பாடம் 4.4 நூலகம் நோக்கி…
Hello, Friends.,
Here we have provided the SSLC Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 4.4 நூலகம் நோக்கி to prepare for exams. The solutions are accurate and as per the SSLC syllabus.
1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
முன்னுரை
ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். தரைத்தளத்தாேடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
தரைத்தளம்
தரைத் தளத்தில் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது. அவர்கள் தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி நூல்கள் உள்ளன. கேட்டு அறிய ஒலி வடிவ நூல்கள், குறுந்தகடுகள் வடிவில் உள்ளன. அவர்களுக்கு உதவி செய்யப் பணியாளர்களும் உள்ளனர். இங்கு பிரெய்லி எழுத்தில் நூல்களை உருவாக்கும் கருவியும் உள்ளது. படியெடுக்கும் வசதியும் உண்டு.
முதல் தளம்
முதல் தளம் குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி. குழந்தைகள் மகிழ்ச்சியான சூழலில் படிப்பதற்காகச் செயற்கை மரம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன. பிற நாடுகளில் இருந்து திரட்டப்ப ட்ட ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.
பிற தளங்கள்
- இரண்டாம் தளம் – தமிழ் நூல்கள்
- மூன்றாம் தளம் – கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள்
- நான்காம் தளம் – பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
- ஐந்தாம் தளம் – கணிதம், அறிவியல், மருத்துவம்
- ஆறாம் தளம் – பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை
- ஏழாம் தளம் – வரலாறு, சுற்றுலா, அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
- எட்டாம் தளம் – கல்வித் தொலைக்காட்சி, நூலகத்தின் அலுவலகப் பிரிவு
முடிவுரை
நூலக நூல்களை வாசிப்பதோடு நிற்காமல், இந்நூல்களை சுவாசிக்கும் அறிஞர்களாக மாற வேண்டும்.
“நூலகம் அறிஞர்களின் ஆன்மாக்கள் உறைவிடம்”
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் உள்ள இடம்
- சீனா
- இந்தியா
- ரஷ்யா
- பாகிஸ்தான்
விடை: சீனா
2. இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
- சி.அரங்கநாதன்
- இரா.அரங்கநாதன்
- ப.அரங்கநாதன்
- வெ.அரங்கநாதன்
விடை: இரா.அரங்கநாதன்
3. சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது
- அண்ணா விருது
- இரா.அரங்கநாதன் விருது
- பெரியார் விருது
- அம்பேத்கர் விருது
விடை: இரா.அரங்கநாதன் விருது
குறுவினா
1. நூலகத்தில் படித்து உயர்ந்தோர் சிலரது பெயர்களை எழுதுக.
அறிஞர் அண்ணா, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ்
2. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் சீனாவில் உள்ளது.
3. நூலக விதிகளை உருவாக்கியவர் யார்?
நூலக விதிகளை உருவாக்கியவர் முனைவர் இரா. அரங்கநாதன் ஆவார்.
4. இந்திய நூலகவியலின் தந்தை என அழைக்பபடுபவர் யார்?
முனைவர் இரா. அரங்கநாதன் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
5. சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கப்படுகிறது?
சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
6. தமிழக அரசு நூலகம் இல்லா ஊருக்காக செயல்படுத்திய திட்டம் யாது?
தமிழக அரசு நூலகம் இல்லா ஊருக்காக நடமாடும் நூலகம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.