பாடம் 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும்
Hello, Parents and Students.,
Here we have provided the State Board Solutions Class 7th Tamil Book Back Solutions Chapter 6.2 கீரைப்பாத்தியும் குதிரையும் to prepare for exams. The solutions are accurate and as per the State Board syllabus.
சொல்லும் பொருளும்
- வண்கீரை – வளமான கீரை
- பரி – குதிரை
- முட்டப்போய் – முழுதாகச் சென்று
- கால் – வாய்க்கால், குதிரையின் கால்
- மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்), எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
பாடலின் பொருள்
கீரைப்பாத்தியில்
மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்; மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்; வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர்; நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.
குதிரை
வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; எதிரிகளை மறித்துத் தாக்கும்; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.
நூல் வெளி
- காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
- மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
- திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம். சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
- இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏறப் பரியாகுமே என்றும் தொடரில் பரி என்பதன் பொருள்
- யானை
- குதிரை
- மான்
- மாடு
விடை : குதிரை
2. பொருந்தாத ஓசை உடைய சொல்
- பாய்கையில்
- மேன்மையால்
- திரும்புகையில்
- அடிக்கையால்
விடை : திரும்புகையில்
3. வண்கீரை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- வண் + கீரை
- வண்ணம் + கீரை
- வளம் + கீரை
- வண்மை + கீரை
விடை : வண்மை + கீரை
4. கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
- கட்டியிடித்தல்
- கட்டியடித்தல்
- கட்டிஅடித்தல்
- கட்டுஅடித்தல்
விடை : கட்டியடித்தல்
சிறு வினா
1. கீரைபாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?
கீரைப்பாத்தி | குதிரை |
1. மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர். | வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும். |
2. மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர். | கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்; |
3. வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர். | எதிரிகளை மறித்துத் தாக்கும்; |
4. நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும். | போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும். |
இக்காரணங்களால் கீரைப் பாத்தியும், குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.
சிந்தனை வினா
நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?
நான் குதிரையும், ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும், தாக்கும்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காளமேகப்புலவரின் இயற்பெயர் _______
- சுப்புரத்தினம்
- எத்திராசுலு
- சுப்பிரமணிம்
- வரதன்
விடை : வரதன்
2. தடுத்தல் என்பதன் பொருள் _______
- வண்கீரை
- மறித்தல்
- பரி
- முட்டப்போய்
விடை : மறித்தல்
குறு வினா
1. காளமேகப்புலவர் பெயர்காரணம் யாது
மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என அழைக்கப்பட்டார்.
2. காளமேகப்புலவர் எழுதியுள்ள நூல்கள் எவை?
திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மாடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
3. இரட்டுறமொழிதல் என்றால் என்ன?
ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடுதல் இரட்டுறமொழிதல் ஆகும். இதனை சிலேடை என்றும் கூறுவர்.
4. கீரைப்பாத்தி பற்றி காளமேகப்புலவர் கூறியது யாது?
- மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.
- மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.
- வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர்.
- நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.
5. குதிரை பற்றி காளமேகப்புலவர் கூறியது யாது?
- வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
- கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்;
- எதிரிகளை மறித்துத் தாக்கும்;
- போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.
சிறு வினா
காளமேகப்புலவர் – குறிப்பு வரைக
- காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.
- மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என அழைக்கப்பட்டார்.
- திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மாடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
- இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.