நாலடியார்
நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு. *
— சமணமுனிவர்
1. நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இந்நூல், நானூறு பாடல்களைக் கொண்டது.
3. அறக்கருத்துகளைக் கூறுவது. ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
4. இந்நூல், சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு.
5. பதினெண்கீழ்க்கணக்கு – விளக்கம்
சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும். பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினெட்டு நூல்கள். இவற்றை, ‘மேல்கணக்கு நூல்கள்’ எனக் கூறுவர்.
சங்கநூல்களுக்குப்பின் தோன்றியநூல்களின் தொகுப்பு, ‘பதினெண்கீழ்க்கணக்கு’ என வழங்கப்படுகிறது. இத்தொகுப்பிலும் பதினெட்டு நூல்கள் உள்ளன. பதினெண் என்றால், ‘பதினெட்டு’ என்பது பொருள். இந்நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறுவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.
அழியாச் செல்வம்
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற.”
— சமண முனிவர்
6. இது நானூறு வெண்பாக்களால் ஆனது.
7. இந்நூலை நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர்.
8. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது
9. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம்.
10. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்
அ) வீடு
ஆ) கல்வி
இ) பொருள்
ஈ) அணிகலன்
Answer:
ஆ) கல்வி
கல்வியைப் போல் , ……………….. செல்லாத செல்வம் வேறில்லை .
அ) விலையில்லாத
ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
Answer:
ஆ) கேடில்லாத
11. மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்தவர் – சமணமுனிவர்.
கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; – தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. * – சமணமுனிவர்
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
– நாலடியார்
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். — நாலடியார்
Naaladiyar – நாலடியார்

⇒ TNPSC Group 4 Study Material Syllabus Wise 2024
>>> Where to Study – Group 4 Science Where to Study
its really very useful to me thanks a lot sir