செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன்

செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் IV. விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது? உலக புத்தக நாள் 2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது? இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது? 11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை) … Read more

உவமைத் தொடரின் பொருளறிதல்

உவமைத் தொடரின் பொருளறிதல் – இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால் விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேள்விகள் கேட்கப்படும். தாமரை இலை நீர்போல பட்டும் படாமல் இருத்தல்/ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல். மழைமுகம் காணாப் பயிர்போல வறட்சி வாட்டம் – துன்பம் கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாப்பு சிலை மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும் கிணற்றுத்தவளைபோல உலகம் தெரியாமல் இருப்பது/அறியாமை எலியும் பூனையும் போல எதிரிகள்/பகைவர்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரியான வழிகாட்டி … Read more

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் கவனி : தேர்வில் ஒரு வினா மட்டுமே கேட்கப்படும். பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. 1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் … Read more

நிறுத்தல் குறியீடுகள்

நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்): எழுத்து என்பது மொழியின் வரிவடிவம், எழுதியதைத் தெளிவாகப் பொருளுணர நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்) இன்றியமையாதவை ஆகும். காற்புள்ளி ( , ) நிறுத்தி வாசிக்கக் குறிப்பிடப்படும். பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும். •  அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு. •  நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும். •  இனியன் நன்கு படித்தான்; … Read more

மரபுத் தமிழ்

மரபுத் தமிழ் •  திணை மரபு•  பால் மரபு•  இளமைப் பெயர்•  ஒலிமரபு•  வினைமரப•  தொகை மரபு இளமை மரபுச்சொற்கள் தாவரங்கள் : காய்களின் இளமை மரபுஅவரைப்பிஞ்சுவெள்ளரிப்பிஞ்சுகத்தரிப்பிஞ்சுதென்னங்குரும்பைவாழைக்கச்சல்மாவடு விலங்குகள்: இளமை மரபுகுருவிக்குஞ்சுகழுதைக்குட்டிமான்கன்றுசிங்கக்குருளைகோழிக்குஞ்சுஎருமைக்கன்றுநாய்க்குட்டிபுலிப்பறழ்ஆட்டுக்குட்டிபன்றிக்குட்டிபூனைக்குட்டிகீரிப்பிள்ளை ஒலி மரபுச்சொற்கள்குயில் கூவும்கிளி கொஞ்சும்சிங்கம் முழங்கும்மயில் அகவும்கூகை குழறும்நரி ஊளையிடும்காகம் கரையும்குதிரை கனைக்கும்யானை பிளிறும் வினைமரபுச்சொற்கள்அப்பம் தின்நெல் தூற்றுநீர் பாய்ச்சுகாய்கறி அரிகளை பறிபாட்டுப் பாடுஇலை பறிபழம் தின்மலர் கொய் பயிற்சி : பொருத்துக.1. காகம் – கூவும்2. குதிரை – கரையும்3. சிங்கம் – … Read more

தொடர் வகைகள்

தொடர் வகைகள் தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும். 1. செய்தித் தொடர் ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும். (எ.கா.) கரிகாலன் கல்லணையைக் கட்டினான். 2. வினாத்தொடர் ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும் (எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? 3. விழைவுத் தொடர் ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும். (எ.கா.)•   இளமையில் கல் – (ஏவல்)•   உன் … Read more

பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக

பல பொருள்  ஒரு சொல் கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம். காடு புணரி, ஆழி, சாகரம், சமுத்திரம், பெளவம், வேலை, முந்நீர், நீராழி, பெருநீர் கடல்  கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, … Read more

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல்

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு)  எ. கா:  •  நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன். •  மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். •  தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம் (Related Topic Covered In Samacheer Books given below) சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக. (எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும்) 1. காயிதே மில்லத் … Read more

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் (மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல. இருப்பினும், எனினும், இதனால்) Related Topic Covered in Books (This Syllabus Not Available in Samcheer Books) இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக (நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்) விண்மீன் மணிமாலை நீதிநூல் விண்வெளி தமிழ்மாலை கண்மணி எழுதுகோல் தமிழ்மொழி தமிழ்நூல் நீதிமொழி விண்மீன் … Read more

பேச்சு வழக்கு தொடர்களிலுள்ள பிழை திருத்தம்

பேச்சு வழக்கு தொடர்களிலுள்ள பிழை திருத்தம் •   கண்மாய் – கம்மாய்•   உறைக்கிணறு – ஊரணி பேச்சு வழக்கு  எழுத்து வழக்கு (தமிழ் சொல்) தம்பீ? எங்க நிக்கிறே? தம்பி எங்கே நிற்கிறாய்? நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது. நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன் அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் … Read more