லகர ளகர ழகர வேறுபாடு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து லகர ளகர ழகர வேறுபாடு பற்றியச் செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ல, ள, ழ – எழுத்துகள்
ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
ழ – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.
பொருள் வேறுபாடு உணர்க.
• விலை – பொருளின் மதிப்பு
• விளை – உண்டாக்குதல்
• விழை – விரும்பு
> இலை – செடியின் இலை
> இளை – மெலிந்து போதல்
> இழை – நூல் இழை
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க
Answer:
1. அலகு – பறவை மூக்கு
அளகு – பெண் பறவை
அழகு – வனப்பு
2. அலை – திரை, திரி
அளை – தயிர்
அழை – கூப்பிடு
3. இலை – தழை
இளை – மெலி
இழை – நூல்
4. ஒலி – ஓசை
ஒளி – வெளிச்சம்
ஒழி – கெடு
5. கலை – வித்தை
களை – நீக்க
கழை – மூங்கில்
6. கிலி – அச்சம்
கிளி – ஒரு பறவை
கிழி – துண்டாக்கு
7. தலை – சிரசு
தளை – கட்டுதல்
தழை – இலை
8. தால் – நாக்கு
தாள் – கால், பாதம்
தாழ் – பணி
9. வலி – வலிமை
வளி – காற்று
வழி – பாதை
10. வால் – விலங்குகளின் வால் பகுதி
வாள் – கத்தி
வாழ் – உயிர் வாழ்.
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக் குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) சிரம் என்பது ——————- (தலை / தளை)
2) இலைக்கு வேறு பெயர் ——————- (தளை / தழை)
3) வண்டி இழுப்பது ——————- (காலை / காளை)
4) கடலுக்கு வேறு பெயர் ——————- (பரவை / பறவை)
5) பறவை வானில் ——————- (பறந்தது / பரந்தது)
6) கதவை மெல்லத் ——————- (திறந்தான் / திரந்தான்)
7) பூ ——————- வீசும். (மனம் /மணம்)
8) புலியின் ——————- சிவந்து காணப்படும். (கன் /கண்)
9) குழந்தைகள் ——————- விளையாடினர். (பந்து /பன்து)
10) வீட்டு வாசலில் ——————- போட்டனர். (கோலம் / கோளம்)