பழமொழி நானூறு 6th – 12th
கல்வியின் சிறப்பு
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.
– முன்றுறை அரையனார்
1. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
2. முன்றுறை என்பது ஊர்ப்பெயர். அரையன் என்னும் சொல், அரசனைக் குறிக்கும். இவர் முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசராக இருக்கலாம்; அல்லது, அரையன் என்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.
3. பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
4. 400 பாடல்களைக் கொண்ட நூல் இது.
5. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம்பெற்றுள்ளது.
6. இப்பாடலில் வரும் பழமொழி, ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ என்பது. இதற்குக் ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’ என்பது பொருள்.
விருந்தோம்பல்
7. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
8. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி.
விருந்தோம்பல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்
ஒன்றாகு முன்றிலோ இல்”
-முன்றுறை அரையனார்
9.இப்பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகு முன்றிலோ இல் என்பதாகும். ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
11. இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
12. பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
13. மரம் வளர்த்தால் பெறலாம்.
அ) மாறி
ஆ) மாரி
இ) காரி
ஈ) பாரி
Related Links நான்மணிக்கடிகை 6th – 12th