) 80
ஆ) 81
இ) 150
ஈ) 100
உ) விடை தெரியவில்லை
விடை: ஆ) 81
4. கணிமேதாவியார் இயற்றிய மற்றொரு நூல் எது?
அ) கார் நாற்பது
ஆ) திணைமாலை நூற்றைம்பது
இ) ஐந்திணை எழுபது
ஈ) திரிகடுகம்
உ) விடை தெரியவில்லை
விடை: ஆ) திணைமாலை நூற்றைம்பது
5. ஏலாதி மருந்துப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது எது?
அ) சுக்கு
ஆ) மிளகு
இ) ஏலம்
ஈ) திப்பிலி
உ) விடை தெரியவில்லை
விடை: இ) ஏலம்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் சமுதாயத்திற்குத் தேவையான நீதிகளை வலியுறுத்துகின்றன. அவற்றுள் ஏலாதி மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த அறநூலாகும். உடலுக்கு மருந்து எவ்வாறு தேவையோ, அதுபோல உள்ளத்திற்கு ஏலாதி போன்ற அறநூல்கள் அவசியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
சரியான திட்டமிடல் மற்றும் இந்த Online Guidance மூலம் நீங்கள் வரும் அரசுத் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும்.
Most Useful Links
• Updated TNPSC Group 4 Study Material Syllabus Wise & Preparation Guide