7th Tamil Book Back Solutions Chapter 9.3 கண்ணியமிகு தலைவர்

 பாடம் 9.3 கண்ணியமிகு தலைவர்

Hello, Parents and Students.,

Here we have provided the State Board Solutions Class 7th Tamil Book Back Solutions Chapter 9.3 கண்ணியமிகு தலைவர் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காயிதேமில்லத் ……………………. பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

  1. தண்மை
  2. எளிமை
  3. ஆடம்பரம்
  4. பெருமை

விடை : எளிமை

2. ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் ………….. என்பது பொருள்.

  1. சுற்றுலா வழிகாட்டி
  2. சமுதாய வழிகாட்டி
  3. சிந்தனையாளர்
  4. சட்ட வல்லுநர்

விடை : சமுதாய வழிகாட்டி

3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் …………….. இயக்கத்தில் கலந்து கொண்டார்.

  1. வெள்ளையனே வெளியேறு
  2. உப்புக் காய்ச்சும்
  3. சுதேசி
  4. ஒத்துழையாமை

விடை : ஒத்துழையாமை

4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் …………………..

  1. சட்டமன்றம்
  2. நாடாளுமன்றம்
  3. ஊராட்சி மன்றம்
  4. நகர் மன்றம்

விடை : நாடாளுமன்றம்

5. ’எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….

  1. எதிர் + ரொலித்தது
  2. எதில் + ஒலித்தது
  3. எதிர் + ஒலித்தது
  4. எதி + ரொலித்தது

விடை : எதிர் + ஒலித்தது

6. “முதுமை+மொழி” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..

  1. முதுமொழி
  2. முதுமைமொழி
  3. முதியமொழி
  4. முதல்மொழி

விடை : முதுமொழி

குறு வினா

1. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.

  • நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை இயக்கதத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
  • காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.
  • கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

2. காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.

காயிதே மில்லத் அவர்கள் தன் மகனுக்கு திருமண செய்ய முடிவு செய்தார். பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர். பெண் வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார்

சிறு வினா

ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.

ஆட்சி மொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதே மில்லத் “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன்.

மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப்பழமையான மொழி. அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிந்தனை வினா

நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?

  • தமிழை உலகமொழி ஆக்குவேன்.
  • ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்கு கொண்டு வருவேன்.
  • சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை நீக்குவேன்.
  • இந்திய நதிகளை இணைப்பேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கண்ணியமிகு என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் தலைவர் ……………………….

  1. காந்தியடிகள்
  2. காயிதே மில்லத்
  3. பெரியார்
  4. நேரு

விடை : காயிதே மில்லத்

2. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு ………………

  1. 1962
  2. 1972
  3. 1982
  4. 1992

விடை : 1962

3. காயிதே மில்லத்தின் இயற்பெயர் ……………

  1. முகமது அலி
  2. முகமது ஜின்னா
  3. முகமது மைதீன்
  4. முகமது இசுமாயில்

விடை : முகமது இசுமாயில்

4. காயிதே மில்லத் ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கிய இடம் ………………..

  1. தஞ்சை
  2. திருச்சி
  3. கோவை
  4. மதுரை

விடை : திருச்சி

5. காயிதே மில்லத் ………………..யை “நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

  1. தாய் மொழி
  2. தமிழ் மொழி
  3. ஆங்கில மொழி
  4. உருது மொழி

விடை : தமிழ் மொழி

6. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத்தை புகழந்தவர்.

  1. அறிஞர் அண்ணா
  2. காமராசர்
  3. பெரியார்
  4. ஜவகர்லால் நேரு

விடை : அறிஞர் அண்ணா

7. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் காயிலே மில்லத்தை பாராட்டியவர்

  1. காமராசர்
  2. அறிஞர் அண்ணா
  3. ஜவகர்லால் நேரு
  4. பெரியார்

விடை : பெரியார்

வினாக்கள்

1. காயிதே மில்லத் பற்றி தலைவர்கள் கூறியது யாது?

தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்.

– அறிஞர் அண்ணா

இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்

– தந்தை பெரியார்

2. காயிதே மில்லத் பெயர் வரக் காரணம் யாது?

காயிதே மில்லத் இயற்பெயர் முகமது இசுமாயில். ஆனால் மக்கள் அவரை அன்போடு காயிதே மில்லத் எனறு அழைத்தனர். காயிதே மில்லத் என்னும் அரபு சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்று பொருள். அப்பெயருக்கேற்ப மக்களின் வழிகாட்டியாக திகழ்ந்தானர்

3. ஒருவர் ‘கண்ணியமிகு’ என்னும் அடைமொழியால் எப்போது அழைக்கப்படுகிறார்?

மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் பலர். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கே உரிய தனித்தன்மையான பண்புகளால் முத்திரை பதித்துள்ளனர். எளிமை, நேர்மை, உழைப்பு, பொறுமை, நாட்டுப்பற்று முதலிய பண்புகளை ஒருங்கே கொண்டு சிறந்து விளங்கிய தலைவர் ஒருவர் ‘கண்ணியமிகு’ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுகிறார்.

4. காயிதே மில்லத் அவர்களின் நேர்மைக்கு சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.

காயிதே மில்லத் ஒருமுறை தமது இயக்க அலுவலகத்தில் இருந்த போது அங்கிருந்த பணியாளரை அழைத்தார். அவரிடம் ஓர் உறையையும் பணத்தையும் கொடுத்து, “அஞ்சல்தலை வாங்கி இந்த உறையில் ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுங்கள்“ என்று கூறினார்.

அந்தப் பணியாளர் “ஐயா நம் அலுவலகத்திலேயே அஞ்சல்தலைகள் வாங்கி வைத்துள்ளோம், அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒட்டி விடுகிறேன்“ என்றார். அதற்கு அந்தத் தலைவர், “வேண்டாம். இது நான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது“ என்று கூறினார்

இதுவே  காயிதே மில்லத் அவர்களின் நேர்மைக்கு சான்றாக உள்ள நிகழ்வு ஆகும்.

5. காயிதே மில்லத் அரசியல் பணிகள் யாவை?

  • 1946  முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
  • இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினர்
  • இந்தியா விடுதலை பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினர்
  • மக்களவை உறுப்பினர்