னகர ணகர வேறுபாடு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து னகர ணகர வேறுபாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ண, ன, ந – எழுத்துகள்
ண – நாவின் நுனி மேல்வாய் அணணத்தின் நடுப் பகுதியைத் தொடு்வதால் ணகரம் பிறககிறது.
ன – நாவின் நுனி மேல்வாய் அணணத்தின் முன் பகுதியைத் தொடு்வதால் னகரம் பிறககிறது.
ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
(ட்,ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.
இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்.
றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.
(எ.கா.)
• வாணம் – வெடி
வானம் – ஆகாயம்
• பணி – வேலை
பனி – குளிர்ச்சி
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக் குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) சிரம் என்பது ——————- (தலை / தளை)
2) இலைக்கு வேறு பெயர் ——————- (தளை / தழை)
3) வண்டி இழுப்பது ——————- (காலை / காளை)
4) கடலுக்கு வேறு பெயர் ——————- (பரவை / பறவை)
5) பறவை வானில் ——————- (பறந்தது / பரந்தது)
6) கதவை மெல்லத் ——————- (திறந்தான் / திரந்தான்)
7) பூ ——————- வீசும். (மனம் /மணம்)
8) புலியின் ——————- சிவந்து காணப்படும். (கன் /கண்)
9) குழந்தைகள் ——————- விளையாடினர். (பந்து /பன்து)
10) வீட்டு வாசலில் ——————- போட்டனர். (கோலம் / கோளம்)