சொல்லும் பொருளும் அறிதல் (ம) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் 6th to 12th Full Notes – Old and New Book

சொல்லும் பொருளும் அறிதல் மற்றும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் 6th to 12th full notes tnpsc tamil

சொல்லும் பொருளும் அறிதல் (ம) பொருத்தமான பொருளை தெரிவு செய்தல் – முழுத் தொகுப்பு

தேர்வுத் தயாரிப்பில் இருக்கும் மாணவர்களுக்காக Samacheer School Book-ல் உள்ள ‘சொல்லும் பொருளும்’ மற்றும் ‘பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்’ குறித்த தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் Online Preparation-க்கு இது ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

 

பாடக்குறிப்புகள் (6th to 12th Book)

ஆறாம் வகுப்பு

1. நிருமித்த – உருவாக்கிய
2. விளைவு – விளைச்சல்
3. சமூகம் – மக்கள் குழு
4. அசதி – சோர்வு
5. சுடர் – ஒளி
6. ஆழிப்பெருக்கு – கடல்கோள்
7. மேதினி – உலகம்
8. ஊழி – நீண்டதொரு காலப்பகுதி
9. உள்ளப்பூட்டு – அறிய விரும்பாமை
10. மெய் – உண்மை
11. வழி – நெறி
12. அகற்றும்ப – விலக்கும்
13. மேன்மை – உயர்வு
14. அறம் – நற்செயல்
15. திங்கள் – நிலவு
16. கொங்கு – மகரந்தம்
17. அலர் – மலர்தல்
18. திகிரி – ஆணைச்சக்கரம்
19. பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
20. மேரு – இமயமலை
21. நாமநீர் – அச்சம் தரும் கடல்
22. அளி – கருணை
23. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
24. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
25. சித்தம் – உள்ளம்.
26. இயன்றவரை – முடிந்தவரை
27. ஒருமித்து – ஒன்றுபட்டு
28. ஔடதம் – மருந்து
29. மாசற – குறைஇல்லாமல்
30. சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
31. தேசம் – நாடு
32. தூற்றும் படி – இகழும் படி
33. மூத்தோர் – பெரியோர்
34. மேதைகள் – அறிஞர்கள்
35. மாற்றார் – மற்றவர்
36. நெறி – வழி
37. வற்றாமல் – அழியாமல்
38. நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
39. ஒப்புரவு – பிறருக்கு உதவி செய்தல்
40. நட்டல் – நட்பு கொள்ளுதல்
41. நந்தவனம் – பூஞ்சோலை
42. பார் – உலகம்
43. பண் – இசை
44. இழைத்து – செய்து
45. மல்லெடுத்த – வலிமைபெற்ற
46. சமர் – போர்
47. நல்கும் – தரும்
48. கழனி – வயல்
49. மறம் – வீரம்
50. எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
51. கலம் – கப்பல்
52. ஆழி – கடல்
53. கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி
54. மின்னல்வரி – மின்னல் கோடுகள்
55. அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்
56. மெய்- உண்மை
57. தேசம் – நாடு
58. தண்டருள் – குளிர்ந்த கருணை
59. கூர் – மிகுதி
60. செம்மையருக்கு – சான்றோருக்கு
61. ஏவல் – தாெண்டு
62. பராபரமே – மேலான பொருள்
63. பணி – தொண்டு
64. எய்தும் – கிடைக்கும்
65. எல்லாரும் – எல்லா மக்களும்
66. அல்லாமல் – அதைத்தவிர
67. சுயம் – தனித்தன்மை
68. உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை
69. அஞ்சினார் – பயந்தனர்
70. கருணை – இரக்கம்
71. வீழும் – விழும்
72. ஆகாது – முடியாது
73. பார் – உலகம்
74. நீள்நிலம் – பரந்த உலகம்
75. முற்றும் – முழுவதும்
76. மாரி – மழை
77. கும்மி – வயிறு
78. பூதலம் – பூமி

ஏழாம் வகுப்பு

1. ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
2. குறி – குறிக்கோள்
3. விரதம் – நோன்பு
4. பொழிகிற – தருகின்ற
5. ஒப்புமை – இணை
6. முகில் – மேகம்
7. அற்புதம் – விந்தை
8. உபகாரி – வள்ளல்
9. ஈன்று – தந்து
10. களித்திட – மகிழ்ந்திட
11. கொம்பு – கிளை
12. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
13. அதிமதுரம் – மிகுந்த சுவை
14. விடுதி – தங்கும் இடம்
15. தீபம் – ஒளி
16. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
17. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்
18. சிற்றில் – சிறு வீடு
19. யாண்டு – எங்கே
20. கல் அளை – கற்குகை
21. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
22. சூரன் – வீரன்
23. வாரணம் – யானை
24. பொக்கிஷம் – செல்வம்
25. பரி – குதிரை
26. சாஸ்தி – மிகுதி
27. சிங்காரம் – அழகு
28. விஸ்தாரம் – பெரும்பரப்பு
29. கமுகு – பாக்கு
30. தேடல் – தூண்
31. சென்னி – உச்சி
32. ஞெகிழி – தீச்சுடர்
33. உரவுநீர் – பெருநீர்பரப்பு
34. அழுவம் – கடல்
35. கரையும் – அழைக்கும்
36. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது
37. உரு – அழகு
38. வங்கம் – கப்பல்
39. போழ – பிளக்க
40. எல் – பகல்
41. வங்கூழ் – காற்று
42. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
43. கோடு உயர் – கடை உயர்ந்த
44. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
45. எத்தனிக்கும் – முயலும்
46. பரிதி – கதிரவன்
47. வெற்பு – மலை
48. அன்னதோர் – அப்படி ஒரு
49. கழனி – வயல்
50. கார்முகில் – மழைமேகம்
51. நிகர – சமம்
52. துயின்றிருந்தோர் – உறங்கியிருந்தார்
53. வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
54. கோட்பா – ஒருவரால் கொள்ளப்படாது
55. வாய்த்து ஈயில் – வாய்க்கும் படி கொடுத்தலும்
56. விச்சை – கல்வி
57. பிரும்மாக்கள் – படைப்பாளர்கள்
58. வனப்பு – அழகு
59. நெடி – நாற்றம்
60. பூரிப்பு – மகிழ்ச்சி
61. மழலை – குழந்தை
62. மேனி – உடல்
63. வண்கீரை – வளமான கீரை
64. பரி – குதிரை
65. முட்டப்போய் – முழுதாகச் சென்று
66. கால் – வாய்க்கால், குதிரையின் கால்
67. மறித்தல் – தடுத்தல்
68. மாரி – மழை
69. வறந்திருந்த – வறண்டிருந்த
70. புகவா – உணவாக
71. मदமகள் – இளமகள்
72. நல்கினாள் – கொடுத்தாள்
73. முன்றில் – வீட்டின் முன் இடம்
74. குழி – நில அளவைப்பெயர்
75. சீலை – புடவை
76. சாண் – நீட்டல் அளவைப்பெயர்
77. மடை – வயலுக்கு நீர் வரும் வழி
78. மணி – முற்றிய நெல்
79. கழலுதல் – உதிர்தல்
80. சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலை துணிச்சுருள்
81. வையம் – உலகம்
82. வெய்ய – வெப்பக்கதிர் வீசும்
83. இடர் ஆழி – துன்பக்கடல்
84. சொல் மாலை – பாமாலை
85. தகளி – அகல்விளக்கு
86. ஞானம் – அறிவு
87. நாரணன – திருமால்
88. ஆர்வம் – விருப்பம்
89. கூடர் – ஒளி
90. வித்து – விதை
91. களை – வேண்டாத செடி
92. ஈன – பெற
93. பைங்கூழ் – பசுமையான பயிர்
94. நிலன் – நிலம்
95. வன்சொல் – கடுஞ்சொல்
96. சாந்தம் – அமைதி
97. தாரணி – உலகம்
98. மகத்துவம் – சிறப்பு
99. தத்துவம் – உண்மை
100. பேதங்கள் – வேறுபாடுகள்
101. இரக்கம் – கருணை

எட்டாம் வகுப்பு

1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வண்மொழி – வளமிக்கமொழி
3. வைப்பு – நிலப்பகுதி
4. இசை – புகழ்
5. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
6. தொல்லை – பழமை, துன்பம்
7. விசும்பு – வானம்
8. மரபு – வழக்கம்
9. மயக்கம் – கலவை
10. திரிதல் – மாறுபடுதல்
11. இருதிணை – உயர்திணை, அஃறிணை
12. செய்யுள் – பாட்டு
13. வழாஅமை – தவறாமை
14. தழாஅல் – தழுவுதல்
15. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
16. தூண்டுதல் – ஆர்வம்கொள்ளுதல்
17. பயிலுதல் – படித்தல்
18. ஈரம் – இரக்கம்
19. நாணம் – வெட்கம்
20. முழவு – இசைக்கருவி
21. செஞ்சொல் – திருந்தியசொல்
22. நன்செய் – நிறைந்தை நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
23. புன்செய் – குறைந்தை நீரொல் பயிர்கள் விளையும் நிலம்
24. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்
25. முகில் – மேகம்
26. வின்னம் – சேதம்
27. கெடிகலங்கி – மிக வருந்தி
28. வாகு – சரியாக
29. சம்பிரமுடன் – முறையாக
30. காலன் – எமன்
31. சேகரம் – கூட்டம்
32. மெத்த – மிகவும்
33. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
34. தீர்வன – நீங்குபவை
35. திறத்தன – தன்மையுடையன
36. உவசமம் – அடங்கி இருத்தல்
37. கூற்றவா – பிரிவுகளாக
38. நிழல்இகழும் – ஒளிபொருந்திய
39. பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
40. பேர்தற்கு – அகற்றுவதற்கு
41. பிணி – துன்பம்
42. திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
43. ஓர்தல் – நல்லறிவு
44. தெளிவு – நற்காட்சி
45. பிறவார் – பிறக்கமாட்டார்
46. நித்தம் நித்தம் -நாள்தோறும்
47. வையம் – உலகம்
48. மட்டு – அ்ளவு
49. பேணுவயல் -பாதுகாத்தல்
50. சுண்ட -நன்கு
51. திட்டுமுட்டு -தடுமாற்றம்
52. கலன் – அணிகலன்
53. முற்றை – ஒளிர
54. வேண்டாவாம் – தேவையில்லை
55. தடம் – அடையாளம்
56. அகம்பாவம் – செருக்கு
57. புத்தி – அறிவு
58. பாதை – அறிவு
59. உள்ளம் – மனம்
60. லாபம் – பலன்
61. எண்ணி – நினை
62. பண் – இசை
63. கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
64. மதவேழங்கள் – மதயானைகள்
65. முரலும் – முழங்கும்
66. பழவெய் – முதிர்ந்த மூங்கில்
67. அலந்தவர் – வறியவர்
68. செறாஅமை – வெறுக்காமை
69. கிளை – உறவினர்
70. பேதையார் – அறிவற்றவர்
71. நோன்றல் – பொறுத்தல்
72. மறாஅமை – மறவாமை
73. போற்றார் – பகைவர்
74. பொறை – பொறுமை
75. வாரி – வருவாய்
76. எஞ்சாமை – குறைவின்றி
77. முட்டாது – தட்டுப்பாடின்றி
78. ஒட்டாது – வாட்டம்இன்ற
79. வைகுக – தங்குக
80. ஓதை – ஓசை
81. வெரீஇ – அஞ்சி
82. யாணர் – புதுவருவா
83. மறலி – காலன்
84. வழிவர் – நழுவி ஓடுவர்
85. கரி – யானை
86. பிலம் – மலைக்குகை
87. தூறு – புதர்
88. மண்டுதல் – நெருங்குதல்
89. அருவர் – தமிழர்
90. இறைஞ்சினர் – வணங்கினர்
91. உடன்றன – சினந்து எழுந்தன
92. முழை – மலைக்குகை
93. சீவன் – உயிர்
94. சத்தியம் – உண்மை
95. சபதம் – சூளுரை
96. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
97. மோகித்து – விரும்பு
98. நமன் – எமன்
99. நாணாமே – கூசாமல்
100. சித்தம் – உள்ளம்
101. உய்ம்மின் – ஈடேறுங்கள்
102. நம்பர் – அடியார்
103. ஈயில் – வழங்கினால்
104. படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
105. பகராய் – தருவாய்
106. பராபரம் – மேலான பொருள்
107. ஆனந்த வெள்ளம் – இன்பப்பெருக்கு
108. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
109. நிறை – மேன்மை
110. அழுக்காறு – பொறாமை
111. பொறை – பொறுமை
112. மதம் – கொள்கை
113. பொச்சாப்பு – சோர்வு
114. இகல் – பகை
115. மையல் – விருப்பம்
116. மன்னும் – நிலைபெற்ற
117. ஓர்ப்பு – ஆராய்ந்து தெளிதல்

ஒன்பதாம் வகுப்பு

1. குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
2. மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
3. சிந்தாமணி – சீவகசிந்தாமணி
4. சிந்து – ஒருவகை இசைப்பாடல்
5. முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம், இராசசம், தாமசம்)
6. பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதலியன
7. வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
8. வண்ணம் நூறு – குறில், அகவல் முதலியன
9. ஊனரசம் – குறையுடைய சுவை
10. நவரசம் – வீரம், அச்சம் முதலிய ஒன்பது சுவைகள்
11. வனப்பு – அழகு
12. குந்த – உட்கார
13. கந்தம் – மணம்
14. மிசை – மேல்
15. விசனம் – கவலை
16. எழில் – அழகு
17. துயர் – துன்பம்
18. மா – வண்டு
19. மது – தேன்
20. வாவி – பொய்கை
21. வளர் முதல் – நெற்பயிர்
22. தரளம் – முத்து
23. பணிலம் – சங்கு
24. வரம்பு – வரப்பு
25. கழை – கரும்பு
26. கா – சோலை
27. குழை – சிறு கிளை
28. அரும்பு – மலர் மொட்டு
29. மாடு – பக்கம்
30. நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள்
31. கோடு – குளக்கரை
32. ஆடும் – நீராடும்
33. மேதி – எருமை
34. துதைந்து எழும் – கலக்கி எழும்
35. கன்னி வாளை – இளமையான வாளைமீன்
36. சூடு – நெல் அரிக்கட்டு
37. சுரிவளை – சங்கு
38. வேரி – தேன்
39. பகடு – எருமைக்கடா
40. பாண்டில் – வட்டம்
41. சிமயம் – மலையுச்சி
42. நாளிகேரம் – தென்னை
43. நரந்தம் – நாரத்தை
44. கோளி – அரசமரம்
45. சாலம் – ஆச்சா மரம்
46. தமாலம் – பச்சிலை மரங்கள்
47. இரும்போந்து – பருத்த பனைமரம்
48. சந்து – சந்தன மரம்
49. நாகம் – நாகமரம்
50. காஞ்சி – ஆற்றுப்பூவரசு
51. யாக்கை – உடம்பு
52. புணரியோர் – தந்தவர்
53. புன்புலம் – புல்லிய நிலம்
54. தாட்கு – முயற்சி
55. சமயக் கணக்கர் – சமயத் தத்துவவாதிகள்
56. பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள்
57. தோம் – குற்றம்
58. கோட்டி – மன்றம்
59. பொலம் – பொன்
60. வேதிகை – திண்ணை
61. தூணம் – தூண்
62. தாமம் – மாலை
63. கதலிகைக் கொடி -சிறு சிறு கொடிகள்
64. காழூன்று கொடி – கொம்புகளில் கட்டும் கொடி
65. விலோதம் – துணியாலான கொடி
66. வசி – மழை
67. செற்றம் – சினம்
68. கலாம் – போர்
69. துருத்தி – ஆற்றிடைக்குறை
70. களர்நிலம் – உவர்நிலம்
71. நவிலல் – சொல்
72. வையம் – உலகம்
73. மாக்கடல் – பெரிய கடல்
74. இயற்றுக – செய்க
75. மின்னாளை – மின்னலைப் போன்றவளை
76. தணல் – நெருப்பு
77. தாழி – சமைக்கும் கலன்
78. அணித்து – அருகில்
79. தவிர்க்கஒணா – தவிர்க்க இயலாத
80. யாண்டும் – எப்பொழுதும்
81. மூவாது – முதுமை அடையாமல்
82. நாறுவ – முளைப்ப
83. தாவா – கெடாதிருத்தல்
84. மைவனம் – மலைநெல்
85. முருகியம் – குறிஞ்சிப்பறை
86. பூஞ்சினை – பூக்களை உடைய கிளை
87. சிறை – இறகு
88. சாந்தம் – சந்தனம்
89. பூவை – நாகணவாய்ப் பறவை
90. கடறு – காடு
91. முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் குழல்கள்
92. பொலி – தானியக்குவியல்
93. உழை – ஒரு வகை மான்
94. கல் – மலை
95. முருகு – தேன், மணம், அழகு
96. மல்லல் – வளம்
97. செறு – வயல்
98. கரிக்குருத்து – யானைத்தந்தம்
99. போர் – வைக்கோற்போர்
100. புரைதப – குற்றமின்றி
101. தும்பி – ஒருவகை வண்டு
102. துவரை – பவளம்
103. மரை – தாமரை மலர்
104. விசும்பு – வானம்
105. மதியம் – நிலவு
106. தீபம் – விளக்கு
107. சதிர் – நடனம்
108. தாமம் – மாலை
109. தெங்கு – தேங்காய்
110. இசை – புகழ்
111. வருக்கை – பலாப்பழம்
112. நெற்றி – உச்சி
113. மால்வரை – பெரியமலை
114. மடுத்து – பாய்ந்து
115. கொழுநிதி – திரண்ட நிதி
116. மருப்பு – கொம்பு
117. வெறி – மணம்
118. கழனி – வயல்
119. செறி – சிறந்த
120. இரிய – ஓட
121. அடிசில் – சோறு
122. மடிவு – சோம்பல்
123. கொடியன்னார் – மகளிர்
124. நற்றவம் – பெருந்தவம்
125. வட்டம் – எல்லை
126. வெற்றம் – வெற்றி
127. அள்ளல் – சேறு
128. பழனம் – நீர் மிக்க வயல்
129. வெரீஇ – அஞ்சி
130. பார்பபு – குஞ்சு
131. நந்து – சங்கு
132. கமுகு – பாக்கு
133. முத்தம் – முத்து
134. விண் – வானம்
135. ரவி – கதிரவன்
136. அறம் – நற்செயல்
137. வெகுளி – சினம்
138. ஞானம் – அறிவு
139. விரதம் – நன்னெறி
140. நசை – விருப்பம்
141. நல்கல் – வழங்குதல்
142. பிடி – பெண்யானை
143. வேழம் – ஆண்யானை
144. யா – ஒரு வகை மரம்
145. பொளிக்கும் – உரிக்கும்
146. ஆறு – வழி

பத்தாம் வகுப்பு

1. துய்ப்பது – கற்பது, தருதல்
2. மேவலால் – பொருந்துதல், பெறுதல்
3. மயலுறுத்து – மயங்கச்செய்
4. ப்ராண ரஸம் – உயிர்வளி
5. லயத்துடன் – சீராக
6. நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
7. நேமி – வலம்புரிச்சங்கு
8. காேடு – மலை
9. காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
10. நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
11. தூஉய் – தூவி
12. விரிச்சி – நற்சாெல்
13. சுவல் – தாேள்
14. அருகுறை – அருகில்
15. முகமன் – விருந்தோம்பல் சொற்கள்
16. அசைஇ – இளைப்பாறி
17. அல்கி – தங்கி
18. கடும்பு – சுற்றம்
19. நரலும் – ஒலிக்கும்
20. ஆரி – அருமை
21. படுகர் – பள்ளம்
22. வயிரியம் – கூத்தர்
23. வேவை – வெந்தது
24. இறடி – திசை
25. பொம்மல் – சோறு
26. சுடினும் – சுட்டாலும்
27. மாளாத – தீராத
28. மாயம் – விளையாட்டு
29. விசும்பு – வானம்
30. ஊழி – யுகம்
31. ஊழ – முறை
32. தண்பெயல் – குளிர்ந்த மழை
33. ஆர்தருபு – வெள்ளத்தில் மூழ்கிய
34. பீடு – சிறப்பு
35. ஈண்டி – செறிந்து திரண்டு
36. கேள்வியினான் – நூல் வல்லான்
37. கேண்மையினான் – நட்பினன்
38. தார் – மாலை
39. முடி – தலை
40. முனிவு – சினம்
41. அகத்து உவகை – மனமகிழ்ச்சி
42. தமர் – உறவினர்
43. நீபவனம் – கடம்பவனம்
44. மீனவன் – பாண்டிய மன்னன்
45. கவரி – சாமரை
46. நுவன்ற – சொல்லிய
47. பண்டி – வயிறு
48. அசும்பிய – ஒளிவீசுகிற
49. முச்சி – தலையுச்சிக் காெண்டை
50. சுண்ணம் – நறுமணப்பொடி
51. காருகர் – நெய்பவர்
52. தூசு – பட்டு
53. துகிர் – பவளம்
54. வெறுக்கை – செல்வம்
55. நொடை – விலை
56. பாசவர் – வெற்றிலை விற்போர்
57. ஓசுநர் – எண்ணெய் விற்போர்
58. மண்ணுள் வினைஞர் – ஓவியர்
59. மண்ணீட்டாளர் – சிற்பி
60. கிழி – துணி
61. சேக்கை – படுக்கை
62. யாக்கை – உடல்
63. பிணித்து – கட்டி
64. வாய்ந்த – பயனுள்ள
65. இளங்கூழ் – இளம்பயிர்
66. தயங்கி – அசைந்து
67. காய்ந்தேன் – வருந்தினேன்
68. கொம்பு – கிளை
69. புழை – துளை
70. கான் – காடு
71. தேம்ப – வாட
72. அசும்பு – நிலம்
73. உய்முறை – வாழும் வழி
74. ஓர்ந்து – நினைத்து
75. கடிந்து – விலக்கி
76. உவமணி – மணமலர்
77. படலை – மாலை
78. துணர் – மலர்கள்

பதினொன்றாம் வகுப்பு

1. பால் – வகை
2. இயல்பு – பண்பு
3. மாடம் – மாளிகை
4. அமை – மூங்கில்
5. புரளும் – ததும்பும்
6. கரைகின்ற – கத்துகின்ற
7. சுழித்தோடும் – சுழன்றோடும்
8. மார்பு சுரந்த – வளமான
9. மறுகியது – கலங்கியது
10. ஏதலி – ஏழை, அகதி
11. வட ஆரிநாடு – திருமலை
12. தென் ஆரிநாடு – குற்றாலம்
13. ஆரளி – மொய்க்கின்ற வண்டு
14. இந்துளம் – ஒரு வகைப் பண்
15. இடங்கணி – சங்கிலி
16. உளம் – உள்ளான் பறவை
17. சலச வாவி – தாமரைத் தடாகம்
18. தரளம் – முத்து
19. கா – சோலை
20. முகில்தொகை – மேகக்கூட்டம்
21. மஞ்ஞை – மயில்
22. கொண்டல் – கார்கால மேகம்
23. மண்டலம் – உலகம்
24. வாவித் தரங்கம் – குளத்து அலை
25. அளி உலாம் – வண்டு மொய்க்கின்ற
26. மழைக்கால மலர்கள் – காயா, கொன்றை, முல்லை முதலியன
27. போது – மொட்டு
28. அலர்ந்து – மலர்ந்து
29. கவினி – அழகுற
30. ஜகம் – உலகம்
31. புயம் – தோள்
32. வரை – மலை
33. வன்னம் – அழகு
34. த்வஜஸ்தம்பம் – கொடி மரம்
35. சலராசி – கடல்வாழ் உயிர்கள்
36. நூபுரம் – சிலம்பு
37. மாசுணம் – பாம்பு
38. இஞ்சி – மதில்
39. சிதவல் – தலைப்பாகை
40. தண்டு – ஊன்றுகோல்
41. தமியர் – தனித்தவர்
42. முனிதல் – வெறுத்தல்
43. துஞ்சல் – சோம்பல்
44. அயர்வு – சோர்வு
45. மாட்சி – பெருமை
46. நோன்மை – வலிமை
47. தாள் – முயற்சி
48. பிரசவம் – தேன்
49. புடைத்தல் – கோல்கொண்டு ஓச்சுதல்
50. கொழுநன் குடி – கணவர் வீடு
51. வறன் – வறுமை
52. கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்
53. மதுகை – பெருமிதம்
54. இழுக்கு – குற்றம்
55. வினாயவை – கேட்டவை
56. வரை – மலை
57. கம்பலை – பேரொலி
58. புடவி – உலகம்
59. எய்துதல் – பெறுதல்
60. வாரணம் – யானை
61. பூரணம் – நிறைவு
62. வதுவை – திருமணம்
63. கோன் – அரசன்
64. பொறிகள் – ஐம்புலன்
65. விண்டு – திறந்து
66. மண்டிய – நிறைந்த
67. தீன் – மார்க்கம்
68. கொண்மூ – மேகம்
69. சமம் – போர்
70. விசும்பு – வானம்
71. ஆயம் – சுற்றம்
72. தழலை, தட்டை – பறவை ஓட்டும் கருவிகள்
73. படுகை – படுக்கை
74. அயர்ந்து – சோர்ந்த
75. குழல் – கூந்தல்
76. நாங்கூழ் – மண்புழு
77. வரிசை – சன்மானம்
78. அந்தம் – முடிவு
79. அயன் – பிரமன்
80. மால் – விஷ்ணு
81. ஆலாலம் – நஞ்சு
82. மீட்சி – விடுதலை
83. நவை – குற்றம்
84. படி – உலகம்
85. பதி – நாடு
86. நிரையம் – நரகம்
87. புரையோர் – சான்றோர்
88. யாணர் – புது வருவாய்
89. மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்கள்
90. கடிநகர் – காவல் நகரம்
91. பூம்பராகம் – மகரந்தம்
92. தோட்டி – துறட்டி
93. அயம் – ஆடு, குதிரை
94. சீரியதூளி – நுண்ணிய மணல்
95. பரல் – கல்
96. அண்டயோனி – ஞாயிறு
97. சாடு – பாய்
98. எழிலி – மேகம்
99. பாடு – உழைப்பு

பன்னிரண்டாம் வகுப்பு

1. புதுப்பெயல் – புதுமழை
2. ஆர்கலி – வெள்ளம்
3. கொடுங்கோல் – வளைந்த கோல்
4. புலம்பு – தனிமை
5. கண்ணி – தலை மாலை
6. கவுள் – கன்னம்
7. மா – விலங்கு
8. அமலன் – இராமன்
9. இளவல் – தம்பி
10. நளிர்கடல் – குளிர்ந்தகடல்
11. துன்பு – துன்பம்
12. உவா – அமாவாசை
13. உடுபதி – சந்திரன்
14. செற்றார் – பகைவர்
15. கிளை – உறவினர்
16. மலிவிழா – விழாக்கள் நிறைந்த
17. மடநல்லார் – இளமைப் பெண்கள்
18. கழி – உப்பங்கழி
19. செறு – வயல்
20. கொள்ளை – விலை
21. என்றூழ் – சூரிய வெப்பம்
22. விடர – மலைவெடிப்பு
23. கதழ் – விரைவு
24. உமணர் – உப்பு வணிகர்
25. எல்வளை – ஒளிரும் வளையல்
26. ஞமலி – நாய்
27. புனவன் – கானவன்
28. அள்ளல் – சேறு
29. பகடு – எருது
30. வள்ளியோர் – வள்ளல்கள்
31. வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
32. உரன் – வலிமை
33. கலன் – யாழ்
34. மழு – கோடரி
35. புரிகுழல் – சுருண்ட கூந்தல்
36. கழை – மூங்கில்
37. கண் – கணு
38. நித்திலம் – முத்து
39. விருந்து – புதுமை
40. தலைக்கோல் – நாடகப் பட்டம்
41. ஓடை – முக படாம்
42. அரசு உவா – பட்டத்து யானை
43. பல்இயம் – இசைக்கருவி
44. வாரம் – தெய்வப்பாடல்
45. ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
46. கழஞ்சு – எடை அளவு
47. நகை – சிரிப்பு
48. இளிவரல் – சிறுமை
49. மருட்கை – வியப்பு
50. பெருமிதம் – பெருமை
51. வெகுளி – சினம்
52. உவகை – மகிழ்ச்சி
53. காய்நெல் – விளைந்த நெல்
54. தமித்து – தனித்து
55. புக்கு – புகுந்து
56. யாத்து – சேர்த்து
57. நந்தும் – தழைக்கும்
58. வரிசை – முறைமை
59. பரிவு – அன்பு
60. பிண்டம் – வரி
61. நேசம் – அன்பு
62. பாதகர் – கொடியவர்
63. கூவல் – கிணறு
64. உததி – கடல்
65. சிரத்து – தலையில்
66. கண்டகர் – கொடியவர்கள்
67. வைதனர் – திட்டனர்
68. மேதினி – உலகம்
69. வாரிதி – கடல்
70. நிந்தை – பழி
71. பொல்லாங்கு – தீமை
72. கவாஅன் – மலைப்பக்கம்
73. கலிங்கம் – ஆடை
74. சுரும்பு – வண்டு
75. பறம்பு – பறம்பு மலை
76. நிழல் – ஒளி வீசும்
77. சாவம் – வில்
78. மால்வரை – பெரியமலை
79. கரவாது – மறைக்காது
80. துஞ்சு – தங்கு
81. கஞலிய – நெருங்கிய
82. நாகு – இளமை
83. கோடியர் – கூத்தர்
84. நுகம் – பாரம்

மாதிரி வினாக்கள் (MQs)

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களின் அடிப்படையில் ‘சொல்லும் பொருளும் அறிதல்’ மற்றும் ‘பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்’ தொடர்பான மாதிரி வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

1. “விளைவு” என்ற சொல்லின் சரியான பொருளைத் தேர்க:

(A) விளைச்சல்

(B) முடிவு

(C) வளர்ச்சி

(D) முயற்சி

(E) விடை தெரியவில்லை

2. “சமூகம்” என்னும் சொல்லிற்குப் பொருத்தமான பொருளைக் கண்டறிக:

(A) ஊர்

(B) மக்கள் குழு

(C) குடும்பம்

(D) அரசு

(E) விடை தெரியவில்லை

3. “ஊடகம்” என்ற சொல்லின் சரியான பொருளைத் தெரிவு செய்க:

(A) தகவல் தொடர்புச் சாதனம்

(B) செய்தித்தாள்

(C) வானொலி

(D) கணினி

(E) விடை தெரியவில்லை

4. “நிறுமித்த” என்பதன் பொருள் யாது?

(A) உயர்த்திய

(B) உருவாக்கிய

(C) அழித்த

(D) மறைத்த

(E) விடை தெரியவில்லை

5. பொருத்தமான பொருளைத் தேர்க: “மேனி”

(A) அழகு

(B) உடல்

(C) மனம்

(D) முகம்

(E) விடை தெரியவில்லை

 

Government Job-யை பெற விரும்பும் மாணவர்களுக்கு இந்த Online Study Material மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

Study Links

• Latest Materials

• TNPSC Group 4 Study Material Syllabus Wise & Preparation Guide

• TNPSC Related Notifications