வினா எழுத்துகள்

வினா எழுத்துகள்

வினா எழுத்துகள்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து வினா எழுத்துகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.

எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.

•  மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு).

•  மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)

•  மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – (ஏன், நீதானே)

1. அகவினா
எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.

இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.

2. புறவினா
அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.

இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

1. நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)

2. யார் ___________ தெரியுமா? (அவர் / யாது)

3. உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே / என்ன)