
முடியரசன் நானிலம் படைத்தவன் மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன், ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற், பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான், அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் – முடியரசன் யார் கவிஞன்? காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்; கைம்மாறு விழைந்துபுகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்; தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத் தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்; மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்; ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும் ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்; மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்; தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன். – முடியரசன் 1. ஊர் – தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம். 2. இயற்பெயர் – துரைராசு. 3. எழுதிய நூல்கள்
4. பணி : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி. 5. பட்டம் : பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு என்னும் பட்டம் குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பெற்றது. 6. பரிசு: பூங்கொடி என்னும் காவியத்துக்காக 1966 இல் தமிழக அரசு, பரிசு வழங்கியது. 7. சிறப்பு: முடியரசன், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப் பழகியவர். 8. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் – பூங்கொடி. 9. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் – முடியரசன். 10. புதியதொரு விதி செய்வோம் நூலை இற்றியவர் – முடியரசன். 11. நானிலம் படைத்தவன் என்னும் பாடலை இயற்றியவர் – முடியரசன். 12. 'யார் கவிஞன்?' – முடியரசன். |