
பழமொழிகள் பொருளறிதல்
ஆங்கில மொழி | தமிழ் பழமொழி |
All that glitter is not gold | மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
Art is long but life is short | கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Barking dog seldom bite | குரைக்கின்ற நாய் கடிக்காது |
Even a pin is good for something | சிறுதுரும்பும் பல் குத்த உதவும் |
Take time by the forelock | காலத்தே கடமையைச் செய் |
Bend the tree while it is young. | ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா |
As is the mother, so is her daughter. | தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை |
A friend in need is a friend indeed. | உயிர் காப்பான் தோழன் |
A man of courage never wants weapons | வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் |
A man without money is a bow without an arrow. | பணமில்லாதவன் பிணம் |
Blood is thicker than water | தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் |
Diamond cuts diamond | முள்ளை முள்ளால் எடு |
Lost time is never found again | இழந்த நேரம் மீண்டும் கிடைக்காது |
Experience is the mother of science | அனுபவமே அறிவியலின் தாய் |
Haste makes waste | பதறாத காரியம் சிதறாது |
Crying child will get milk. | அழுத பிள்ளை பால் குடிக்கும் |
Health is wealth | நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
Look before you leap | ஆழம் அறியாமல் காலைவிடாதே |
Make hay while the sunshines. | காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
Many drops make shower | சிறுதுளி பெருவெள்ளம் |
Measure is treasure | அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு |
The face is the index of the mind | அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
The childhood shows the man | விளையும் பயிர் முளையிலே தெரியும் |
All is well that ends well | முதற்கோணல் முற்றிலும் கோணல் |
A good markman may miss | ஆனைக்கும் அடி சறுக்கும் |
In a fiddler’s house all are dancers | கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் |
No man can flay a stone | கல்லிலே நார் உரிக்க முடியுமா? |
Difficulties give way to diligence | கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் |
Command your man and do it yourself | வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன் |
Charity is a double blessing | தருமம் தலை காக்கும் |
One flower makes no garland | தனிமரம் தோப்பாகாது |
Little wealth little care | மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை |
Prevention is better than cure | வருமுன் காப்பதே சிறந்தது |
Something is better than nothing | ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சருக்கரை |
Though he endeavours all he can. | புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்டாற்போல் |
One doth the act, another hath the blow | பழி ஒரிடம், பாவம் ஒரிடம் |
Every fox must at last pay his skin to the flaye | பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் |
The day has eyes, the night has ears | பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே |
What comes from the cradle goes to the grave | தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் |
The wise and the fool have their follows | இனம் இனத்தோடு சேரும் |
He who has an art has everywhere a part | கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு |
Being on the sea, sail being on the land, settled | காத்திற்கேற்ற கோலம் கொள் |
No rains no grains | மாரியல்லது காரியம் இல்லை |
Bad words find bad acceptance | நுணலும் தன் வாயாற் கெடும் |
Take away the fuel, the boiling will cease | எரிவதனைப் பிடுக்கினால் கொதிப்பது அடங்கும் |
Practice makes perfect | சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் |
The law-maker should not be a law -breaker | வேலியே பயிரை மேய்ந்தாற்போலே |
Misfortune never comes single | பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் |
Look no gift horse in the mouth | தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்கலமா? |
Anger is sworn enemy | கோபம் குலத்தைக் கெடுக்கும் |
Break my head and bring a plaster | பிள்ளையகை் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதுபோல |
There is danger in men’s smiles | தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் |
Like hand and glove | நகமும் சதையும் போல |
Tit for tat | யானைக்கும் பானைக்கும் சரி |
A hungry dog will eat the dung | பசி வந்தால் பத்தும் பறந்து போகும் |
Union is strength | ஒற்றுமையே பலம் |
No smoke without fire | நெருப்பில்லாமல் புகையாது |
Might is right | வல்லான் வகுத்ததே வாய்க்கால் |
Many things fall between the cup and the lip | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை |
Health is wealth | நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் |
Too much of anything is good for nothing | அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு |
No pain no gain | உழைப்பின்றி ஊதியமில்லை |
Knowledge is power | அறிவே ஆற்றல் |
Charity begins at home | தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும் |
Covet all lose all | பேராசை பெருநட்டம் |
Diamonds cut diamonds | முள்ளை முள்ளால் எடு |
East or west, home is the best | எலி வளையானாலும் தனி வளையே சிறந்தது |
Empty vessels make the greatest sound | குறை குடம் கூத்தாடும் |
Money makes many things | பணம் பத்தும் செய்யும் |
Eagles don’t catch flies | புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது |
Time is gold | காலம் பொன் போன்றது |
Old is gold | பழமையே சிறந்தது |
Prevention is better than cure | வருமுன் காப்பதே சிறந்தது |
Slow and steady wins the race | முயற்சி திருவினையாக்கும் |
Birds of the same feather flock together | இனம் இனத்தோடு சேரும் |
Every cock will crow upon his own dunghill | வீட்டில் எலி வெளியில் புலி |
Failure is the stepping stone to success | தோல்வியே வெற்றிக்கு அடிப்படை |
Art is long and life is short | கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Look before you leap | ஆழம் அறியாமல் காலைவிடாதே |
First deserve, then desire | முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா? |
Little strokes fell great oaks | அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் |
Tit for tat | யானைக்கும் பானைக்கும் சரி |
Work is worship | செய்யும் தொழிலே தெய்வம் |
Man proposes; God disposes | நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் |
Strike the rod while it is hot | காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் |
Familiarity breeds contempt | பழகப் பழகப் பாலும் புளிக்கும் |
The mills of god grind slow but sure | அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும் |
The face is the index of the mind | அகத்தின் அழகு முகத்தில் தெரியும். |
All that glitter is not gold | மின்னுவதெல்லாம் பொன்னல்ல |
Art is long but life is short | கல்வி கரையில, கற்பவர் நாள் சில |
Barking dog seldom bite | குரைக்கின்ற நாய் கடிக்காது |
Even a pin is good for something | சிறுதுரும்பும் பல் குத்த உதவும் |
Take time by the forelock | காலத்தே கடமையைச் செய் |
A friend in need is a friend indeed | உயிர் கொடுப்பான் தோழன் |
Self help is the best help | தன் கையே தனக்கு உதவி |
Efforts never fail | முயற்சி திருவினையாக்கும் |
Live and let live | வாழு, வாழவிடு |
Think everybody alike | உன்னைப்போல் பிறரையும் நேசி |
Manners make the man | ஒழுக்கம் உயர்வு தரும் |
All is well that ends well | நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும் |
Misfortunes never come single | பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் |
Do well what you have to do | செய்வன திருந்தச் செய் |
Every tide has its ebb | ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு |
Small rudders guide great ships | சிறு துரும்பும் பல் குத்த உதவும். |
You must walk before run | சிந்தித்துச் செயல்படு |
Distance lends enchantment to the view | இக்கரைக்கு அக்கரை பச்சை |
பொருத்துக:
பழமொழி | பொருள் |
தாயைப்போலப் பிள்ளை, நூலைப்போலச் சேலை. | உறவுமுறை |
ஆடிப்பட்டம் தேடி விதை. | உழவு |
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. | அறிவுரை |
தை பிறந்தால் வழி பிறக்கும் | நம்பிக்கை |
பசியாமல் இருக்க வரந்தருவேன், கொஞ்சம் பழையது இருந்தால் போடு. | நகைச்சுவை |
தமிழ் பழமொழியை ஆங்கிலத்தில் மாற்றுக
தமிழ் பழமொழி | ஆங்கில பழமொழி |
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் | Strike the rod while it is hot |
மின்னுவதெல்லாம் பொன்னில்லை | All that glitter is not gold |
சிறுதுளி பெருவெள்ளம் | little drops make mighty ocean |
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை | Cast no pearls before swine |
தானாடாவிட்டாலும் தன் தசையாடும் | Even one if doesnt react the blood relation makes you to react |
தாயைப் போல் பிள்ளை நூலைப் போலச் சேலை | as is the father so is the son |
வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
- முயற்சி திருவினை ஆக்கும்.
- அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
- சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
- அறிவே ஆற்றல்.
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
- வருமுன் காப்போம்.
- சுத்தம் சோறு போடும்.
- பருவத்தே பயிர் செய்.
- பசித்து புசி.
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
- கல்வி கரையில கற்பவர் நாள் சில.
கல்வி அழகே அழகு. - கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.
- நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
- கற்க கசடற.
- இளமையில் கல்.
- நூல் பல கல்.
'ஆனாலும்' என்னும் இணைப்புச் சொல்லைப் பயன்படுத்திப் பழமொழிகளை எழுதுக.
(எ.கா.) கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி.
1. எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
2. ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
3. ஒடிந்தகோல் அனாலும் ஊன்றுகோல் ஆகும்.
4. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
5. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
பழமொழி அறிவோம்:
1. புண்ணுக்கு மருந்து போட முடியும்; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா?
2. அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது.
3. வெளைச்சலுக்கும், வெள்ளாட்டுக்கும் சென்மப் பகை.
4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
5. உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும்.
6. குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுதாம்.
8. நல்ல பாம்பு படம் எடுக்கலாம்; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா?
9. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
10. ஆள் கூடுனா பாம்பு சாகுமா? கைய ஊனித்தான் கரணம் போட முடியும்.
11. காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
12. இருப்பவனுக்கு புளியேப்பம்; இல்லதாவனுக்கு பசியேப்பம்.
13. நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம்.
14. அவ்வப்பொழுது போக்குவதிலும் வீணாகப் பொழுது போக்குதல் தவப்பொழுது நல்லதும்பாங்க.
15. பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி ஆகுமா?
16. அதிர அடிச்சா உதிர விளையும்.
17. குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி.
18. அகழியில் விழுந்நத முதலைக்கு அதுவே சொர்க்கம்.
19. கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி.
20. அதை விட்டாலும் கதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல.
21. தட்டிப் போட்ட ராட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம.
22. அள்ளுறவன் பக்த்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாது.
23. அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்.
24. குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா கவலையில்லாமல் வாழ்தல்.
தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.
1. இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
5. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல. (நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.)
6. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும். (தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்)
7. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும். (மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்)
8. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது (கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.)
பழமொழிகளை நிறைவு செய்க.
1. உப்பில்லாப் ……………………….
விடை : உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
2. ஒரு பானை ……………………..
விடை : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
3. உப்பிட்டவரை …………………………
விடை : உப்பிட்டவரை உள்ளளவும் நினை
4. விருந்தும் ………………………
விடை : விருந்தும் மருந்தும் மூன்று வேளை
5. அளவுக்கு …………………………
விடை : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
1. யானைக்கும் அடிசறுக்கும்
- தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்து “யானைக்கும் அடிசறுக்கும்” போல ஆயிற்று
2. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
- வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும்.
- வாழ்க்கையில் நாம் பிறருக்கு தீமை செய்து வந்தோம் என்றால் நமக்கும் தீமையே நடக்கும்.
- இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.
3. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
- நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.
4. எறும்பு ஊரக் கல்லும் தேயும்
- வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.
5. ஊழி பெயரினும் தாம் பெயரார்.
- நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாற மாட்டார்கள்.
உரிய எழுத்துகளை நிரப்பிப் பழமொழிகளை உருவாக்குக.
1. இறக்கும் காலம் வந்தால் பிறக்கும் ஈசலுக்கும் சிறகு. (று, ற)
2. எறும்புக்குத் தெரியாத கரும்பு இல்லை. (று, ரு )
3. அரண்மனை உறவைக்காட்டிலும் அடுக்களை உறவு மேல். (ற, ர)
கீழ்க்காணும் பழமொழிகளில் விடுபட்ட இடங்களில் குற்றியலுகரச் சொற்களாக வரும்படி எழுதுக. அச்சொற்களைக் கட்டத்தில் நிரப்புக.
இடமிருந்து வலம்
1. போதுமென்ற மனமே பொன் செய்யும் ________.
விடை: மருந்து
4. ஆத்திரக்காரனுக்குப் புத்தி ________.
விடை: மட்டு
8. ஏற்றம் உண்டானால் இறக்கமும் ________.
விடை: உண்டு
9. காலம் பொன் ________.
விடை: போன்றது
வலமிருந்து இடம்
5. கெடுவான் _______ நினைப்பான்.
விடை: கேடு
மேலிருந்து கீழ்
2. அகத்தின் _______ முகத்தில் தெரியும்.
விடை: முகத்தில்
3. _______ சிறுத்தாலும் காரம் குறையாது.
விடை: கடுகு
6. அடியாத _______ படியாது.
விடை: மாடு
7. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் _______.
விடை: நஞ்சு
கீழிருந்து மேல்
10. ஆற்றில் போட்டாலும் _______ போடு.
விடை: அளந்து
தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க.
1. இளமையில் கல்வி முதுமையில் இன்பம்.
2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
3. கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே.
4. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக
1. Every flower is a Soul blossoming in nature – Gerard De Nerval
மொழி பெயர்க்க : எல்லாப் பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது.
பழமொழி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு.
2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek
மொழி பெயர்க்க : சூரிய அஸ்தமனமே முதலில் எனக்குப் பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.
பழமொழி : தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்.
3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau
மொழி பெயர்க்க : அதிகாலை நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.
பழமொழி : நன்றாய்த் தொடங்கும் செயல் நன்றாகவே முடியும். (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை.
4. Just living is not enough …. one must have sunshine, freedom and a little flower – Hans Christian Anderson Answer:
மொழி பெயர்க்க : வெறுமையான வாழ்வு மட்டும் போதாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.
பழமொழி : இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும், வெறும் வாழ்வு வீணே.
பொன்மொழிகளை மொழி பெயர்க்க.
1. A nation’s culture resides in the hearts and in the soul of its people -Mahatma Gandhi
நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.
2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru
மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.
3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa
அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.
4. You have to dream before your dreams can come true – A.P.J. Abdul Kalam
உங்கள் கனவு நனவாகும் வரை, கனவு காணுங்கள்.
5. Winners don’t do different things; they do things differently – Shiv Khera
வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள்.