நான்மணிக்கடிகை
மனைக்கு விளக்கம் மடவார்; மடவார்
தனக்குத் தகைசால் புதல்வர்; – மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
ஓதின் புகழ்சால் உணர்வு.
— விளம்பிநாகனார்
1. நான்மணிக்கடிகை நூலின் ஆசிரியர் பெயர் விளம்பிநாகனார்.
2. விளம்பி என்பது ஊர்ப்பெயர்; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
3. நான்மணிக்கடிகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
4. கடிகை என்றால் அணிகலன் என்பது பொருள்
5. நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன்பொருள்.
6. ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துகளைக் கூறுகின்றது
7. மனைக்கு விளக்கம் மடவார் (பெண்ணாவாள்)
8. அன்புமிக்க புதல்வர்களுக்கு விளக்கு – கல்வி
Related Links நாலடியார் 6th – 12th
Useful Links