பாரதிதாசன் 6th – 12th

பாரதிதாசன் 

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து பாரதிதாசன் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

பாரதிதாசன் photo
பாரதிதாசன்

காலம் – 29. 04.1891 – 21.04.1964.

புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என புகழப்படுபவர் பாரதிதாசன்.

பாரதியாரின் கவிதை மீது காதல் கொண்டவர் பாரதிதாசன்.

இன்பத்தமிழ் – பாரதிதாசன் கவிதைகள்.

நல்ல புகழ்மிக்க புலவர்களுக்கு தமிழ் கூர்மையான வேல் போன்றது – பாரதிதாசன்.

இன்பத்தமிழ்’ பாடல் மூலம் தமிழை அமுது, மணம் என பெயரிட்டு அழைத்தவர் – புரட்சிக்கவி பாரதிதாசன்.

சிறப்பு பெயர்
• பாவேந்தர்,
• புரட்சிக்கவி
• புதுவைகுயில்

புரட்சிக்கவியின் பாடலில் காணப்படும் புரட்சிகர கருத்துக்கள்
•  பெண் கல்வி 
•  கைம்பெண் மருமணம்
•  பொதுவுடைமை
•  பகுத்தறிவு

இயற்பெயர் – கனகப்சுப்புரத்தினம்.

“மழையே மழையே வா வா” என்ற பாடலை பாடியவர் –  பாரதிதாசன் (இசையமுது).

பாரதிதாசன் 7th
பாரதிதாசன் 7th term 2

பாரதிதாசன் இயற்றிய நாடக நூல் – பிசிராந்தையார்.

இயற்றிய நூல்கள் 
• பாண்டியன் பரிசு
• குடும்ப விளக்கு
• இருண்ட வீடு
• கண்ணகி புரட்சி காப்பியம்
• இசையமுது
• அழகின் சிரிப்பு
• தமிழியக்கம்
• சேரத்தாண்டவம்
• பிசிராந்தையார்
• தமிழச்சியின் கத்தி
• எதிர்பாராத முத்தம்
• வீரத்தாய்
• சஞ்சீவி பார்வத்தின் சாரல்.

பிறந்த ஊர் – புதுவை (பாண்டிச்சேரி).

“தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள்”

“உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய்”

வாணிதாசன் யாரின் மாணவர்? பாரதிதாசன்.

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”பாரதிதாசன்.

“அறிவை விரிவு செய்”

“தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு இன்பத் தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு”

“இனிமைத் தமிழ்மொழி எமது எமக்கு இன்பந் தகும்படி வாய்த்தநல் அமுது”

“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!”பாரதிதாசன்.

“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”

மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம், படித்த பெண்கள், இளைஞர் இலக்கியம் ஆகிய நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்.

“இருட்டறையில் உள்ளதடா உலகம்” 

“புதியதோர் உலகு செய்வோம்”

“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்!”

“ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே!”

அழகின் சிரிப்பு இடம் பெற்ற ‘விழுதும் வேரும்’ என்ற நூலின் ஆசிரியர்-பாரதிதாசன்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனையை கவிதை வடிவில் தந்தவர் யார் –பாரதிதாசன்.

பாரதிதாசன் பரம்பரை தலைமுறை கவிஞருள் மூத்தவர் – முடியரசன்.

பெண்களின் கழுத்து நீண்டிருந்தால் அண்டை வீட்டு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்கள் மயில் அப்படிப் பார்க்காது எனப் பாடியவர் – பாரதிதாசன்.

“பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்”

“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தை”

“பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும் சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்”

“பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யாரு…”

“பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது”

“வானூர்தி செலுத்தல் வைய மாக்கடல் முழுதும் அளத்தல்”

“எத்தனை பெரிய வானம்!
எண்ணிப்பார் உனையும் நீயே;
பித்தேறி மேல்கீழ் என்று
மக்கள்தாம் பேசல் என்னே!”

‘தொண்டு செய்து பழுத்த பழம்’ என்று பெரியாரைப் பாடியவர் – பாரதிதாசன்.

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! 

பாரதிதாசன் நடத்திய இதழ் – குயில்.

“தமிழொளியை மதங்களில் சாய்க்காமை வேண்டும்”

“தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்”

“தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை”

“எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நானிடவும் வேண்டும்” என்னும்பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் – தமிழ்வளர்ச்சி (பாரதிதாசன்).

“அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன், பேத்தி”

“திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்”

“கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
கல்வைத்த, நகைதீராத ரணம்!”

“மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும் மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து”

“ஸ்ரீமதி மிவளார் உலகில் மானிடமதில் ஏதிது போலொரு சேவிணையினை நேரிரு விழி”

“கற்பிளந்து மலைபிளந்து களிகள் வெட்டி
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?”

வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணியம்’ என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் 1937இல் எழுதப்பட்டது.

மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியவர் – பாரதிதாசன்.

பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் நலச் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர்.

புதுவை அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்ட பாரதிதாசனின் வாழ்த்துப் பாடல் “வாழ்விளில் செம்மையைச் செய்பவள் நீயே”.

பாரதிதாசன் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது.

பாரதிதாசனின் ‘புரட்சிக்கவி’ குறுங்காவியத்தின் தலைவன், தலைவி – உதாரன், அமுதவல்லி.

“நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும் நிறை உழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்”.

“தமிழ்அறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவிஎன் நெனை அவளும் காத லித்தால்”

“உமை ஒன்று வேண்டுகின்றேன் மாசில் லாத உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்.”

“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”

“நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்”

“விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து; பொதுவில் நடத்து!”

தமிழக அரசு பாரதிதாசன் பல்கலைக் கழகம் நிறுவி இவர் புகழைப் போற்றியுள்ளது.

“என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி கற்றுப்” 

பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப ஜீவானந்தம் நண்பர்களுடன் படகுப் பயணம் மேற்கொண்டது குறித்து கூறியவர் – பாரதிதாசன்.

தமிழ் மொழியும் தமிழரும் தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்கவே இவர் தமது பாடற்றிறம் முழுவதையும் பயன்படுத்தினார்.

மறுமலர்ச்சிக் கருத்துகளை இவர் பாடல்களிற் பரக்கக் காணலாம்.

தாங்ககெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன்

தமிழ் வளர்ச்சி

எளிய நடையில் நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதல் வேண்டும்
தகத்தகயா தமிழை தாபிப்போம் வாரீர்
தமிழ்மொழியை மதங்களில் சாய்க்காமை வேண்டும்.

புத்தகச்சாலை

இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகச்சா லைவேண்டும் நாட்டில் யாண்டும்”

பாரதிதாசன் new book

கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள்.

ஆண், பெண் இருபாலருக்கும் பொது வானவை . 

மின்னல்போல் ஒளிரும் இயல்புடையவள்.

“வாழ்க்கை“ என்பது பொருட்செல்வத்தால வீரத்தாலோ அமைவதன்று

பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

என்று கூறியவர் – பாரதிதாசன்.