பேச்சு வழக்கு எழுத்து வழக்கு

பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
  • பே‌ச்சு வழ‌க்கு என்பது வா‌ய்வ‌ழி பேசுவது ஆகு‌ம்.
  • எழு‌த்து வழ‌க்கு என்பது ‌சி‌ந்‌தி‌த்து எழுது‌வது ஆகு‌ம்.


வட்டார வழக்குஎழுத்து வழக்கு
அனயம்நிறைவானது
எச்சௌந்தவன்ஏழை எளியவன்
கீழத்தார்புன்செய்யின் ஒரு பகுதி
கெராமுனுசுகிராம நிர்வாக அலுவலர்
கொடவாங்கள்கொடுக்கல் வாங்கள்
திருணைதிண்ணை
தெகஞ்சதமுடிந்ததை
பிஞ்சைபுன்செய்
ரோசிஉரசுதல்
வாந்தக்கமாகஇணக்கமாக
வெதப்பெட்டிவிதைப்பெட்டி
வெள்ளங்காட்டிவிடியற்காலை
வேண்டாறவேண்டாத
திருகைமாவு அரைக்கும் கம்
குறுக்கம்சிறிய நிலபரப்பு
கடகம்ஓலைப்பெட்டி


பேச்சு வழக்கு எழுத்து வழக்கு 
கோர்த்து கோத்து
சுவற்றில்சுவரில்
நாட்கள்நாள்கள்
மனதில்மனத்தில்
பதட்டம்பதற்றம்
சிலவுசெலவு
அருகாமையில்அருகில்
பாம்புப்புத்துபாம்புப்புற்று
பட்டம் பறக்குதுபட்டம் பறக்கிறது
தண்ணீர் குடிச்சான்தண்ணீர் குடித்தான்
பூனை ஓடுச்சுபூனை ஓடியது
அப்பளம் உடைஞ்சதுஅப்பளம் உடைந்தது
கை வலிச்சுதுகை வலித்தது
வேகலவேகவில்லை
பெய்ஞ்சுதுபெய்தது
எரியல்எரியவில்லை
புல்லுபுல்
ஒசந்தஉயர்ந்த
ஊறவச்சுஊறவைத்து
தெறந்துதிறந்து
எருவுஎரு
தலகாணிதலையணை
வேர்வைவியர்வை
வூடுவீடு
வெலவேலை
தண்ணீதண்ணீர்
வெளக்குவிளக்கு
ஊரணிஊருணி
எண்ணைஎண்ணெய்
ஒருவள்ஒருத்தி
ஒருக்கால்ஒருகால்
ஒண்டியாய்ஒன்றியாய்
கவுறுகயிறு
கார்த்தல்காத்தல்
கத்தாளைகற்றாளை
கோர்வைகோவை
சுவத்தில்சுவரில்
சேலைசீலை
சிறுவாடுசிறுபாரு
தண்ணீதண்ணீர்
துடங்குதொடங்கு
பயந்தாங்குள்ளிபயங்கொள்ளி
பசறு, பசருபயறு
பேத்தல்பிதற்றல்
பிந்துக்குளிபித்துக்கொளி
மானவாரிவானவாரி
சிறங்குசிரங்கு
வயிறாறவயிறார
வுடும்புஉடும்பு
சாப்டான்சாப்பிட்டான்
இந்தாபிடித்துக்கொள்
வாங்கியாந்தவாங்கிவந்த
கெளம்புபுறப்படு
செம்மசெம்மை
பார்த்தியா ?பார்த்தாயா ?
செல்லுசெல்
செய்தியாசெய்தாயா
கொடுத்தியாகொடுத்தாயா
×-×-×-×-×-×-××-×-×-×-×-×-×
வாங்கியாந்தவாங்கிவந்தது
செவ்வாக்கெழமசெவ்வாய்க்கிழமை
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு., புரிஞ்சிக்கோஇப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது.நீயும் புரிந்துகொள்
நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும்
அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான்.
வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார்.
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.
“தம்பீ? எங்க நிக்கிறே?”
“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்…”
“சரிங்கண்ணே ”
“தம்பி எங்கே நிற்கிறாய்?”
“நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.”
“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன்.”
“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன.”
“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.”
“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ”
“இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”
“சரி அண்ணா !”