குறில் நெடில் வேறுபாடு
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து குறில் நெடில் வேறுபாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
• தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
• (எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
• இடஞ்சுழி எழுத்துகள் – ட , ய, ழ
• தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல்
• தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்தத் தக்கவையாக உள்ளன.
• மூத்த மொழியான தமிழ் – கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புது மொழியாகவும் திகழ்கிறது.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து.
எழுத்து இலக்கணம்
• சொல் இலக்கணம்
• பொருள் இலக்கணம்
• யாப்பு இலக்கணம்
• அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாக க் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.
வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
ஒலித்துப் பார்த்து உணர்வோம்!
அ, இ, உ, எ, ஒ – ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ – ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன.
ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு.
எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
மாத்திரை
– மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
– ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொ டிக்கவோ ஆகும் கால அளவாகும்.
• குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை.
• நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 2 மாத்திரை.
மெய்யெழுத்துகள்
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல். இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
• வல்லினம் – க், ச், ட், த், ப், ற்
• மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன்
• இடையினம் – ய், ர், ல், வ், ழ், ள்
உயிர்மெய்
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது. மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தா ல் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை.
கபிலர் — 1 + 1 + 1 + ½ = 3½
____________
• தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
• குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்.
• நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ (எ.கா.) ஐகான், ஔகான்.
• குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்.
• எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
• எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது. எடுத்துக்காட்டாக எ*து என எழுதப்பட்டால் எது என்றும் எது என எழுதப்பட்டால் ஏது என்றும் ஒலித்தனர்.
• அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டா ல் அவை நெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா , த. = தா ).
• ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின்முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க = கை).
• எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன. (கெ.. = கௌ, தெ.. = தௌ ).
• மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப* ) இட்டனர். குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.
• ஓரெழுத்து ஒருமொழிகளில் உள்ள குறில் எழுத்துக்கள் – நொ, து
• குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும். (எ.கா.) ந, நம், நா, நாம்.
• இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும். (எ.கா.) கட, கடல், கடா, கடாம்.
குறில், நெடில் வேறுபாடு
• அடி – குறில்
ஆடி – நெடில்
• வளி – குறில்
வாளி – நெடில்
எழுத்து
யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் குறில், நெடில், ஒற்று என மூவகைப்படும்.
அசை
எழுத்துகளால் ஆனது ’அசை’ எனப்படும். ஓரெழுத்தோ, இரண்டெழுத்தோ நிற்பது அசை ஆகும். இது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
அடிப்படைச் செய்திகள்
(அ) உயிரெழுத்துகள் – 12. குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.
(ஆ) மெய்யெழுத்துகள் – 18. மூன்று வகைப்படும்.
• வல்லின மெய்கள் – க், ச், ட், த், ப், ற்
• மெல்லின மெய்க ள் – ங், ஞ், ண், ந், ம், ன்
• இடையின மெய்க ள் – ய், ர், ல், வ், ழ், ள்
(இ) உயிர்மெய் எழுத்துகள் – 216. (உயிர்மெய்க் குறில் 90, உயிர்மெய் நெடில் 126)
(ஈ) ஆய்தம் – 1
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க
Answer:
1. அலகு – பறவை மூக்கு
அளகு – பெண் பறவை
அழகு – வனப்பு
2. அலை – திரை, திரி
அளை – தயிர்
அழை – கூப்பிடு
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக் குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற
பொருள் வேறுபாடு உணர்க
• ஏரி – நீர்நிலை
• ஏறி – மேலே ஏறி
• கூரை – வீட்டின் கூரை
• கூறை – புடவை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) சிரம் என்பது ——————- (தலை / தளை)
2) இலைக்கு வேறு பெயர் ——————- (தளை / தழை)
3) வண்டி இழுப்பது ——————- (காலை / காளை)
4) கடலுக்கு வேறு பெயர் ——————- (பரவை / பறவை)
5) பறவை வானில் ——————- (பறந்தது / பரந்தது)
6) கதவை மெல்லத் ——————- (திறந்தான் / திரந்தான்)
7) பூ ——————- வீசும். (மனம் /மணம்)
8) புலியின் ——————- சிவந்து காணப்படும். (கன் /கண்)
9) குழந்தைகள் ——————- விளையாடினர். (பந்து /பன்து)
10) வீட்டு வாசலில் ——————- போட்டனர். (கோலம் / கோளம்)
இப்பகுதியில் வினாக்கள் வெளியே இருந்துதான் கேட்கப்படும்.
தேர்வு நோக்கில் வினாக்கள்:
1) குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
a) இரை, ஈகை
b) சிறகு, வளர்த்தல்
c) உடல், ஊண்
d) படம், பார்த்தல்
View Answer
b) சிறகு, வளர்த்தல்
2) குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக
கனகம் – கானகம்
a) செல்வம் – அரசன்
b) காடு – தொடுதல்
c) பொன் – காடு
d) நங்கை – தங்கை
View Answer
c) பொன் – காடு
3) குறில், நெடில் வேறுபாடுணாந்து பொருளறிக
அறு-ஆறு
a) நதி – ஓர் எண்
b) வெட்டுதல் – நதி
c) வெட்டுதல் – அறுத்தல்
d) அறுத்தல் – கட்டுதல்
View Answer
b) வெட்டுதல் – நதி
4) கோடிட்ட இடங்களுக்கு பொருந்திய சொற்களைத் தேர்க
———— வில் ———— குளித்தது.
a) விடு,வீடு
b) சுடு, சூடு
c) மடு, மாடு
d) அடு, ஆடு
View Answer
c) மடு, மாடு
5) பொருந்தா இணையைக் கண்டறிக.
a) மடு – மாடு
b) தடு – தாடு
c) விடு – வீடு
d) எடு – ஏடு
View Answer
b) தடு – தாடு
6) குறில் நெடில் மாற்றத்தில் தவறான இனணையைக் கண்டறிக.
a) இன்பம், ஈகை
b) அகல், ஆவல்
c) உணவு, ஊதல்
d) எறும்பு, ஐவர்
View Answer
d) எறும்பு, ஐவர்
7) குறில் நெடில் அடிப்படையில் பொருள் வேறுபாடு காண்க.
விடு – வீடு
a) தங்குமிடம் – விட்டுவிடுதல்
b) விட்டுவிடுதல் – தங்குமிடம்
c) விட்டுவிடுதல் – தவிர்த்துவிடுதல்
d) தங்குமிடம் – தாங்குமிடம்
View Answer
b) விட்டுவிடுதல் – தங்குமிடம்
8) குறில் நெடில் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்க.
சிலை – சீலை
a) சிற்பம் – புடவை
b) புடவை – சிற்பம்
c) கற்சிலை – ஓவியம்
d) சிற்பம் – ஒழுக்கம்
View Answer
a) சிற்பம் – புடவை
9) தழை – தாழை – பொருள் சரியாகப் பொருந்திய இணையைத் தேர்க
a) செழிக்கச் செய் – வாடச்செய்
b) மலர் – மடல்
c) மலர் – இலை
d) இலை – மலர் வகை
View Answer
d) இலை – மலர் வகை
10) குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக.
சிலை – சீலை
a) ஓவியம் – வண்ணம்
b) இறைவன் திருவுருவம் – துணி
c) மணல் – குன்று
d) மறை – வேதம்