திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

திருக்குறள் 6th to 12th Old and New book (+ Sirappu Tamil 11th and 12th Old and New Book)

1. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

2. இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

3. இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

4. இவர் நாயனார், முதற்பாவலர், நான்முகனார். மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், தெய்வப்புலவர், என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

5. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”.- பாரதியார்.

6. “வள்ளுவனைப் பெற்றதாய் பெற்றதே புகழ் வையகமே” – பாரதிதாசன்.

7. திரு + குறள் = திருக்குறள். திரு – செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத் தன்மை எனப் பல பொருள் கொண்ட ஒருசொல், குறள் – குறுகிய அடிகளை உடையது. ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது – திருக்குறள்.

8. குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் – திருக்குறள்.

9. இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் |திருக்குறள் என வழங்கப்பெறுகிறது.

10. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் (மூன்று) பிரிவுகளைக் கொண்டது.(மேலே உள்ள box- யை படிக்கவும் )

11. இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.

12. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர்.

13. திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் ‘உலகப் பொதுமறை’ என வழங்கப்பெறுகிறது.

14. இது, தமிழ்மொழி யிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது.

15. இந்நூல் நூற்றேழு (107) மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.

16. திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

17. மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் திருக்குறள்.

19. உடலை நீர் தூய்மை செய்யும்; உள்ளத் தூய்மையை வெளிப்படுத்துவது வாய்மை

20. வாய்மை எனப்படுவது யாதெனில் மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

21. கோடிட்ட இடங்களை நிரப்புக 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்


22
. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை

கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.

எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044

(கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)

23. கோடிட்ட இடத்தை நிரப்புக

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

24. மாறியுள்ள குறளை முறைப்படுத்தி எழுதுக

அ. எண்என்ப எழுத்தென்ப ஏனை கண்என்ப
இவ்விரண்டும் வாழும் உயிர்க்கு?
Ans: எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
ஆ. தொட்டனைத்து மணற்கேணி வஊறும் மாந்தர்க்குக்
கற்றனைத்து அறிவு ஊறும்.?
Ans: தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு

25. குறன் வெண்பாக்களால் ஆனதால், “குறள்” எனவும், மேன்மை கருதித் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் ‘திருக்குறள்’ எனவும் வழங்கப்பெறுகிறது. நாடு, மொழி, இனம், சமயம் எல்லாம் கடந்து எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்தமையால், இஃது ‘உலகப்பொதுமறை’ எனப் போற்றப்படுகிறது.

26. மக்கள், வாழ்வில் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகிய அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் விரித்து உரைப்பது திருக்குறள். எனவே, இந்நூல் ‘முப்பால்’ எனவும் பெயர் பெற்றது.

27. வாயுறை வாழ்ந்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்ய நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு. இதன் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜி, போப் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர்.

28.  திருவள்ளுவமாலை என்னும் நூல், இதன்பெருமைக்கும் சிறப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது.

29. உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள வுங்கப் பாதுவாப்பும் பெட்டகத்தில் திருக்குறளும் இடப்பெற்றுள்ளது.

30. இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

31. கோடிட்ட இடத்தை நிரப்புக
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

“நிறைநீர நீரவர் கேண்மை” இத்தொடரில் நட்பு என்னும் பொருள் தரும் சொல் – கேண்மை

32. பொருளுணர்ந்து பொருத்து
பேதையார் நட்பு – தேய்பிறை போன்றது.
பண்புடையாளர் தொடர்பு – நவில்தொறும் நூல்நயம் போன்றது.
அறிவுடையார் நட்பு – வளர்பிறை போன்றது
இடுக்கண் களையும் நட்பு – உடுக்கை இழந்தவர் கை போன்றது.

33. “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு”.  இக்குறளைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டும்; இதன் பொருளோ இறைவனைப் பற்றி நிற்கும்.

34. அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வந்த குறள் – அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.

35. முறைமாறிய அடிகளை முறைப்படுத்தி எழுதுக.
பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி?
Ans: நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

36. திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் (10 பேர்) உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர் தமிழ்ச் சான்றோர்.

37. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் (10):

  1. தருமர்
  2. மணக்குடவர்
  3. தாமத்தர்
  4. நச்சர்
  5. பரிதி
  6. பரிமேலழகர்
  7. திருமலையர்
  8. மல்லர்
  9. பரிப்பெருமாள்
  10. காளிங்கர்

38. இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் – திருக்குறள்

39. கோடிட்ட இடத்தில் உரிய எழுத்தைக்கொண்டு நிரப்புக

இகழ்வார்ப் பொறுத்தல் தலை (லை/ளை)
றுத்தார்க்கு ஒருநாளை இன்பம் (ரு/று )

40. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக.
இறப்பினை என்றும் பொறுத்தல் அதனினும்
நன்று மறத்தல் அதனை.
Ans: பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

41. கோடிட்ட இடத்தில் உரிய விடையைத் தேர்ந்தெழுதுக.

செவிக்குணவாவது_____
அ) புகழ்
ஆ) கேள்வி
இ) மகிழ்ச்சி

ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்______
அ) ஊற்றுக்கோல்
ஆ) அளவுகோல்
இ) துலாக்கோல்

42. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்துக
அனைத்தானும் ஆன்ற தரும் பெருமை
நல்லவை எனைத்தானும் கேட்க
Ans: எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

43. உடைமைகள் பத்து. திருக்குறளில் பத்து அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளன.

44. திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது.

45. திருக்குறள் ஏழு சீரால் அமைந்த குறள் வெண்பாக்களைக் கொண்டது.

46. ‘ஏழு’ என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாவில் இடம்பெற்றுள்ளது.

47. அதிகாரங்கள், 133. இதன் கூட்டுத்தொகை ஏழு. மொத்தக் குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகையும் ஏழு.

48. கோடிட்ட இடத்தை நிரப்புக.

நற்குணங்களால் சிறந்திருத்தல் சான்றோர்க்குப் பெருமையாகும்.

தவம் என்பது பிற உயிர்களைக் கொல்லாமை.

தோல்வியை ஒப்புக்கொள்வதே சான்றாண்மையை அளந்தறியும் உரைகல்.

மாற்றார் என்னும் சொல்லின் பொருள் பகைவர்.

தீங்கிழைத்தவர்க்கும் இனியவை செய்தல் வேண்டும்.

49. பொருத்துக.

  1. இன்மை – வறுமை
  2. திண்மை – வலிமை
  3. ஆழி – கடல்
  4. நோன்மை – தவம்

50. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வாண்புகழ் கொண்டத் தமிழ் நாடு”பாரதியார்

51. “வள்ளுவனைப் பெற்றதாய் பெற்றதே புகழ் வையகமே” என்றும், ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும், பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

52. வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் வினைத்த வற்றுள்,
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்விளிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே. பாவேந்தர் பாரதிதாசன்.

53. நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை,முப்
பால், கடுகம், கோலை, பழமொழி, மாமூலம்,
இன்னிலைய, காஞ்சியுடன், ஏலாதி என்பவே,
கைத்நிலைய வாங்கீழ்க் கணக்கு. – பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

54. மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

55. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.

56. தமிழக அரசு, தைத் திங்கள் இரண்டாம் நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது.

57. விடுபட்ட சீர்களை எழுதுக.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

58. “திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள் இல்லாததில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே” — என்று தமிழரை விம்மித முறவைப்பது இத்தெய்வநூல் (திருக்குறள்).

59. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்” — என்று அவ்வையார் இதன் திட்பமும் நுட்பமும் கருதிப் புகழ்ந்துரைத்தார்.

60. தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாராட்டப் பெறுவது? – திருக்குறள்.

61. பொருத்துக
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – வேற்றுமை அணி.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து – தொழிலுவமையணி

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் – பிறிது மொழிதலணி

தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினு மஞ்சப் படும் – சொற்பொருள் பின்வரு நிலையணி

62. கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை அமைத்து எழுதுக.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டம்
சால மிகுத்துப். பெயின்.

63. புறவய வினாக்கள்

குறளும் குறள் வலியுறுத்தும் கருத்தும் எனப் பொருந்திக் காட்டப்பட்டுள்ளன. தவறாகப் பொருந்தியிருப்பதைக் கண்டறிக.

அ. நாடாது நட்டலில் ….. — ஆராயாது நட்புக் கொள்ளலில் வருங்கேடு
ஆ. குணமுங் குடியுங்….. — நட்பாராயும் முறை
இ. மருவுக மாசற்றார்….. — நட்புக் கொள்ளத்தக்கவரும் தள்ளத்தக்கவரும்
ஈ. கேட்டினும் முண்டோ…. — நட்பு கொள்ளத்தகாதவர்

செய்யத்தக்கதையும் செய்யத் தகாததையும் சொல்லும் குறள் எது?

அ. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அள்ளற்கண் ஆற்றறுப்பார் நட்பு
ஆ. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.
இ. மருவுக மாசற்றார் கேண்மை ஒன்(று) ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.
ஈ. நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.

கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல்’ – இக்குறள் வெளிப்படுத்துவது யாது?

அ. நட்பாராயும் முறை
ஆ. நட்பு ஆராயாத போது நேரும் துன்பம்
இ. நட்புக் கொள்ளலாகாதாரின் குணம்
ஈ. நட்பால் பயன்பெறுபவரின் நிலை

ஒன்றை இழப்பதினாலும் நன்மை ஏற்படும் என வள்ளுவர் எதனைக் கூறுகிறார்?

அ. ஆற்றறுப்பார் நட்பு
ஆ. பேதையார் கேண்மை
இ. ஒப்பிலார் நட்பு
ஈ. ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை.

துன்பமும் நமக்கு உதவுவதாகும் என உணர்த்தும் குறள் எது?

அ. அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய வல்லார் நட் பாய்ந்து கொளல்
ஆ. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை உள்ளினு முள்ளஞ் சுடும்.
இ. கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல்
ஈ. உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

கீழுள்ளனவற்றுள் எது ‘ஊதிய மென்ப தொருவற்குப் பேதையர் கேண்மை யொரீஇ விடல்’ எனும் குறட்கருத்துக்கு வலிமை தருகிறது.

அ. ஒருவர் பொறை இருவர் நட்பு
ஆ. தெளிவிலார் நட்பின் பகை நன்று
இ. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஈ. கோடி பெறினும் குன்றுவசெய்யார் பெரியோர்

இரு குறட்பாக்களும் அவற்றைப் பற்றிய முடிவுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. சரியான முடிவைத் தேர்ந்தெடுக்கவும்.

குறள் 1 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்துங்
கொளல் வேண்டும் நட்பு.

குறள் 2 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
உள்ளினு முள்ளஞ் சுடும்.

முடிவு

அ. இரு குறள்களும் ஏற்கத்தக்கவர் யாவர் என்பது பற்றிக் கூறுகின்றன.
ஆ. இரு குறள்களும் தவிர்க்கத்தக்கவர் யாவர் என்பது பற்றிக் கூறுகின்றன.
இ. குறள் 1 ஏற்கத்தக்கவர் பற்றியும் குறள் 2 தவிர்க்கத்தக்கவர் யாவர் என்பது பற்றியும் கூறுகின்றன.
ஈ. குறள் 1 தவிர்க்கத்தக்கவர் யாவர் என்பது பற்றியும் குறள் 2 ஏற்கத்தக்கவர் யாவர் என்பது பற்றியும் கூறுகின்றன.

‘சேரிடம் அறிந்து சேர்’ எனும் ஆத்திசூடிக் கருத்தை எதிர்மறையில் உணர்த்தும் திருக்குறள் அடி.

அ. பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
ஆ. இனனும் அறிந்து யாக்கநட்பு
இ. கொடுத்துங் கொளல் வேண்டும் நட்பு
ஈ. கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ்சுடும்.

‘வளி முதலா எண்ணிய மூன்று’ எனும் திருக்குறளில் குறிக்கப்படும் தொகை பெயர்களாகக் கீழே உள்ளன அவற்றுள் பொருந்தாதது எது?

அ. முக்குணம்
ஆ. முப்பிணி
இ. மும்மருந்து
ஈ. முப்பொருள்

நோயுறாதிருக்க உண்ணும் முறையினைத் தெரிவிக்கும் குறள் எது?

அ. உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்
ஆ. அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு
இ. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிக் கெடும்.
ஈ. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து

இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் – இக்குறளிலுள்ள இலக்கிய நயம் யாது?

அ. விதி உவமானம், எதிர்மறை உவமேயம்
ஆ. விதி உவமேயம், எதிர்மறை உவமானம்
இ. உவமானமும் உவமேயமும் வெவ்வேறு கருத்தை வலியுறுத்துகின்றன.
ஈ. உவமானமும் உவமேயமும் ஒரே தகவலைச் சொல்லுகின்றன

நான்கு குறட்பாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றில் பிறரைப் பழிக்கும் குறிப்பு உள்ளது. அது எது?

அ. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.
ஆ. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை.
இ. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா.
ஈ. உள்ளம் போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண்.

“மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவருக்கு ஊற்றுநீர் போல மிகும்”- இக்குறளில் காணப்படும் இலக்கிய நயம் யாது?

அ. இரண்டு எதிர்நிலைச் செயல்களின் விளைவு ஒரே தன்மையாய் இருப்பதை எடுத்துக்காட்டுதல்.
ஆ. இரண்டு எதிர்நிலை செயல்களின் விளைவும் வெவ்வேறு தன்மையானதெனக் காட்டுதல்
இ. இரண்டு எதிர்நிலை விளைவுகளுக்கு ஒரு செயலைக் காட்டுதல்
ஈ. ஒரே தன்மையான செயலால் வெவ்வேறு விளைவுகளை எடுத்துக்காட்டுதல்.

இரண்டு எதிர்நிலைச் செயல்களுக்கான காரணம் (ஏது) ஒன்றே எனக் காட்டும் குறள் எது?

அ. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்.
ஆ. கரத்தலு மாற்றேனிந் நோயை செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்.
இ. காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து
ஈ. இன்பங் கடல் மற்றுக் காம மஃதடுங்கால் துன்ப மதனிற் பெரிது.

காமமு நாணு முயிர்காவாத் தூங்குமென்’ இவ்வடியை விளக்கும் பொருத்தமான வரைவுக் குறிப்பு எது?

அ. செயல் இரண்டு —  விளைவு ஒன்று
ஆ. செயல் ஒன்று — விளைவு இரண்டு
இ. பொருள் இரண்டு — செயல் ஒன்று
ஈ. செயல் இரண்டு — விளைவு இரண்டு

கீழுள்ள குறட்பாவில் எத்தகைய குறிப்பு உள்ளது?

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

அ. தோழி தலைவிக்கு உதவாமை
ஆ. தலைவி தோழிக்கு உதவாமை
இ. தலைவன் தலைவிக்கு உதவாமை
ஈ. தலைவி தலைவனுக்கு உதவாமை

காமநோயுற்ற தலைவி தன்னைத் தானே தேற்றிக் கொள்வதாக அமையும் குறள் எது?

அ. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.
ஆ இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
இ. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை.
ஈ. உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.

“கொடியார் கொடுமையிற் றாங்கொடிய விந்நாள் நெடிய கழியு மிரா” தலைவியின் எத்தகு செயல் இக்குறளில் வெளிப்படுகிறது.

அ. துன்பத்தால் இயற்கையைப் பழித்தல்
ஆ. இன்ப நினைவால் துன்ப நினைவை மறத்தல்
இ. தன்னைத்தானே தேற்றிக் கொள்ளல்
ஈ. பிறரைக் கடிந்துரைத்தல்

64. திருக்குறளுக்கு வழங்கும் வேறுபெயர்கள்  : 1. முப்பானூல், 2. உத்தரவேதம், 3. தெய்வநூல், 4. திருவள்ளுவம், 5. பொய்யாமொழி, 6. வாயுறை வாழ்த்து, 7. தமிழ்மறை, 8. பொதுமறை, 9. உலகப் பொதுமறை, 10. முதுமொழி.

65. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் : 1. நாயனார், 2. தேவர், 3. தெய்வப் புலவர், 4. நான்முகனார், 5. மாதானுபங்கி 6. செந்நாப்போதார், 7. பெருநாவலர், 8. புலவர், 9. பொய்யில் புலவர் முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

66. “என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றவர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – இறையனார்.

67. பின்வருவனவற்றுள் பயின்று வந்துள்ள அணியை கண்டுபிடி:

உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. – சொற்பொருட்பின்வருநிலையணி

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. – உவமையணி

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை – எடுத்துக்காட்டு உவமையணி

68. கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை அமைத்து எழுதுக:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

69. திருக்குறளின் பெருமை கேளீர்!

தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – கபிலர்

வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து – பரணர்

“உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு” — மாங்குடி மருதனார்

“பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து” — தேனிக்குடி கீரனார்

“புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன் – வித்தகன் தெய்வப் புலவர் திருவள் ளுவர்சொன்ன பொய்யில் மொழிஇருக்கும் போது” — கவிமணி

“செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்” — கவிமணி

“நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஒதித்தொழுது எழுக ஒர்ந்து” — கவிமணி

திருக்குறள் உலகம் போற்றும் பெருநூல். எந்நாட்டினரும், எக்கொள்கையினரும் விரும்பும் அறிவுக் களஞ்சியம்.

“பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ?” என்று திருவள்ளுவமாலை போற்றுகிறது.

12th tamil Tirukural

70. மாறியிருப்பவர் யார்?
அ. நான்முகனார்
ஆ நக்கீரர்
இ. செந்நாப் போதார்
ஈ. பெருநாவலர்

71. திருக்குறள் பற்றியதான கீழுள்ள கூறுகளுள் எது சரி?
அ. அறத்துப்பால், காமத்துப்பால் ஆகிய இரண்டுமே புலவர் கூற்றாக
உள்ளன. அறத்துப்பால், காமத்துப்பால் ஆகிய இரண்டுமே கதைமாந்தர் கூற்றாக உள்ளன.
ஆ. அறத்துப்பால் புலவர் கூற்றாகவும் காமத்துப்பால் கதை மாந்தர் கூற்றாகவும் உள்ளன.
இ. அறத்துப்பால் கதைமாந்தர் கூற்றாகவும் காமத்துப்பால் புலவர் கூற்றாகவும் உள்ளன.

72. கீழுள்ள எதனிலிருந்து தி.பி. ஆண்டு கணக்கிடப்படுகிறது?
அ)100
ஆ) கி.பி. 31
இ) கி.மு.33
ஈ) கி.மு 31

73. ஆகுபெயர் உள்ள பாடலடி எது?
அ) ஒழுக்கம் உடைமை குடிமை
ஆ) ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்
இ) அழுக்காறு உடையான்கண் ஆக்கம்
ஈ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

74. உள்ளதன் பெருமையும் இல்லதன் சிறுமையும் உணர்த்தும் குறள் எது?
அ. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
ஆ. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு
இ. ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்
ஈ. உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.

75. “ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து” – இக்குறள் ஒழுக்கத்தின் எந்நிலையை உணர்த்துகிறது.

அ. சிறப்பு ஆ. வரையறை இ. பயன் ஈ. செயல்

76. கீழுள்ள குறள்களுள் எது ஒழுக்கத்தின் தன்மையினைக் கூறுகிறது?
அ. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
ஆ. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.
இ. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
ஈ. இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்ற(து) உணர விரித்துரையா தார்.

77. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோர் இடத்துண்மை யான். -இக்குறளில் யாருடைய தேற்றம் குறிக்கப்படுகிறது?
அ. அறிவைப் பெற்றவர்கள்
ஆ. அறிந்தவர்கள்
இ. தெளிவு பெற்றவர்கள்
ஈ. பிரிந்தவர்கள்

78. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்

79. தேறியார்க் குண்டோ தவறு?- இதனுள் படர்க்கையில் குறிக்கப்பெறுபவர் யார்?
அ. தலைவன் ஆ. தலைவி இ. தோழி ஈ. வேறொருவர்

இன்னாதி னன்இல்ஊர் வாழ்தல்; அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு – இதனுள் தோழியைக் குறிப்பால் உணர்த்தும் சொல் எது?
அ. இனன் ஆ.ஊர் இ.இனியார் ஈ. இல்ஊர்

காதல் தலைவியின் எண்ணத்தை எதிர்மறுப்பதாக அமையும் குறள் எது?
அ. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோர் இடத்துண்மை யான்.
ஆ. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு
இ. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்; மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.
ஈ. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.

80. துறைவன் துறந்தமை தூற்றாகொன் முன்கை இறைஇறவா நின்ற வளை? – இக்குறளின் தலைவியின் உள்ள இயல்பு எத்தகையதாகக் காணப்படுகிறது.
அ. தலைவனைப் பழித்தல்
ஆ. தன்னைத் தேற்றல்
இ. தோழியொடு புலத்தல்
ஈ. தலைவனொடு புலத்தல்

81. அளித்தஞ்சல் என்றவர் தீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு – இக்குறளின் பொருளை அறிந்து கீழுள்ள கூற்றுகளுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
அ. அளித்தஞ்சல், தெளித்தசொல் ஆகியன இரண்டும் தலைவனுக்குரியனவாகும்.
ஆ. அளித்தஞ்சல் தலைவனும் தெளித்த சொல் தலைவிக்கும் உரியன
இ. அளித்தஞ்சல் தலைவிக்கும் தெளித்த சொல் தலைவனுக்கும் உரியன.
ஈ. அளித்தஞ்சல், தெளித்த சொல் ஆகிய இரண்டும் தலைவிக்கு உரியன.

82. கீழுள்ள எக்குறளில் ஒரே சொல் மாறுபட்ட இருபொருளில் வந்துள்ளது.
அ. இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும் இன்னா தினியார் பிரிவு
ஆ. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடர் ஆற்றுமோ தீ
இ. அரிதாற்றி அல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வோர் பலர்
ஈ. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு.

83. மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம்; வாழ்வில் பின்பற்றுவோம்.

84. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.

85. “திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.

86. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.

87. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

88. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
அ) ஊக்கமின்மை.
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ. சிறிய செயல்

ஒருவர்க்குச் சிறந்த அணி
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்

89. பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.”

90. பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.

“என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்
ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
இ) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

91. உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தியவர் திருவள்ளுவர்

92. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால்
இ) நாம் நன்கு வரவேற்றால்
ஆ) நம் வீடு மாறினால்
ஈ) நம் முகவரி மாறினால்

நிலையான செல்வம்
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்

ஆராயும் அறிவு உடையவர்கள்………. சொற்களைப் பேசமாட்டார்கள்.
அ) உயர்வான
ஆ) விலையற்ற
இ) பயன்தராத
ஈ) பயன் உடைய

93. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம் அசைவுஇலா உடையான் உழை.

விடை: ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.

உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

விடை: உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

“ஊக்கமது கைவிடேல்” என்பது ஔவையாரின் ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

அ. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.

ஆ. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்.

94. பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

“போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். “நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா” என்றான்.

அ. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
ஆ. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
இ. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.

95. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

ஏழைகளுக்கு உதவி செய்வதே……… ஆகும்.
அ) பகை ஆ) ஈகை இ) வறுமை ஈ) கொடுமை

பிற உயிர்களின்…….க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்
அ) மகிழ்வை ஆ) செல்வத்தை
இ) துன்பத்தை
ஈ) பகையை

உள்ளத்தில்……….. இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி
ஆ) மன்னிப்பு
இ) துணிவு
ஈ) குற்றம்

96. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

வறியார்க்கு ஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிர்ப்பை உடைத்து நீரது.

விடை : வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மாணாசெய் தலை யாமை.

விடை: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

97. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” – ஔவையார்

98. மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள்.

99. தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.

100.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

வாய்மை எனப்படுவது……
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்

……….செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்

101. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

……..ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு
ஆ) வயல்
இ) மலை
(ஈ) தெளிந்த நீர்

மக்கள் அனைவரும்……… ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால்
ஆ) நிறத்தால்
இ) குணத்தால்
ஈ) பணத்தால்

102. பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
ஆ. வினையால் வினையாக்கிக் கோடல் தனைகவுள்

யானையால் யானையாத் தற்று. 
இ. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

103. திருக்குறள் நீதிநூல் மட்டுமன்று; அஃது ஒரு வாழ்வியல் நூல்: எக்காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல்.

104. திருக்குறளின் பெருமையை விளக்க, ‘திருவள்ளுவ மாலை’ என்னும் நூல் எழுதப்பட்டிருப்பதே அதற்குச் சான்றாகும்.

105. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

புகழாலும் பழியாலும் அறியப்படுவது
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை

பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்

‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி
அ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி

106. திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

அ. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
விடை : தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்
ஆ. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
விடை: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது.

107. கோடிட்ட இடத்தை நிரப்புக.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

108. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.

விடை : கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்”

109. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அரசரை அவரது……… காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி
ஈ) படை வலிமை

சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ……….. தகுதி அறிந்து பேச வேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்

110.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

ஆண்மையின் கூர்மை…………
அ) வறியவருக்கு உதவுதல்
ஆ) பகைவருக்கு உதவுதல்
இ) நண்பனுக்கு உதவுதல்
ஈ) உறவினருக்கு உதவுதல்

வறுமை வந்த காலத்தில் குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்பம்
ஆ) தூக்கம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்

111. பொருத்துக

இன்பம் தருவது – பண்புடையவர் நட்பு
நட்பு என்பது – சிரித்து மகிழ மட்டுமன்று
பெருமையை அழிப்பது – குன்றிமணியளவு தவறு
பணிவு கொள்ளும் காலம் – செல்வம் மிகுந்த காலம்
பயனின்றி அழிவது – நற்பண்பில்லாதவன் வெற்ற பெருஞ்செல்வம்

112. தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மரால் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்பர்.

113. உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள். தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்.

114. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

பாடல்:
ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்
ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்.
விடை: ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.

115. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்துப் பொருத்துக

பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று  — சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல
தத்தம் கருமமே கட்டளைக்கல் — ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் — அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்.

116. தீரா இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல்
ஆ. குணம், குற்றம்
இ. பெருமை, சிறுமை
ஈ. நாடாமை, பேணாமை

117. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ) நுணங்கிய கேள்வியர் – நுட்பமான கேள்வியறிவு உடையவர்.முகிலன் நுட்பமான கேள்வியறிவு உடையவனாக இருந்தான். அதனால் பெரியோரிடத்துப் பணிவான சொற்களில் பேசுகிறான்.
ஆ) பேணாமை – பாதுகாக்காமை. அப்பாவின் நூலைப் பாதுகாக்காமையால் இனியன் பழைய பேப்பர் வியாபாரியிடம் போட்டுவிட்டான்.
இ) செவிச் செல்வம் – கேட்பதால் பெறும் அறிவு. அறிஞர்களின் அறிவுரைகளைக் கேட்பதால் பெறும் அறிவு தக்க சமயத்தில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு பயன்பட்டது.

118. பொருளுக்கேற்ற அடியைக் கண்டுபிடித்து பொருத்துக.

9th திருக்குறள் book back

ஐந்து சால்புகளில் இரண்டு
அ) வானமும் நாணமும்
ஆ) நாணமும் இணக்கமும்
இ) இணக்கமும் சுணக்கமும்
ஈ) இணக்கமும் பிணக்கமும்

பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

10th tamil tirukural

119. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர்
ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசுஈ) புளிமா தேமா பிறப்பு

120. துன்பப்படுபவர்…….
அ) தீக்காயம் பட்டவர்
ஆ) தீயினால் சுட்டவர்
இ) பொருளைக் காக்காதவர்
ஈ) நாவைக் காக்காதவர்

121. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்
அ) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்
ஆ) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.
இ) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.

122. ஒப்புரவு என்பதன் பொருள்……
அ) அடக்கமுடையது
ஆ) பண்புடையது
இ) ஊருக்கு உதவுவது
ஈ) செல்வமுடையது

123. பொருத்துக
அ) வாழ்பவன் – ஒத்ததறிபவன்
ஆ) வாழாதவன் – இசையொழிந்த வல்
இ) தோன்றுபவன் – புகழ் தரும் பண்புனவன்
ஈ) வெல்ல நினைப்பவன் – காத்திருப்பவன்

124. விரைந்து கெடுபவன் யார்?

அ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.
ஆ) பிறருடன் ஒத்துப் பாகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
இ) பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்.
ஈ) பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்.

125. வேளாண்மை செய்தற் பொருட்டு – பொருள் கூறுக. – உதவி செய்வதற்கே ஆகும்.

126. பற்று தங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது?
அ) பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்
ஆ) பற்றுகள் அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்
இ) பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
ஈ) பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்

127. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………. நினை.
அ) முகக்குறிப்பை அறிந்தவரை
ஆ) எண்ணியதை எண்ணியவரை
இ) மறதியால் கெட்டவர்களை
ஈ) கொல்லேர் உழவரை

128. பொருள் கூறுக.
அ) ஏமம் – பாதுகாப்பு
ஆ) மருந்துழைச் செல்வான் – மருந்தாளுநர்.

129. தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

130. கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி
இ) திணையளவு செய்த உதவி

131.பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் – தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்.

132. பொருள் கூறுக.
Answer:
வெகுளி – கோபம்
புணை – தெப்பம்
ஏமம் – பாதுகாப்பு
திரு – செல்வம்

133. வையகமும் வானகமும் ஆற்றலரிது – எதற்கு?
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) செய்ந்நன்றி

134. பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.
Answer:
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.

135. பொருத்திக் காட்டுக
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி – 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் – 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினாற் செய்த நன்றி – 4. நன்மை கடலின் பெரிது
Answer: ஆ) 3, 4, 1, 2

Leave a Comment