ஒருமை பன்மை அறிதல்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஒருமை பன்மை அறிதல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ஒருமை
ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிப்பது.
ஒருமையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான முடியவேண்டும்(எ.கா.) மரம் சாய்ந்தது, அறிஞர் வந்தார்
பன்மை
பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைக் குறிப்பது.
பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு பன்மையில் தான் அமைய வேண்டும்
(எ.கா.) மரங்கள் சாய்ந்தன, கருவிகள் பழுதடைந்தன
தன்மைப் பெயர்
ஒருமை | பன்மை |
யான் | யாம், யாங்கள் |
நான் | நாம், நாங்கள் |
முன்னிலைப் பெயர்
ஒருமை | பன்மை |
நீ | நீர், நீங்கள் |
படர்க்கைப் பெயர்
ஒருமை | பன்மை |
அவன், அவள் | அவர்கள் |
அது | அவை |
தம்பி | தம்பிமார் |
தங்கை | தங்கைமார் |
கண் | கண்கள் |
நரி | நரிகள் |
பிழை | திருத்தம் |
அவைகள் | அவை |
அதுகள் | அது |
எனது மகள் | என் மகள் |
ஒரு ஊர் | ஓர் ஊர் |
நாட்கள் | நாள்கள் |
பொதுவழி அல்ல | பொதுவழி அன்று |
சில அறிஞர் | அறிஞர் சிலர் |
அவன் அல்ல | அவன் அல்லன் |
அவள் அல்ல | அவள் அல்லள் |
அவர்கள் அல்ல | அவர்கள் அல்லர் |
அவை அன்று | அது அன்று |
அது உரிமையானது | அஃது உரிமையானது |
யான் தாம் வந்தோம் | யான் தான் வந்தேன் |
நான் தாம் சென்றேன் | நான் தான் சென்றேன் |
நீர் தான் கொடுத்தீர் | நீர் தாம் கொடுத்தீர் |
நாம் தான் போவோம் | நாம் தான் போவோம் |
நீர் தான கொடுத்தீர் | நீர் தாம் கொடுத்தீர் |
அவை தான் ஓடின | அவை தாம் ஓடின |
ஒருமை | பன்மை |
அன்று | அல்ல |
தான் | தாம் |
பிழை | மன்னர் தன் குடிகளிடம் அன்பாய் இருப்பார். |
திருத்தம் | மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார். |
பிழை | ஆமைகள் வேகமாய் ஓடாது |
திருத்தம் | ஆமைகள் வேகமாய் ஓடா. |
பிழை | நான் கொடுத்த புத்தகம் இது அல்ல |
திருத்தம் | நான் கொடுத்த புத்தகம் இது அன்று |
பிழை | இதைச் செய்தவன் இவன் அல்ல |
திருத்தம் | இதைச் செய்தவன் இவன் அல்லன் |
பிழை | ஒருகாட்டில் ஒரு சிங்கமொன்று இருந்தது |
திருத்தம் | ஒருகாட்டில் சிங்கமொன்று இருந்தது |
பிழை | பாலும் தேனும் கிடைத்தது |
திருத்தம் | பாலும் தேனும் கிடைத்தன. |
பிழை | தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன |
திருத்தம் | தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது |
பிழை | திட்டங்கள் தீட்டப்பட்டது |
திருத்தம் | திட்டங்கள் தீட்டப்பட்டன |
பிழை | கந்தன் தேவியை மணந்தார் |
திருத்தம் | கந்தன் தேவியை மணந்தான் |
ஒரு, அது எனும் சொல்லையடுத்து முதலெழுத்து உயிர் எழுத்தாக உள்ள சொல் வந்தால் ஒரு-ஓர் என்றும் அது-அஃது என்று வரும்.
ஒவ்வொரு என்னும் சொல்லையடுத்து நாளும், காசும் என்பன போல ஒருமைச் சொற்களே வர வேண்டும்.