உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல்

Uvamaiyal Vilakaperum Poruthamana Porul Therinthueluthuthal – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல்

இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால் விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேட்கப்படுகிறது. எனவே இப்பகுதிக்காக ஏராளமான உவவமைகளையும் அதற்குரிய பொருட்களையும் பட்டியலிட்டுள்ளோம்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலபொறுமை
நன்பால் கலந்தீமையால் திரிதல் போல்கெடுதல்
மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போலமயங்குதல்
அடுத்தது காட்டும் பளிங்கு போல்வெளிப்படுத்தல்
அத்தி பூத்தாற்போலஅரிய செயல்
அயடிற்ற மரம்போல்வீழ்தல்
இலவு காத்த கிளி போலஏமாற்றம்
உடலும் உயிரும் போலஒற்றுமை, நெருக்கம்
கல்மடை திறந்தாற்போலவெளியேறுதல்
பகலவனைக் கண்ட பணி போலநீங்குதல்
உள்ளங்கை நெல்லிக்கனி போலதெளிவு
தாமரையிலைத் தண்ணீர் போலபற்றின்மை
பேடிகை வாளான்மை போலக்கெடும்முயற்சின்மை
ஒற்கத்தின் ஊற்றாம் துணை போலஊன்றுகோல்
பொருபுலி புலியோடு சிலைத்த போலஎதிரெதிரே நின்று போரிடல்
கடலில் கரைத்த காயம் போல்பயனற்றது
கொடுக்கும் தேளாய்க் கொட்டுவதேன்வருத்தம்
இடியோசை கேட்ட நாகம் போலநடுக்கம்
செந்தமிழும் சுவையும் போலஒற்றுமை
தாயைக் கண்ட சேயைப் போலஇன்பம், அதிக மகிழ்ச்சி
நகமும் சதையும் போலஇணை பிரியாமை
மழை காணாப் பயிர் போலவாடுதல்
வேலியே பயிரை மேய்ந்தது பேலநயவஞ்சம்
அன்றலர்ந்த மலர் போலபுத்துணர்வு
அனலில் விழுந்த புழுப்போல்வேதனை
கண்கட்டு வித்தை போலமாயத்திரை
பத்தரை மாற்றுத்தங்கம் போலபெருமை
நாயும் பூனையும் போலபகை
அலை ஓய்ந்த கடல் போலஅமைதி
பசுமரத்தாணி போல்எளிதாகப் பதிதல்
குன்றின் மேலிட்ட விளக்கு போலபயனுடைமை / பயன்/ வெளிச்சம்
கனியிருப்பக் காய் கவரந்தது போலஅறியாமை, தேவையற்ற செயல்
இலைமறைக் காய் போல்வெளிப்படுதல்
ஆலையில் அகப்பட்ட துரும்பு போல்துன்பம்
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போலநாசம்
செவிடன் காதில் ஊதிய சங்குபோல்பயனின்மை
செந்தமிழும் சுவையும் பேலஒற்றுமை
ஞாயிறு கண்ட தாமரை போலமகிழ்ச்சி
நீர்மேல் எழுத்து போலநிலையற்றது
பழம் நழுவி பாலில் விழந்தது போலஇன்பமிகுதி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவருத்தம்
அனலிற் பட்ட மெழுகுபோலதுன்பம் கண்டு உருகுதல்
குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வருவது போல்குறும்புகளில் ஈடுபடுவது
பொன்மலர் மணம் பெற்றது போல்பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது
உமி குற்றிக் கை சலித்தது போல்வருத்தம்
கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போலதவிப்பு
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போலஅத்துமீறல்
அச்சில் வார்த்தாற்போலஒரே சீராக
அவலை நினைத்து உரலை இடித்தாற்போலகவனம்
ஆப்பறைந்த மரம் போலஉறுதி
அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல்ஏமாற்றுதல்
அரை கிணறு தாண்டியவன் போலஆபத்து
ஆப்பசைத்த குரங்கு போலசிக்குதல்
ஆழம் தெரியாமல் காலை விட்டது போல்திட்டமிடாமை
இஞ்சி தின்ற குரங்கு போல்விழித்தல்
இடி விருந்த மரம் போல்வேதனை
இரும்பைக் கண்ட காந்தம் போல்கவர்ச்சி
உடும்புப் பிடி போலபிடிப்பு
உமையும், சிவனும் போல்நட்பு, நெருக்கம்
உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல்உறுதி
ஊமை கண்ட கனவு போலதவிப்பு, கூற இயலாமை
எள்ளில் எண்ணெய் போல்ஒளிந்திருத்தல், மறைவு
எட்டாப்பழம் புளித்தது போல்ஏமாற்றம்
ஏழை பெற்ற செல்வம் போல்மகிழ்ச்சி
ஒண்ட வந்த பிடாரி வளர்ப்பு பிடாரியை ஓட்டினாற்போல்விரட்டுதல்
கண் கெட்டபின் சூரிய நமஸ்கராம் போலகாலம் தாமதித்து உணர்தல், வருமுன் காவாமை
கயிறற்ற பட்டம் போன்றுதவித்தல், வேதனை
கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்ததுபிறரை ஏமாற்றுதல்
கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுகலக்கம், வருத்தம்
கானமயிலாட அது கண்டு ஆடம் வான்கோழி போலதாழ்வு, உயர்வின்மை
குடத்தில் இட்ட விளக்கு பேலஇகழ்ச்சி, அடக்கம்
சிதறிய முத்து பேலபயனின்மை
காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் மேய்ந்தாற்போலவேகம்
சீரிய நாகம் போல்கோபம்
செல்லரித்த ஒலைபோல்பயனின்மை
நீரும் நெருப்பும் போலவிலகுதல்
பாம்பின் வாய்த்தேரை போலமீளாமை
முக்காலம் உணர்ந்த முனிவர் போலஅறிதல்
பாய்மரம் சாய்ந்தது போலவிழுதல்
மரமேற்றின வண்டி போல்சுமை
பால் மணம் ஆறாத குழந்தை போலவெகுளி
புளியம் பழமும் தோடும் போலஒற்றுமை
புற்றீசல் போலபெருகுதல்
மலரும் மணமும் போலஒற்றுமை
வேம்பு அரசும் போலஒற்றுமை
மேகம் கண்ட மணில் போலமகிழ்ச்சி, ஆனந்தம்
காட்டுத்தீ போலவேகமாக பரவுதல்
பற்று மரமில்லாக் கொடி போலஆதரவின்மை, துன்பம்
கோலை எடுத்தால் குரங்கு போல்பயம்
சர்க்கரைப் பந்தலில் தேன் பொழிந்தாற்போலஇன்பம்
சாயம் போன சேலைமதிப்பின்மை
சித்திரப் புதுமை போலஅழகு
சிவபூஜையில் கரடி போலவிருப்பமின்மை, தேவையற்ற வரவு
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போலவேண்டாத வேலை, கேடு செய்தல்
சேற்றில் பிறந்த செந்தாமரை போல்உயர்வு, மேன்மை
சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை போலதிரும்பச் செய்தல் அறிவின்மை
திருடனைத் தேள் கொட்டியது போலசொல் முடியாத வேதனை
தோன்றி மறையும் வானவில்லைப் போல்நிலையற்ற, நிலையாமை
நத்தைக்குள் முத்துப்போல்உயர்வு, மேன்மை
நாண் அறுத்த வில் போலபயனற்றது
தொட்டனைத் தூறம் மணற்கேணி போல்அறிவு
நீருக்குள் பாசி போல்நட்பு
பசுத்தோல் போர்த்தி புலி போல்நயவஞ்சகம், ஏமாற்றுதல்
தாயைப் போல பிள்ளைதொடர்பு

1 thought on “உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்தெழுதுதல்”

  1. இதனை pdf ஆக download செய்யமுடியுமா?
    எப்படி download செய்வது என்று தெரிந்தால் அதை தயவுசெய்து கூறுங்கள்.

    Reply

Leave a Comment