பாடம் 8.3 ஒப்புரவு நெறி
Hello, Parents and Students.,
Here we have provided the State Board Solutions Class 7th Tamil Book Back Solutions Chapter 8.3 ஒப்புரவு நெறி to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது ________ நெறி
- தனியுடமை
- பொதுவுடமை
- பொருளுடைமை
- ஒழுக்கமுடைமை
விடை : பொதுவுடமை
2. செல்வத்தின் பயன் ________ வாழ்வு.
- ஆடம்பர
- நீண்ட
- ஒப்புரவு
- நோயற்ற
விடை : ஒப்புரவு
3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர்.
- மருந்து
- மருத்துவர்
- மருத்துவமனை
- மாத்திரை
விடை : மருந்து
4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ________.
- பாரதியார்
- பாரதிதாசன்
- முடியரசன்
- கண்ணதாசன்
விடை : பாரதிதாசன்
எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
1. எளிது | அ. புரவலர் |
2. ஈதல் | ஆ. அரிது |
3. அந்நியர் | இ. ஏற்றல் |
4. இரவலர் | ஈ. உறவினர் |
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ |
தொடர்களில் அமைத்து எழுதுக.
1. குறிக்கோள்
விடை : விளையாட்டு வெற்றியை குறிக்கோளாக வைத்து விளையாட வேண்டும்
2. கடமைகள்
விடை : நம் வீட்டில் தந்தைக்கு பல கடமைகளை நமக்காக புரிவார்
3. வாழ்நாள்
விடை : தம் வாழ்நாள் முழுவதும் அன்னை தெரசா சமூக நலனுக்காகவே அர்ப்பணித்தார்
4. சிந்தித்து
விடை : சிந்தித்து செயல்பட்டால் வாழ்வில் பல துன்பங்களை வெல்லலாம்
குறு வினா
1. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்
2. பொருளீட்டுவதன் நோக்கமாகக் குன்றக்குடி அடிகளார் கூறுவது யாது?
மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வித்து மகிழ, வாழ்வித்து வாழப் பொருள் தேவை என்பதே பொருளீட்டலுக்கான நோக்கமாகும்.
சிறு வினா
1. ஒப்புரவுக்கு அடிகளார் தரும் விளக்கம் யாது?
ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனைவிட, செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.
தரத்தைக் காட்டுகிறது. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது. உதவி செய்தல் எதற்காக? தற்காப்புக்காகவும் இலாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே!
சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒரு வகையில் வாணிகம் போலத்தான்.
அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன், உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைந்து, உதவிசெய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.
2. ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?
ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது. அதைத் தடுப்போர் யாருமில்லை.
ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன் மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம்.
பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல.
மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப் பெறுகிறது.
நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.
சிந்தனை வினா
ஒப்புரவுக்கும் உதவி செய்தலுக்குமுள்ள வேறுபாடு யாது?
உதவி பெறுபவரை உறவுப்பாங்கில் எண்ணி, உரிமை உடையவராக நினைத்து உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு. இல்லை என்று கேட்போருக்கு நாம் அவருக்குத் தேவையானதைத் கொடுப்பது உதவி செய்தல். ஒப்புரவில் பெறுவர் உறவினர். உதவி செய்வதில் பெறுபவர் ஏழைகள் அனைவரும்.
கூடுதல் வினாக்கள்
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ……………….. தனித்து வாழப் பிறந்தவர்கள் அல்லர்.
- விலங்குகள்
- தாவரங்கள்
- பறவைகள்
- மனிதர்கள்
விடை : மனிதர்கள்
2. ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது ……………..
- திருக்குறள்
- நாலடியார்
- புறநானூறு
- பழமொழி
விடை : திருக்குறள்
3. ஊருளி, பயன்மரம் பற்றி குறிப்பிடும் நூல் ………………..
- நாலடியார்
- திருக்குறள்
- புறநானூறு
- பழமொழி
விடை : திருக்குறள்
4. வாழ்க்கையின் கருவி …………………..
- ஓப்புரவு
- வறுமை
- மருந்து
- பொருள்
விடை : பொருள்
5. ஊருணியை அகழ்ந்தவன் …………………
- திருவள்ளூவர்
- அப்பரடிகள்
- மனிதன்
- வள்ளல்
விடை : மனிதன்
6. செல்வத்தப் பயனே ஈதல் – என்று கூறுவது …………………
- நாலடியார்
- திருக்குறள்
- பழமொழி
- புறநானூறு
விடை : புறநானூறு
7. தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது …………………
- ஊருணி
- பயன்மரம்
- மருந்து மரம்
- ஒப்புரவு
விடை : ஊருணி
குறு வினா
1. மனிதர்கள் தம் படைப்பாற்றல் கொண்டு படைத்தவையாக குன்றக்குடி அடிகளார் கூறுவன யாவை?
ஊருணி, பயன்மரம், மருந்துமரம்
2. ஒப்புரவு நெறி என்றால் என்ன?
அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.
3. எவற்றை மனித வாழ்க்கையில் நடைபெறும் பேராட்டம் என்று குன்றக்குடி அடிகாளர் கூறுகின்றார்?
பொருள் ஈட்டல், சேரத்தல், பாதுகாத்தல் மனித வாழ்வில் நடைபெறும் ஒரு பணி இல்லை ஒரு போராட்ம் என்கிறார் குன்றக்குடி அடிகளார்.
4. குன்றக்குடி அடிகளார் இயற்றிய நூல்கள் யாவை?
நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள்
5. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள் யாவை?
அருளோசை, அறிக அறிவியல்