வினைச்சொல்

வினைச்சொல்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து வினைச்சொல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

வினைச்சொல்

வினைச்சொல்

•  ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். •  எ.கா – சாந்தி, வகுப்பறை, சித்திரை, கண், கதிரவன், சந்திரன். •  ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். •  எ. கா – ஓடினான், விழுந்தது, எழுதினான்.

கீழுள்ள தொடர்களைக் கவனியுங்கள்

1. இராமன் பாடம் படித்தான்.இத்தொடரில்,

இராமன், பாடம் – பெயர்ச்சொற்கள்

படித்தான் – வினைச்சொல்

2. மாடு புல் மேய்ந்தது.இத்தொடரில்,

மாடு, புல் – பெயர்ச்சொற்கள்

மேய்ந்தது – வினைச்சொல்

Question 1.

கீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என வகைப்படுத்துக.

(பாடினாள், வருணன், எழுதினான், வரைந்தாள், இசைவாணி, உண்டான், கண்ண ன், சம்சுதீன், ஜெனிபர், காட்டினார், ஓடியது, முயல்)

வினைச்சொல்

Answer:

வினைச்சொல்

ஆ. பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்லை எடுத்து எழுதுக.

1. மயில் தோகையை விரித்து ஆடியது.
2. வாணி கட்டுரை எழுதினாள்.
3. இளம்பிறை உணவு சமைத்தாள்.
4. ஆதிரை மரக்கன்றை நட்டாள்.
5. கொத்தனார் வீடு கட்டினார்.

வினைச்சொல் tnpsc

Answer:

வினைச்சொல் in tamil

இ. கதையில் வரும் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் பட்டியலிடுக.

காட்டில் புலி ஒன்று மானை வேட்டையாடத் துரத்தியது மான் தன்னுயிரைக் காத்துக் கொள்ள வேகமாக ஓடியது. மானைத் துரத்திச் செல்லும்போது, வேடன் விரித்திருந்த வலையில் புலி சிக்கிக் கொண்டது. வேடன் வலையில் சிக்கிய புலியைக் கூண்டில் அடைக்க முயன்றான். அப்பொழுது புலி வேடனைப் பார்த்து, என்னைக் கூண்டில் அடைக்காதே விட்டுவிடு. நான் ஓடிப் போய்விடுகிறேன் என்று கெஞ்சியது. அதற்கு வேடன். அதெல்லாம் முடியாது’ என்று கூறினான்.

உனக்கு இரக்கமே இல்லையா? என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? எனக் கேட்டது புலி. அதற்கு வேடன் நீ ஏன் மானைத் துரத்தினாய்? உனக்கு ஒரு நீதி. எனக்கு ஒரு நீதியா? எனக் கேட்டான். புலி அமைதியாய் இருந்தது.

Answer:

வினைச்சொல் tnpsc tamil