இனவெழுத்துகள்

இனவெழுத்துகள்

இனவெழுத்துகள்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இனவெழுத்துகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.

ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.

(எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தன ம், அம்பு, தென்றல்.

இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.

மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர்

எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில்

எழுத்து இல்லாத என்னும் எழுத்துக்கு என்பது இன எழுத்தாகும். என்னும் எழுத்துக்கு என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.

(எ. கா.) ஓஒதல், தூஉம், தழீஇ

தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள் ஆ) வந்தான் இ) கண்ணில் ஈ) தம்பி

2. தவறான சொல்லை வட்ட மிடுக.
அ) கண்டான் ஆ) வென்ரான் இ) நண்டு ஈ) வண்டு

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக
தெண்றல் – தென்றல்
கன்டம் – கண்டம்
நன்ரி – நன்றி
மன்டபம் – மண்டபம்