ரகர றகர வேறுபாடு

ரகர றகர வேறுபாடு

ரகர றகர வேறுபாடு

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ரகர றகர வேறுபாடு பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

ர ற எழுத்துகள்

–  நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.

– நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

பொருள் வேறுபாடு உணர்க
ஏரி – நீர்நிலை
ஏறி – மேலே ஏறி
கூரை – வீட்டின் கூரை
கூறை – புடவை

மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.
Answer:
1. அரம் – ஒரு கருவி
2. அறி – தெரிந்து கொள்
3. உரிய – சொந்தமான
4. அருகு – பக்கம்
5. அரை – பாதி
6. இரங்கு – மனமுருகு
7. இறங்கு – கீழிறங்கு
8. உரை – சொல்
9. கூரை – முகடு
10. தரு – மரம்
11. மாரி – மழை
12. மறை – வேதம்
13. மறம் – வீரம்
14. ஆழி – கடல்
15. குழம்பு – காய்கறிக் குழம்பு
16. சோளம் – தானியம்
17. ஆணை – கட்டளை
18. கணி – கணக்கிடு
19. வளி – காற்று
20. விழி – கண்திற

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) சிரம் என்பது ——————- (தலை / தளை)
2) இலைக்கு வேறு பெயர் ——————- (தளை / தழை)
3) வண்டி இழுப்பது ——————- (காலை / காளை)
4) கடலுக்கு வேறு பெயர் ——————- (பரவை / பறவை)
5) பறவை வானில் ——————- (பறந்தது / பரந்தது)
6) கதவை மெல்லத் ——————- (திறந்தான் / திரந்தான்)
7) பூ ——————- வீசும். (மனம் /மணம்)
8) புலியின் ——————- சிவந்து காணப்படும். (கன் /கண்)
9) குழந்தைகள் ——————- விளையாடினர். (பந்து /பன்து)
10) வீட்டு வாசலில் ——————- போட்டனர். (கோலம் / கோளம்)