பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்

பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்

பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்

எ. கா

•  பாச்சல் – பாத்தி
•  பதனம் – கவனமாக
•  நீத்துப்பாகம் – மேல்கஞ்சி
•  கடிச்சு குடித்தல் – வாய்வைத்துக் குடித்தல்
•  மகுளி – சோற்றுக் கஞ்சி
•  வரத்துக்காரன் – புதியவன்
•  சடைத்து புளித்து – சலிப்பு
•  அலுக்கம் – அழுத்தம் (அணுக்கம்)
•  தொலவட்டையில் – தொலைவில்
•  வூடு – வீடு
•  வேல – வேலை
•  தண்ணீ – தண்ணீர்
•  வௌக்கு – விளக்கு

1. அம்மா பசிக்கிது. எனக்குச் சோறு வேணும் – அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்.
2. சொல்லு – சொல்
3. நில்லு – நில்
4. வந்தியா – வந்தாயா?
5. சாப்ட்டியா – சாப்பிட்டாயா?
6. கோர்த்து – கோத்து
7. சுவற்றில் – சுவரில்
8. நாட்கள் – நாள்கள்
9. மனதில் – மனத்தில்
10. பதட்டம் – பதற்றம்
11. சிலவு – செலவு
12. அருகாமையில் – அருகில்
13. பாரு – பார்
14. இங்க – இங்கு
15. தனியா – தனியாக
16. தெரியல – தெரியவில்லை
17. கதுவு – கதவு
18. ரயிலு – இரயில்
19. புக்கு – புத்தகம்
20. நாக்காலி – நாற்காலி
21. வெத்தல – வெற்றிலை
22. அஞ்சு – ஐந்து
23. செல்லு – செல்
24. கொல்லு – கொல்
25. வெல்லு – வெல்
26. தள்ளு – தள்
27. துள்ளு – துள்
28. போனியா – போனாயா?
29. பார்த்தியா – பார்த்தாயா?
30. சொன்னியா – சொன்னாயா?
31. கொடுத்தியா – கொடுத்தாய?
32. செய்தியா – செய்தாயா?
33. சாப்ட்டான் – சாப்பிட்டான்
34. இந்தா – பிடித்துக்கொள்
35. வாங்கியாந்த – வாங்கிவந்த
36. கிளம்பு – புறப்படு
37. செம்ம – செம்மை
38. செய்தியா – செய்தாயா?
39. புட்டு – பிட்டு
40. அங்க – அங்கே
41. தேத்தண்ணி – தேநீர்
42. கத்திரிக்கோல் – கத்தரிக்கோல்
43. படிச்சான் – படித்தான்
44. ஆப்பை – அகப்பை
45. கூப்டியா? – கூப்பிட்டாயா?
46. இன்னா சொல்லுற? – என்ன சொல்கிறாய்
47. நோம்பு – நோன்பு
48. காத்தால – காலையில்
49. சாந்தரம் – மாலையில்
50. கழட்டு – கழற்று
51. துகை – தொகை
52. சிகப்பு – சிவப்பு
53. பண்டகசாலை – பண்டசாலை
54. புண்ணாக்கு – பிண்ணாக்கு
55. ரொம்ப – நிரம்ப
56. வத்தல் – வற்றல்
57. வெண்ணை – வெண்ணெய்
58. பசும்பால் – பசுப்பால்
59. வலதுபக்கம் – வலப்பக்கம்
60. பேரன் – பெயரன்
61. பேத்தி – பெயர்த்தி
62. வேர்வை – வியர்வை
63. முயற்சித்தார் – முயன்றார்
64. நஞ்சை – நன்செய்
65. தின்றீர் – திருநீறு
66. சீயக்காய் – சிகைக்காய்
67. நாகரீகம் – நாகரிகம்
68. திருவாணி – திருகாணி
69. சாணி – சாணம்
70. பாவக்காய் – பாகற்காய்
71. உசிர் – உயிர்
72. ஊரணி – ஊருணி
73. கடக்கால் – கடைக்கால்