பாடம் 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
Hello, Parents and Students.,
Here we have provided the State Board Solutions Class 7th Tamil Book Back Solutions Chapter 7.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. திருநெல்வேலி_________ மன்னர்களோடு தொடர்பு உடையது.
- சேர
- சோழ
- பாண்டிய
- பல்லவ
விடை : பாண்டிய
2. இளங்கோவடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
- இமய
- கொல்லி
- பொதிகை
- விந்திய
விடை : பொதிகை
3. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
- காவிரி
- வைகை
- தென்பெண்ணை
- தாமிரபரணி
விடை : தாமிரபரணி
பொருத்துக.
1. தண்பொருநை | அ. பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம் |
2. அக்கசாலை | ஆ. குற்றாலம் |
3. கொற்கை | இ. தாமிரபரணி |
4. திரிகூடமலை | ஈ. முத்துக் குளித்தல் |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ |
குறு வினா
1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி
2. கொற்கை முத்து பற்றிக் கூறுக.
- தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது.
- இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
- கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது
சிறு வினா
1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.
- திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையகா பங்கு வகிப்பது உழவுத்தொழில்.
- தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.
- குளத்து பாசனமும், கினற்றும் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது
- மானாவாரிப்பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.
2. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.
- அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்
- சங்கப்புலவரான மாறோக்கத்து, நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக்கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்
- அயல் நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி
3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக
- நெல்லையில் உள்ள தெருக்கள் அதன் பழமைக்குச் சான்றாக உள்ளது.
- காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது
- மேல வீதியை அடுத்து கூழைக்கடைத்தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும் கடைத்தெரு ஆகும்
- முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை
சிந்தனை வினா
மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
- இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
- அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.
- சாதி மத பேதமின்றி மத நல்லிணகத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.
- சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என அழைக்கப்படும் நகர் ……………..
- பேட்டை
- சேரன்மகாதேவி
- செங்கோட்டை
- பாளையங் கோட்டை
விடை : பாளையங்கோட்டை
2. முற்காலத்தில் “வேணுவனம்” என அழைக்கப்படும் இடம் ……………..
- திருநெல்வேலி
- சேரன்மகாதேவி
- செங்கோட்டை
- பாளையங்கோட்டை
விடை : திருநெல்வேலிகு
2. “வேணுவனம்” என்பதன் பொருள் ……………..
- மூங்கில்நாடு
- மூங்கில் மரம்
- மூங்கில்காடு
- மூங்கில்
விடை : மூங்கில்காடு
3. முற்காலத்தில் “தன்பொருநை நதி” என ……………………. அழைத்தனர்
- காவிரி ஆறு
- கங்கை ஆறு
- தாமிரபரணி
- நொய்யல் ஆறு
விடை : தாமிரபரணி
4. ……………………. உற்பத்தியில் தமிழகத்தில் திருநெல்வேலி முதலிடம் வகிக்கின்றது
- நெல்லிக்காய்
- மாங்காய்
- கத்திரிக்காய்
- தக்காளி
விடை : நெல்லிக்காய்
5. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் ……………. என்னும் துறைமுகம் இருந்தது.
- பூம்புகார்
- கொற்கை
- காவிரிபூம்பட்டினம்
- காசிமேடு
விடை : கொற்கை
6. திருநெல்வேலியினை வளம் செழிக்க செய்யும் ஆறு …………
- காவிரி ஆறு
- தாமிரபரணி
- கங்கை ஆறு
- நொய்யல் ஆறு
விடை : தாமிரபரணி
7. வணிகம் நடைபெறும் பகுதியை ………………… என வழங்குதல் மரபு
- சேரன்மகாதேவி
- செங்கோட்டை
- பாளையங்கோட்டை
- பேட்டை
விடை : பேட்டை
8. மீனாட்சி அம்மையார் பெயரில் அமைந்த ஊர் _______________ என வழங்கப்பட்டது
- மீனாட்சி நகர்
- மீனாட்சி பட்டினம்
- மீனாட்சிபுரம்
- மீனாட்சியம்மைபுரம்
விடை : மீனாட்சிபுரம்
குறு வினா
1. திருநெல்வேலி பெயர்க்காரணம் கூறு
திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
2. புலவர்கள் திருநெல்வேலியின் சிறப்பை எவ்வாறு போற்றுகின்றனர்?
“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று திருஞானசம்பந்தரும், “தன்பொருநைப் புனல் நாடு” என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பை போற்றியுள்ளனர்.
3. இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுவை எவை?
தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்கு கரையில் பாளையங்கோட்டை அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன.
4. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் யாது?
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு பாளையங்கோட்டை
பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்
4. திருநெல்வேலியின் வரலாற்றை நினைவூட்டும் ஊர்கள் எவை?
- சேரன்மகாதேவி
- கங்கைகொண்டான்
- திருமலையப்பபுரம்
- வீரபாண்டியப்பட்டினம்
- குலசேகரப்பட்டினம்
5. திருநெல்வேலியில் உள்ள கோட்டைகள் சான்றுகள் எவை?
- பாளையங்கோட்டை
- உக்கிரன்கோட்டை
- செங்கோட்டை