7th Tamil Book Back Solutions Chapter 8.2 அறம் என்னும் கதிர்

 பாடம் 8.2 அறம் என்னும் கதிர்

Hello, Parents and Students.,

Here we have provided the State Board Solutions Class 7th Tamil Book Back Solutions Chapter 8.2 அறம் என்னும் கதிர் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.

சொல்லும் பொருளும் 

  • வித்து – விதை
  • களை – வேண்டாத செடி
  • ஈன – பெற
  • பைங்கூழ் – பசுமையான பயிர்
  • நிலன் – நிலம்
  • வன்சொல் – கடுஞ்சொல்

பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.

நூல் வெளி

  • முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
  • இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
  • இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.
  • அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர் பெற்றது.
  • இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காந்தியடிகள் எப்போதும் ……………..ப் பேசினார்

  1. வன்சொற்களை
  2. அரசியலை
  3. கதைகளை
  4. வாய்மையை

விடை : வாய்மையை

2. இன்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….

  1. இனிய + சொல்
  2. இன்மை + சொல்
  3. இனிமை + சொல்
  4. இன் + சொல்

விடை : இனிமை + சொல்

3. அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………..

  1. அற கதிர்
  2. அறுகதிர்
  3. அறக்கதிர்
  4. அறம்கதிர்

விடை : அறக்கதிர்

4. இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………………….

  1. முதுமை
  2. புதுமை
  3. தனிமை
  4. இனிமை

விடை : முதுமை

பொருத்துக

1. விளைநிலம்அ. உண்மை
2. விதைஆ. இன்சொல்
3. களைஇ. ஈகை
4. உரம்ஈ. வன்சொல்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

குறு வினா

1. அறக்கதிர் விளைய எதனை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?

அறக்கதிர் விளைய உண்மையை எருவாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்

2. நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் எதனைக் குறிப்பிடுகிறது?

வன்சொல்லை நீக்கவேண்டிய களை என்று அறநெறிச்சாரம் குறிப்பிடுகிறது

சிறு வினா

இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களாக முனைப்பாடியார் கூறுவன யாவை?

  • இனிய சொல்லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.
  • அதில் ஈகை என்னும் பண்பை விதையாக கொண்டு விதைக்க வேண்டும்.
  • வன்சொல் என்னும் களை நீக்க வேணடும்.
  • உண்மை பேசுதல் என்னும் எருவினை இடுதல் வேண்டும்.
  • அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.
  • அப்போது தான் அறமாகிய கதிரைப் பெற முடியும்.
  • இளம் வயதில் இச்செயல்களைச் செய்ய வேண்டும் என்று முனைப்பாடியார் கூறிகின்றார்.

சிந்தனை வினா

இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?

அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி, கோபம் கொள்ளாமை, நேர்மை ஆகியவை இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எனக் கருதுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இளம் வயதிலேயே விதைக்க வேண்டிய பண்பு. ………….

  1. இனிய சொல்
  2. கதைகளை
  3. வன்சொல்
  4. வாய்மையை

விடை : இனிய சொல்

2. இளமையில் பாய்ச்ச வேண்டிய நீர் ……………

  1. இனிய சொல்
  2. கதைகளை
  3. அன்பு
  4. வாய்மையை

விடை : அன்பு

3. முனைப்பாடியாரின் காலம் ……………..

  1. கி.பி. 5
  2. கி.பி. 13
  3. கி.பி. 10
  4. கி.பி. 12

விடை : கி.பி. 13

4. அறநெறிச்சாரம் ……………….. பாடல்களை கொண்டது

  1. 225
  2. 223
  3. 252
  4. 525

விடை : 225

5. வித்து என்பதன் பொருள் ……………….

  1. களை
  2. பெற
  3. நிலம்
  4. விதை

விடை : விதை

குறு வினா

1. முனைப்பாடியார் – குறிப்பு வரைக

  • முனைப்பாடியார் திருமுனைப்பாடி எனனும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
  • இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
  • இவர் இயற்றிய நூல் அறநெறிச்சாரம்

2. அறநெறிச்சாரம் – குறிப்பு வரைக

  • முனைப்பாடியார் இயற்றிய நூல் அறநெறிச்சாரம்.
  • முனைப்பாடியார் 225 பாடல்களைக காெண்டது.
  • அறநெறிகளைத் தாெகுத்துக் கூறுவதால் இநநூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது.

3. எதனை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?

இனிய சொல்லை விளைநிலமாகக் கொள்ள வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்

4. வாழ்வு முழுமைக்கும் பயனளிப்பது எது?

இளமைப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் . அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும்.