
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துன்பம் வெல்லும் கல்வி ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீ சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் – அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும் பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும். 1. காலம்- 13.04.1930 – 08.10. 1959 . 2. பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர். 3. 'துன்பம் வெல்லும் கல்வி' –பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 4. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 5. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். 6. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 7. 'செய்யும் தொழிலே தெய்வம்' என்னும் பாடலை பாடியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். செய்யும் தொழிலே தெய்வம் செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமைதான் நமது செல்வம் கையும் காலுந்தான் உதவி – கொண்ட கடமைதான் நமக்குப் பதவி பயிரை வளர்த்தால் பலனாகும் – அது உயிரைக் காக்கும் உணவாகும் வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும் தினம் வேலையுண்டு குல மானமுண்டு வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம். காயும் ஒருநாள் கனியாகும் – நம் கனவும் ஒருநாள் நனவாகும் காயும் கனியும் விலையாகும் - நம் கனவும் நினைவும் நிலையாகும் – உடல் வாடினாலும் பசி மீறினாலும் வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம். |