
பேச்சு வழக்கு தொடர்களிலுள்ள பிழை திருத்தம்
• கண்மாய் – கம்மாய்
• உறைக்கிணறு – ஊரணி
பேச்சு வழக்கு | எழுத்து வழக்கு (தமிழ் சொல்) |
தம்பீ? எங்க நிக்கிறே? | தம்பி எங்கே நிற்கிறாய்? |
நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது. | நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது. |
அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன் | அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன் |
அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு! | அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன. |
அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன். | அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். |
ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்! | நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் |
இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்… | இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன். |
சரிங்கண்ணே ! | சரி அண்ணா ! |
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ. | இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது.நீயும் புரிந்துகொள். |
நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும். | நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும். |
அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான. | அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான். |
வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு. | வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார். |
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது | பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது. |
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் | இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல். |
நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது. | நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது. |
எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது. | எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. |
ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். | ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். |
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன. | வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. |
ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது. | ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது. |
இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும். | இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும். |
சாயந்தரம் நேரத்தோடு வராட்டி அம்மா திட்டும். | மாலையில் விரைவாக வீட்டிற்கு வரவில்லை எனில் அம்மா திட்டுவார்கள். |
சித்த நாழி உக்காரு, இந்தா வந்திடறேன். | சற்று நேரம் அமருங்கள் இதோ வந்து விடுகிறேன். |
அம்மாசிச் சோறு ஆசைப்பட்டா கெடைக்காது. | அமாவாசை சோறு ஆசைப்பட்டால் கிடைக்காது. |
வெளையாட்டிலேயே கண்ணா இருக்காதே. | விளையாட்டில் கண்ணாக இருக்காதே |
அம்மாப் பொண்ணுக்குக் கண்ணாலம். அவரவர் வூட்டுலெ சாப்பாடு. | அம்மாள் பெண்ணிற்குத் திருமணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு |
தலைக்கு சீக்கா தேச்சு முழுவனா ஒடம்புக்கு குளிர்ச்சி | தலைக்கு சீகைக்காய் தேய்த்துக் குளித்தால் உடம்பிற்கு குளிர்ச்சி. |
நெல்லுச்சோறு வவுத்துக்கு நோவு தராது | அரிசி உணவு வயிற்றுக்கு நோய் தராது. |
பொண்ணு கண்ணாலத்துக்கு சீர் செனத்தி சேத்தி வச்சிருக்கியா? | பெண்ணின் திருமணத்திற்கு சீர்வரிசை பொருள்கள் சேர்த்து வைத்திருக்கிறாயா? |
விடிகால எந்திருச்சி வெள்ளாம பாக்க போனான். | விடியற்காலையில் எழுந்து விவசாயம் பார்க்கப் போனான். |
மானம் பாத்த பூமியில மழ பெஞ்சு பல வருசமாச்சு. | வானம் பார்த்த பூமியில் மழை பொழிந்து பல வருடங்களாயிற்று |
காத்தாடி வுட்ட மாஞ்சா கவுறு கழுத்த அறுத்ததுப் புடிச்சு | பட்டம் விட்ட மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்தது. |
சிற்சில வட்டார மரபுகளை அறிந்து கொள்க:
1. தீமிதியல் திருவிழாவில் தீக்குழியைப் பூக்குழியென்றும் தீமிதியலைப் பூமிதியல் என்றும் சொல்லுதல் மரபு.
2. நீர்வளம் மிகுந்த பாங்கரில் முப்பூ விளையும் வெள்ளாமையைப் பூ வென்பது மரபு.
3. மிளகுநீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவர் மரபு.
4. திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்கு கீற்று வேய்வதனைக் கொட்டகை யென்பது செட்டி நாட்டு மரபு.
5. ஆசிரியரை ஐயர் என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு.
6. அமிழ்தத்தை உப்புச்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு.