மரபுத் தமிழ்

மரபுத் தமிழ்

மரபுத் தமிழ்

•  திணை மரபு
•  பால் மரபு
•  இளமைப் பெயர்
•  ஒலிமரபு
•  வினைமரப
•  தொகை மரபு

இளமை மரபுச்சொற்கள்

தாவரங்கள் : காய்களின் இளமை மரபு
அவரைப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சு
கத்தரிப்பிஞ்சு
தென்னங்குரும்பை
வாழைக்கச்சல்
மாவடு

விலங்குகள்: இளமை மரபு
குருவிக்குஞ்சு
கழுதைக்குட்டி
மான்கன்று
சிங்கக்குருளை
கோழிக்குஞ்சு
எருமைக்கன்று
நாய்க்குட்டி
புலிப்பறழ்
ஆட்டுக்குட்டி
பன்றிக்குட்டி
பூனைக்குட்டி
கீரிப்பிள்ளை

ஒலி மரபுச்சொற்கள்
குயில் கூவும்
கிளி கொஞ்சும்
சிங்கம் முழங்கும்
மயில் அகவும்
கூகை குழறும்
நரி ஊளையிடும்
காகம் கரையும்
குதிரை கனைக்கும்
யானை பிளிறும்

வினைமரபுச்சொற்கள்
அப்பம் தின்
நெல் தூற்று
நீர் பாய்ச்சு
காய்கறி அரி
களை பறி
பாட்டுப் பாடு
இலை பறி
பழம் தின்
மலர் கொய்

பயிற்சி : பொருத்துக.
1. காகம் – கூவும்
2. குதிரை – கரையும்
3. சிங்கம் – கனைக்கும்
4. நரி – முழங்கும்
5. குயில் – ஊளையிடும்
விடை: 
1. காகம் – கரையும்
2. குதிரை – கனைக்கும்
3. சிங்கம் – முழங்கும்
4. நரி – ஊளையிடும்
5. குயில் – கூவும்

விலங்குகளின் இளமைப்பெயர்கள்
அணிற்பிள்ளை
கீரிப்பிள்ளை
சிங்கக்குருளை
புலிப்பறழ்
யானைக்கன்று
மான்கன்று
எருமைக்கன்று
குதிரைக்குட்டி
நாய்க்குட்டி
பூனைக்குட்டி
ஆட்டுக்குட்டி
குரங்குக்குட்டி

விலங்குகளின் வாழிடங்கள்
ஆட்டுப்பட்டி
குதிரைக்கொட்டில்
கோழிப்பண்ணை
மாட்டுத்தொழுவம்
யானைக்கூடம்
வாத்துப்பண்ணை

விலங்கு பறவை இனங்களின் ஒலிமரபு
ஆந்தை அலறும்
கழுதை கத்தும்
காக்கை கரையும்
கிளி கொஞ்சும்/பேசும்
குதிரை கனைக்கும்
குயில் கூவும்
கோழி கொக்கரிக்கும்
சிங்கம் முழங்கும்
நரி ஊளையிடும்
புலி உறுமும்
மயில் அகவும்
யானை பிளிறும்

தாவர உறுப்புப் பெயர்கள்
ஈச்ச ஓலை
சோளத்தட்டை
மாவிலை
வேப்பந்தழை
தாழை மடல்
தென்னையோலை
மூங்கில் இலை
கமுகங்கூந்தல்
பனையோலை
பலாஇலை
வாழைஇலை
நெற்றாள்

காய்களின் இளநிலை
அவரைப்பிஞ்சு
தென்னங்குரும்பை
மாவடு
வாழைக்கச்சல்
முருங்கைப்பிஞ்சு
வெள்ளரிப்பிஞ்சு

செடி கொடி மரங்களின் தொகுப்பிடம்
ஆலங்காடு
கம்பங்கொல்லை
பனந்தோப்பு
சவுக்குத்தோப்பு
சோளக்கொல்லை
பலாத்தோப்பு
தென்னந்தோப்பு
தேயிலைத்தோட்டம்
பூந்தோட்டம்

பொருள்களின் தொகுப்பு
ஆட்டுமந்தை
திராட்சைக்குலை
மாட்டுமந்தை
கற்குவியல்
வேலங்காடு
யானைக்கூட்டம்
சாவிக்கொத்து
பசுநிரை
வைக்கோற்போர்

பொருளுக்கேற்ற வினைமரபு
சோறு உண்
பழம் தின்
கோலம் இடு
தீ மூட்டு
நீர் குடி
பாட்டுப் பாடு
தயிர் கடை
படம் வரை
பால் பருகு
கவிதை இயற்று
விளக்கை ஏற்று
கூரை வேய்

பயிற்ச்சி:
1. பொருத்தமான மரபுச்சொல்லைத் தேர்ந்தெழுதுக.
அ) குமரன் பழம்_ _ _ _ _ (உண்டான், தின்றான்)
ஆ) காலையில் சேவல்_ _ _ _ _ (கூவியது, கத்தியது)
இ) ஆட்டு_ _ _ _ _ (கூட்டம், மந்தை) வருகிறது.
ஈ) எங்கள் ஊரில் வாழைத்_ _ _ _ _ (தோட்டம், தோப்பு) உள்ளது.
உ) குயில் (கூவியது, அகவியது)

2. கீழுள்ள பெயர்களுக்கு உரிய இளமைப் பெயர்களை எழுதுக.
அ) கீரி __________
விடை : கீரிப்பிள்ளை
ஆ) மான் __________
விடை : மான்கன்று
இ) சிங்கம் __________
விடை: சிங்கக்குருளை
ஈ) பூனை __________
விடை: பூனைக்குட்டி
உ) எருமை __________
விடை: எருமைக்கன்று
3. பொருத்துக.
அ) மக்கள்  – போர்
ஆ) வீரர் – கற்றை
இ) விறகு – கூட்டம்
ஈ) சுள்ளி – கட்டு
உ) வைக்கோல் – படை
விடை:
அ) மக்கள்  – கூட்டம்
ஆ) வீரர் – படை
இ) விறகு – கட்டு
ஈ) சுள்ளி – கற்றை
உ) வைக்கோல் – போர்

1. சொற்றொடர்களில் அமைந்துள்ள வழுக்களை அறிவோம்.
(எ.கா.)
அரசன் வந்தது (திணைவழு) – அரசன் வந்தான்
கபிலன் பேசினாள் (பால்வழு) – கபிலன் பேசினான்
குயில்கள் கூவியது (எண்வழு)  – குயில்கள் கூவின
கமலா சிரித்தாய் (இடவழு) – கமலா சிரித்தாள்
வளவன் நேற்று வந்திருக்கிறான் (காலவழு) –  வளவன் நேற்று வந்தான்
ஆந்தை கத்தியது (மரபுவழு) – ஆந்தை அலறியது

பயிற்சி : கீழ்க்காணும் தொடர்களில் அமைந்துள்ள வழுக்களை நீக்கி எழுதுக.
1. புலவர் வந்தார்கள்.
விடை: புலவர்கள் வந்தார்கள்
2. மயில் கூவ குயில் அகவியது.
விடை: மயில் அகவ குயில் கூவியது
3. தாமரை படம் வரைந்தான்.
விடை: தாமரை படம் வரைந்தாள்
4. யானைகள் வந்தது.
விடை: யானைகள் வந்தன.
5. பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தது.
விடை: பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தன.
6. வயலில் ஆட்டுக்கன்று மேய்கிறது.
விடை: வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது.
7. பசு குட்டி போட்டது.
விடை: பசு கன்று போட்டது.
8. மாட்டை இலாயத்தில் கட்டு.
விடை: மாட்டை தொழுவத்தில் கட்டு.
9. வெற்றிலைத்தோப்புக்குச் சென்று வெற்றிலை பறித்து வா.
விடை: வெற்றிலைத்தோட்டத்துக்குச் சென்று வெற்றிலை பறித்து வா.
10. யானை முழங்கும்.
விடை: யானை பிளிறும்

2. பொருத்துக.
1. சிங்கம் கனைத்தது – எண் வழு
2. கண்ணன் படித்தாள் – காலவழு
3. இன்று வருவான் – திணைவழு
4. கபிலன் பேசியது – மரபுவழு
5. பறவைகள் பறந்தது – பால்வழு
விடை:
1. சிங்கம் கனைத்தது – மரபுவழு
2. கண்ணன் படித்தாள் – திணைவழு
3. இன்று வருவான் – பால்வழு
4. கபிலன் பேசியது –காலவழு
5. பறவைகள் பறந்தது – எண் வழு

மரபுச்சொற்கள்

பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். “நாய் கத்தியது” எனக் கூறுகிறோம். அவ்வாறு கூறுதல் கூடாது. “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத்தொடர். இவ்வாறு வரும் சில மரபுகள் குறித்து இங்குக் காண்போம்.

ஒலிமரபு
ஆடு கத்தும்
எருது எக்காளமிடும்
குதிரை கனைக்கும்
குரங்கு அலப்பும்
சிங்கம் முழங்கும்
நரி ஊளையிடும்
புலி உறுமும்
பூனை சீறும்
யானை பிளிறும்
எலி கீச்சிடும்
ஆந்தை அலறும்
காகம் கரையும்
கிளி பேசும்
குயில் கூவும்
கூகை குழறும்
கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்
புறா குனுகும்
மயில் அகவும்
வண்டு முரலும்

வினை மரபு
அம்பு எய்தார்.
ஆடை நெய்தார்.
உமி கருக்கினாள்.
ஓவியம் புனைந்தான்.
கூடை முடைந்தார்.
சுவர் எழுப்பினான்.
செய்யுள் இயற்றினான்.
சோறு உண்டான்.
தண்ணீர் குடித்தான்.
பால் பருகினாள்.
பூப் பறித்தாள்.
மரம் வெட்டினான்.
மாத்திரை விழுங்கினான்.
முறுக்குத் தின்றான்.

மரபுச் சொற்களை அறிக.
பலாப்பிஞ்சு  –  பலாமூசு
வாழைப்பிஞ்சு  – வாழைக் கச்சல்
முருங்கைப் பிஞ்சு  – முருங்கைச் சரடு
அவரைப் பிஞ்சு  –  அவரைப்பொட்டு
மாம்பிஞ்சு  –  மாவடு
இளந்தேங்காய்  –  வழுக்கை
முற்றிய தேங்காய்  –  நெற்று.

‘ஆந்தை அலறும்’ என்பது……………
அ) ஒலி மரபு
ஆ) வினை மரபு
இ) இளமைப்பெயர் மரபு
ஈ) இருப்பிடப் பெயர் மரபு
விடை : அ) ஒலி மரபு

புலியின் இளமைப் பெயர்……………
அ) புலிப்பறழ்
ஆ) புலிக்குட்டி
இ) புலிக்கன்று
ஈ) புலிப்பிள்ளை
விடை: அ) புலிப்பறழ்

‘பூப்பறித்தாள்’ என்பது
அ) வினை மரபு
ஆ) பெயர் மரபு
இ) ஒலி மரபு
ஈ) இளமைப்பெயர் மரபு
விடை: அ) வினை மரபு

ஒலி மரபுகளைப் பொருத்துக.
1. சிங்கம் – கூவும
2. அணில் – அலப்பும்
3. மயில் – முழங்கும்
4. குயில் – கீச்சிடும்
5. குரங்கு – அகவும்
விடை:
1. சிங்கம் – முழங்கும்
2. அணில் – கீச்சிடும்
3. மயில் – அகவும்
4. குயில் – கூவும்
5. குரங்கு – அலப்பும்