Versollai Koduthu Vinaimutru, Vinaiyecham, Vinaiyalanaiyum Peyar, Thozhirpeyarai Uruvaakal
வேர்ச்சொல்லைக் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல் —
இப்பகுதி வினாக்களை எளிதில் விடையளிக்க வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் இலக்கணத்தை அறிந்திருத்தல் அவசியம்
வினைச்சொல்
இராமன் வந்தான், கண்ணன் நடந்தான்
இத்தொடர்களில் இராமன், கண்ணன் என்பன பெயர்ச்சொற்கள், அவைேய எழுவாய்களாகவும் உள்ளன. வந்தான், நடந்தான் ஆகிய சொற்கள் வருவதும், நடப்பதும் ஆகிய செயல்களை குறிப்பதால் இவை வினைச்சொற்கள், இவையோ பயனிலைகளாகவும் (முடிக்கும் சொற்களாகவும்) உள்ளன. இவ்வாறு எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச்சொற்கள்.வினைமுற்று
மலர்விழி எழுதினாள், கண்ணன் பாடுகிறான், மாடு மேயும்.
இத்தொடர்களில் எழுதினாள், பாடுகிறான், மேயும் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்களில் பொருள் முழுமை பெற்று விளங்குகிறது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.
வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று
ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
(எ.கா.) மாணவி கட்டுரை எழுதினாள்.
- செய்பவர் – மாணவி
- காலம் – இறந்தகாலம்
- கருவி – தாளும் எழுதுகோலும்
- செய்பொருள் – கட்டுரை
- நிலம் – பள்ளி
- செயல் – எழுதுதல்
குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.
- பொருள் – அவன் பொன்னன் – பொன்னை உடையவன்
- சினை – அவன் கண்ணன் – கண்களை உடையவன்
- இடம் – அவன் தென்னாட்டார் – தொன்னாட்டில் வாழ்பவன்
- பண்பு (குணம்) – அவன் கரியன் – கருமை நிறத்தவன்
- காலம் – சித்திரையன் – சித்திரையின் பிறந்தவன்
- தொழில் – அவன் எழுத்தன் – எழுதுபவன்
பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள்
வினைமுதலல மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே
– நன்னூல் 321
அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த ‘பொன்னன்’ என்பதே குறிப்பு வினை ஆகும். பொன்னை உடையவனாய் இருந்தான். இருக்கிறான், இருப்பான் எனப் பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பாக உணர்த்துகிறது.
எச்சம்
கயல்விழி படித்தாள், கோதை சென்றாள்
இத்தொடர்களில் படித்தாள், சென்றாள் என்பன வினைமுற்றுகள்.
இவ் வினைமுற்றுகள் சில இடங்களில் ‘ஆள்’ என்ற விகுதி குறைந்து படித்த, சென்று எனவும் வரும். இச்சொற்கள் பொருளில் முற்றும் பெறாத முழுமையடையாத வினைச்சொற்கள். ஆதலால் எச்சம் எனப்படும். அல்லது வினைமுற்றின் (ஆள்) விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் எனப்படும்.
பெயரெச்சம்
படித்த என்னும் சொல் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
(எ.கா.)
படித்த மாணவன், படித்த பள்ளி.
இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா.)
- பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
- பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
- பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்
பெயரெச்சங்கள் தெரிநிலை பெயரெச்சங்கள், குறிப்புப் பெயரெச்சங்கள் என இருவகைப்படும்.
தெரிநிலை பெயரெச்சங்கள்
வந்த பையனைப் பாரத்து கண்ணன் நின்றான்.
இத்தொடரில் வந்து என்பது பையன் என்னும் பெயரைக் கொண்டு முடிவதால் பெயரச்சம் எனப்படும். செய்த செய்கின்ற செய்யும் என்பன முறையே முக்காலத்திற்கும் உரிய பெயரச்ச வாய்ப்பாடுகள், இவை முக்காலத்தையும் செயலையும் வெளிப்டையாக காட்டிச் செய்பவன் முதலான ஆறம் எஞ்சி நிற்கும். இவன் உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
எ.கா.
- செய்பவன் – இளங்கோவன்
- கருவி – கலம்
- நிலம் – வீடு
- செயல் – உண்ணுதல்
- காலம் – இறந்த காலம்
- செய்பொருள் – சோறு
உண்கின்ற இளங்கோவன், உண்ணும் இளங்கோவன் என நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் பெயரெச்சங்களையும் மேற்கண்டவாறு பொருத்திக் காணலாம்.
உடன்பாடு – எதிர் மறை
எ.கா.
- உண்ட இளங்கோவன் – உண்ணாத இளங்கோவன்
எழுதிய கடிதம் – இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
குறிப்புப் பெயரெச்சங்கள்
காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு பெயரெச்சம் எனப்படும்.
எ.கா.
- நல்ல பையன்
இத்தொடரில் நல்ல என்னுமு் சொல் காலத்தையோ, சொல்லையோ உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்ற பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது. இது காலத்தைக் (இன்று நல்ல பையன், நேற்று நல்ல பையன், நாளை நல்ல பையன்) குறிப்பால் உணர்த்தும்.
வினையெச்சம்
முற்றுபெறாத வினைச்சொற்கள் (எச்சங்கள்) வேறொரு வினை முற்றைக் கொண்டுமுடிந்தால் அது வினையெச்சம் எனப்படும்
(எ.கா.)
- படித்து வந்தான்
- பாடக்கேட்டான்
- ஓடிச்சென்றான்
- போய்ப் பார்த்தான்
இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். இவ்வினையெச்சம் காலவகையால் மூன்று வகைப்படும்.
- இறந்தகால வினையெச்சம் – படித்து வந்தான், ஓடிச் சென்றான்
- நிகழ்கால வினையெச்சம் – படித்து வருகின்றான், ஓடிச் செல்கின்றான்
- எதிர்கால வினையெச்சம்- படித்து வருவான், ஓடிச் செல்வான்
இது தெரிநிலை வினையெச்சங்கள், குறிப்பு வினையெச்சங்கள் என இரு வகைப்படும்.
தெரிநிலை வினையெச்சங்கள்
எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
குறிப்பு வினையெச்சங்கள்
மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
முற்றெச்சம்
வள்ளி படித்தனள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.
வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.
தொழிற்பெயர்
வேர்ச்சொல்லோடு ‘தல்’ விகுதி சேர்ந்தால் அது தொழிற்பெயர். அல், வை, வு, கை ஆகிய விகுதிகள் சேர்ந்தாலும் அது தொழிற்பெயராகும்.
- தல் – கூறு + அல் = கூறல்
- வை – பார் + வை = பார்வை
- வு – வாழ் + வு = வாழ்வு
- கை – படு + கை = படுக்கை
- தல் = கல் + தல் =கற்றல்
வேர்ச்சொல் | வினைமுற்று | வினையெச்சம் | வினையாலணையும் பெயர் | தொழிற்பெயர் |
கொடு | கொடுத்தான் | கொடுத்து | கொடுத்தவன் | கொடுத்தல் |
படு | படுத்தார | படுத்து | படுத்தவரை | படுத்தல் |
நடி | நடித்தது | நடித்து | நடித்தவனை | நடித்தல் |
பெறு | பெற்றான் | பெற்று | பெற்றோரை | பெறல் |
உண் | உண்டான் | உண்டு | உண்டரை | உண்டல் |
செல் | சென்றார் | சென்று | சென்றவரை/சென்றவன் | செல்லல்/செல்லுதல் |
தொடு | தொட்டது | தொட்டு | தொட்டவனை | தொடல் |
வீழ் | வீழ்ந்தான் | வீழந்து | வீா்ந்தவணை | வீழ்ச்சி |
காண் | கண்டான் | கண்டு | கண்டாரை | காணல் |
தேர் | தேர்ந்தார் | தேர்ந்து | தேர்ந்தவரை | தேர்தல் |
தின் | தின்றது | தின்று | தின்றாரை | தின்னுதல் |
குடி | குடித்தான் | குடித்து | குடித்தாரை | குடித்தல் |
அறு | அறுத்தான் | அறுத்து | அறத்தவனை | அறுத்தல் |
உடை | உடைத்தார் | உடைத்து | உடைத்தவரை | உடைப்பு |
பறி | பறித்தான் | பறித்து | பறித்தானை | பறித்தல் |
ஒடி | ஒடித்தாள் | ஒடித்து | ஒடித்தவனை | ஒடித்தல் |
ஓடு | ஓடியது | ஓடு | ஓடுயதை | ஓட்டம் |
வெட்டு | வெட்டினான் | வெட்டி | வெட்டியவனை | வெட்டல் |
பூசு | பூசினார் | பூசி | பூசியவரை | பூசுதல் |
அடி | அடித்தார் | அடித்து | அடிப்பாரை | அடித்தல் |
இயற்று | இயற்றுனர் | இயற்றி | இயற்றியவணை | இயற்றுதல் |
எழுது | எழுதினார் | எழுதி | எழுதியவனை | எழுதுதல் |
பற | பறந்தது | பறந்து | பறந்ததை | பறத்தல் |
கிழி | கிழித்தது | கிழித்து | கிழித்ததை | கிழித்தல் |
வரை | வரைந்தான் | வரைந்த | வரைந்ததை | வரைதல் |
எய் | எய்தான் | எய்து | எய்தவனை | எய்தல் |
குத்து | குத்தினார் | குத்தி | குத்தியவனை | குத்துதல் |
பாய்ச்சு | பாய்ச்சினார் | பாய்ச்சி | பாய்ச்சியவனை | பாய்ச்சுதல் |
பிள | பிளந்தான் | பிளந்து | பிளந்தானை | பிளத்தை |
கொய் | கொய்தது | கொய்து | கொய்தவனை | கொய்தல் |
அரி | அரிந்தார் | அரிந்து | அரிந்தவரை | அரிதல் |
Related Links வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
Useful Links
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study 2024