பாடம் 3.2 அறிவியலால் ஆள்வோம்
Hello, Friends.,
Here we have provided the SSLC Solutions Class 6th Tamil Book Back Solutions Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம் to prepare for exams. The solutions are accurate and as per the SSLC syllabus.
பாடலின் பொருள்
- மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான். நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான்.
- வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான்.
- எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனையும் படைத்து விட்டான்.
- இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.
- பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான்.
- அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் காெள்ள முயல்கிறான்.
- நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்குச் சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவாேம்.
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அவன் எப்போதும் உண்மையையே _________
- உரைக்கின்றான்
- உழைக்கின்றான்
- உறைகின்றான்
- உரைகின்றான்
விடை : உரைக்கின்றான்
2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- ஆழமான + கடல்
- ஆழ் + கடல்
- ஆழ + கடல்
- ஆழம் + கடல்
விடை : ஆழம் + கடல்
3. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
- விண் + வளி
- விண் + வெளி
- வின் + ஒளி
- விண் + வொளி
விடை : விண் + வெளி
4. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- நீலம்வான்
- நீளம்வான்
- நீலவான்
- நீலவ்வான்
விடை : நீலவான்
5. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- இல்லாதுஇயங்கும்
- இல்லாஇயங்கும்
- இல்லாதியங்கும்
- இல்லதியங்கும்
விடை : இல்லாதியங்கும்
ஆ. நயம் அறிக
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
|
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
|
3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
|
இ. சிறுவினா
1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
செய்தித் தொடர்பில் சிறந்து விளங்குவதற்கும். இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறவும் செயற்கைக்கோள் பயன்படுகிறது
2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.
ஈ. சிந்தனை வினா
1. எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக.
- ஆழ்கடலை பற்றிய ஆய்விற்கும்
- கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்கும்
- இயற்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கும்
- இயற்கையில் செறிந்துள்ள வளங்களை கண்டு கொள்வதற்கும்
- மனிதன் செய்கின்ற வேலைகளை அவனுக்கு ஈடாகச் செய்து முடிப்பதற்கும்
- உலகையே தம் கட்டுப்பாட்டில் வைத்து கொள்வதற்கும்
- இணையத்தில் இணைந்திடவும்
- எளிதான அறுவைசிகிச்சை செய்வதற்கும்
- மனிதன் வாழ்நாளை பெருக்குவதற்கும்
- அணுசக்கதியைப் பெருக்குவதற்கும்
- வேற்றுக்கோள்களுக்குச் செல்வதற்கும்
- விண்வெளி பற்றிய ஆய்விற்கும்
- விவசாயத்தை பெருக்குவதற்கும்
- பொருளாதரத்தை உயர்த்துவதற்கும்
- இயற்கையை அழிவின்றி காப்பதற்கும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
2. இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
இதுவரை எட்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை
புதன் | வெள்ளி | பூமி |
செவ்வாய் | வியாழன் | சனி |
யுரேனஸ் | நெப்டியூன் |
3. இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் யாது?
இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக் கோள் சந்திராயன் ஆகும்.
கூடுதல் வினாக்கள்
1. பிரித்து எழுதுக
- செயற்கைக்கோள் = செயற்கை + கோள்
- எந்திரமனிதன் = எந்திரம் + மனிதன்
- உள்ளங்கை = உள் + அம் + கை
- இணையவலை = இணையம் + வலை
2. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வானத்தில் செலுத்தப்படுவது _________
விடை : செயற்கைக்கோள்கள்
2. எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படுவது _________
விடை : எந்திர மனிதன்
3. _________ உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.
விடை : இணையவலையின்
4. நாளைய மனிதன் விண்ணிலுள்ள _________ எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான்
விடை : கோள்களில்
5. வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் என்ற பாடல் வரிகளை ___________ எழுதியுள்ளார்
விடை : பாரதியார்
3. சிறுவினா
1. மனிதன் எங்கு சென்றும் வாழ நினைக்கிறான்?
மனிதன் நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான்.
2. யாரை மனிதன் படைத்து விட்டான்?
மனிதன் எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனை படைத்து விட்டான்.
3. எதன் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்?
இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.
4. எதனை காக்க மனிதன் வழிவகை செய்துள்ளான்?
பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க மனிதன் வழிவகை செய்துள்ளான்.
5. எவ்வாறு மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் காெள்ள முயல்கிறான்?
அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளை நிறைவேற்றிக் காெள்ள முயல்கிறான்.