முன்னுரை
இப்பகுதியில் பிழை திருத்தம் tnpsc வரையிலான அனைத்தையும் தொகுத்து கொடுத்துள்ளோம்.
ஏழுதுவதைப் பிழையின்றி எழுதினால்தன் படிப்போர்க்குப் பொரு மயக்கம் ஏற்படாது. திணை, பால், எண், இடம், காலம், மரபு ஆகியவற்றில் வழுவின்றி எழுதப் பயிற்சி பெற வேண்டும். சில வகைகள் மட்டும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
வாக்கியப் பிழையும் திருத்தமும் :
வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.
- உயர்திணைப் எழுவாய் உயர்திணைப் பயனிலையைப் பெற்று வரும். அது போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின் அஃறிணை வினைமுற்றே வர வேண்டும்.
- எழுவாய் ஐம்பால்களுள் எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
- கள் விகுதி பெற்ற எழுவாய், வினைமுற்றிலும் கள் விகுதி பெறும். அதே போன்று எழுவாய் ‘அர்’ விகுதி பெற்றிருந்தால் வினைமுற்றிலும் ‘அர்’ விகுதி வருதல் அவசியம்.
- எழுவாய் ஒருமையாயின் வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்.
- தொடரில் காலத்தை உணர்த்தும் குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றே எழுத வேண்டும்.
- கூறியது கூறல் ஒரே தொடரில் இடம் பெறக் கூடாது.
- வாக்கியத்தில் உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் கலந்து வந்தால், சிறப்பு கருதின் உயர்திணைப் பயனிலைக் கொண்டும், இழிவு கருதின் அஃறிணைப் பயனிலைக் கொண்டும் வாக்கியத்தை முடிக்க வேண்டும்.
- உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் விரவி வந்தால், மிகுதி பற்றி ஒருதிணை வினை கொண்டு முடித்தல் வேண்டும்.
எ.கா.
தங்கை வருகிறது | பிழை |
தங்கை வருகிறாள் | திருத்தம் |
தம்பி வந்தார் | பிழை |
தம்பி வந்தான் | திருத்தம் |
மாணவர்கள் எழுதினர் | பிழை |
மாணவர்கள் எழுதினார்கள் | திருத்தம் |
ஆசிரியர் பலர் வந்தார்கள் | பிழை |
ஆசிரியர் பலர் வந்தனர் | திருத்தம் |
மங்கையர்க்கரசியார் பேசினாள் | பிழை |
மங்கையர்க்கரசியார் பேசினார் | திருத்தம் |
என் எழுதுகோல் இதுவல்ல | பிழை |
என் எழுதுகோல் இதுவன்று | திருத்தம் |
அவன் மாணவன் அல்ல | பிழை |
அவன் மாணவன் அல்லன் | திருத்தம் |
உடைகள் கிழிந்து விட்டது | பிழை |
உடைகள் கிழிந்து விட்டன | திருத்தம் |
செழியன் இன்று ஒரு புதிய நூல் ஒன்றை வாங்கினான் | பிழை |
செழியன் இன்று புதிய நூல் ஒன்று வாங்கினான் | திருத்தம் |
தலைவர் நாளை வந்தார் | பிழை |
தலைவர் நாளை வருவார் | திருத்தம் |
ஆமைகள் வேகமாக ஓடாது | பிழை |
ஆமைகள் வேகமாக ஓடா | திருத்தம் |
நதிகள் தோன்றுமிடத்தில் சிறியதாய் இருக்கும் | பிழை |
நதிகள் தோன்றுமிடததில் சிறியனவாய் இருக்கும் | திருத்தம் |
தலைவர் தன் தொண்டர்களுக்கு நன்றி கூறினார் | பிழை |
தலைவர் தம் தொண்டர்களுக்கு நன்றி கூறினார் | திருத்தம் |
ஒவ்வொரு ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. | பிழை |
ஒவ்வோர் ஊரிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. | திருத்தம் |
தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தொன்மையானது | பிழை |
தொல்காப்பியம் எனும் இலக்கண நூல் தொன்மையானது | திருத்தம் |
மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர் | பிழை |
மூடனும் மாடும் குளத்தில் குளித்தன | திருத்தம் |
ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு மாடுகளும் மிதந்து சென்றனர். | பிழை |
ஆற்று வெள்ளத்தில் மக்களும், மரங்களும், குடிசைகளும், ஆடு மாடுகளும் மிதந்து சென்றன. | திருத்தம் |
ஆறு காலிழந்த ஆண்களும், நான்கு கையிழந்த பெண்களும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன. | பிழை |
காலிழந்த ஆண்கள் அறுவரும், கையிழந்த பெண்கள் நால்வரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டன. | திருத்தம் |
Related Links பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Useful Links
⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study