தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

தமிழின் தொன்மை, சிறப்பு


1. உலகில் ஆறாயிரத்திற்கும் 6,000 மேற்பட்ட மொழிகள் உள்ளன.

2. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.

3. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் 
– பாரதியார்

4.என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்! 
–  பாரதியார்.

5.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் – தொல்காப்பியம்.

6. தமிழ் எழுத்துகள்
பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

7. வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள் – ட , ய, ழ

8. தமிழ் என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் – தொல்காப்பியம்.

9. "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" – தொல்காப்பியம்.

10. தமிழ்நாடு என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் – சிலப்பதிகாரம்
(வஞ்சிக்காண்டம்).


11. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்" – சிலப்பதிகாரம் (வஞ்சி).

12. தமிழன் என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் – திருநாவுக்கரசு (அப்பர் தேவாரம்)

13. "தமிழன் கண்டாய்" - திருநாவுக்கரசு, அப்பர் தேவாரம் (திருத்தாண்டகம்).

14. அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.

15. பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர்.

16. இலக்கிய, இலக்கண வளம் நிறைந்தது தமிழ் மொழி.

17. பூவின் நிலைகள் – 7





18. ‘மா’ – என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.

19. • இயல்தமிழ் – எண்ணத்தை வெளிப்ப டுத்தும்
• இசைத்தமிழ் – உள்ளத்தை மகிழ்விக்கும்
• நாடகத்தமிழ் –  உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.


20. தமிழ்க் கவிதை வடிவங்கள் – செய்யுள், கவிதை, புதுக்கவிதை, துளிப்பா.

உரைநடை வடிவங்கள் – கட்டுரை, புதினம், சிறுகதை.

21. தற்போது அறிவியல் தமிழ் ,
கணினித்தமிழ் என்று மேலும் மேலும்
வளர்ந்து கொண்டே வருகிறது.






22. இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும்
சில தமிழ்ச்சொற்கள்.


உழவர் நற்றிணை 
வெள்ளம் பதிற்றுப்பத்து
கோடை அகநானூறு 
அரசு திருக்குறள் 
மருந்து அகநானூறு, திருக்குறள்.
உலகம், ஒழி தொல்காப்பியம், கிளவியாக்கம்.
ஊர் தொல்காப்பியம், அகத்திணையியல்.
உயிர் தொல்காப்பியம், கிளவியாக்கம், திருக்குறள்
புகழ்தொல்காப்பியம், வேற்றுமை
செல்தொல்காப்பியம், புறத்திணையியல்.
பார் பெருபாணாற்றுப்படை
முடிதொல்காப்பியம், வினையியல்.


23. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையம் – ஆந்திர பிரதேஷ்.

23. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது மொழி.

24.  மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது எண்  அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

25. மொழியின் முதல் நிலை – பேசுவதும் கேட்பதும்.

26. மொழியின் இரண்டாம் நிலை – எழுதப்படுவதும் படிக்கப்படுவதும்.

27. ’குழந்தையை நல்லாக் கவனிங்க’ என்று கூறும்போது ’கவனி’ என்னும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகிறது.

28. 'நில், கவனி, செல்' என்பதில் ’கவனி’ என்னும் சொல் நின்று, கவனித்துச் செல் என்னும் 'பாதுகாப்புப்' பொருளைத் தருகிறது'.

29. அதுபோலவே ஒலிப்பதன் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும். எடுத்துக்காட்டாக என்னால் போக முடியாது என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும்போது மறுப்பை உணர்த்துகிறது. மென்மையாக ஒலிக்கும்போது இயலாமையை உணர்த்துகிறது.

30. இவ்வாறு சொல்லை ஒலிப்பதில்
ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள்
வேறுபடும் என்பதை,
”எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்”

என்னும் நன்னூல் நூற்பா உணர்த்துகிறது.

31. ‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே
உண்மையான மொழி; எழுதப்படுவதும்
படிக்கப்படுவதும் அடுத்தநிலையி ல்
வைத்துக் கருதப்படும் மொழியாகும்.
இ வையே அன்றி வே று வ கை
மொ ழி நி லை களும் உ ண் டு .
எண்ணப்படுவது, நினைக்கப்படுவது,
கனவு காணப்படுவது ஆகியவையும்
மொழியே ஆகும்’ – மு.வரதராசனார்.

32. பேச்சும் மொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.
'இருக்கு', 'இருக்குது', 'கீது' என்று தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகச் சொல்லுவர்.
 
33. தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் – கன்னடம், தெலுங்கு, மலையாளம்.

34. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது.

35. பேச்சு மொழியை –  உலக வழக்கு 
எழுத்து மொழியை – இலக்கிய வழக்கு

36. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும்
இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது – இரட்டை வழக்கு மொழி (Diglossic Language).

37. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாட்டை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர் – தொல்காப்பியர்.

38. மொழியின் முதல் நிலை – கேட்டல், பேசுதல் (குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது).

39. மொழியின் இரண்டாம் நிலை – படித்தல், எழுதுதல் (பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன).

40. தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு – இரட்டை வழக்கு மொழி.

“எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடிஎலாம் செய்து
 செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.”
– பாவேந்தர் பாரதிதாசன்.


41. ஒலியின் வரிவடிவம் எழுத்து ஆகும். 

பேச்சு மொழி எழுத்து மொழி 
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது.வரி வடிவமே எழுத்து மொழி.
கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக் கொண்டது.நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து இன்றியமையாதது.
பேசுபவரின் உடல்மொழி, ஒழிப்பதில் ஏற்றம் இறக்கம்.இடம் ஆகியவற்றுக்கு ஏற்ப சொற்கள் சிதைவதில்லை
சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும்.சொற்கள் முழுமையாக எழுதப்படும்.
எ. கா: நல்லா சாப்பிட்டான் எ. கா: நன்றாகச் சாப்பிட்டான் 
உணர்ச்சி கூறுகள் அதிகமாக இருக்கும்.உணர்ச்சி கூறுகள் குறைவு.


42. உலக நாடு களையும் மக்களையும்
உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் இயல்பு.

43. “யாதும் ஊரே யாவருங் கேளிர்" – புறநானூறு (கணியன் பூங்குன்றனாரின்).

44. "பரந்த ஆளுமையும் (personality) மனித
நலக் கோட்பாடும்" 
 இலத்தீன்
புலவர் தெறென்ஸ்.


45. “நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று” –இலத்தீன்
புலவர் தெறென்ஸ்.


46. முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று
 
இலக்கணங்கள் இன்றியமையாதவை
என்கிறார் – கோர்டன் ஆல்போர்ட் (Gordon
Allport) உளநூல் வல்லுநர்.

46. “பூட்கையி ல்லோன் யாக்கை போல” – புறநானூறு.

47. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை – ஆல்பர்ட் சுவைட்சர்.

48. திருக்குறளைப் பற்றிக் கூறும்போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்பார் – ஆல்பர்ட் சுவைட்சர்.

49. பிறநாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்காது மொழிமாறும் நாடு – மொழிபெயர் தேயம்.

50. "படுதிரை வையம் பாத்திய பண்பே" –தொல்காப்பியம்.

51."இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்  அறவிலை வணிகன் ஆய் அலன்"புறநானூறு.

52. “ பண்புடைமையாவது யாவர்மாட்டும் அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழிநாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை” – பரிப்பெருமாள்.

53."இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" – புறநானூறு.

54. ”இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே”. –  புறநானூறு.

55. "எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா
மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்” – 
ஸ்டாயிக்வாதிகள்.

56. “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்; நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன்; நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” – மார்க்ஸ் அரேலியஸ்.

57.  திருவள்ளுவரை “உலகப் புலவர்“ என்று போற்றியவர் – ஜி.யு. போப்

58. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் குறிப்பிடத்தக்கவர் – தனிநாயகம் அடிகள்.

59. உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தவர் – தனிநாயகம் அடிகள்.

60. தமிழ்ப் பண்பாடு என்ற இதழை இயற்றியவர் – தனிநாயகம் அடிகள்.

61.உலக மொழிகளில் சிறந்தது தமிழ்மொழியே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

62. திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.

63. கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் – ச.அகத்தியலிங்கம்.

64.  "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது" – டாக்டர் கிரௌல்.

65. உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி – குமரிக்கண்டம்.

66. பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் நாஞ்சில்நாட்டுத் தமிழ்ச் சொற்கள்.

67. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் – கால்டுவெல்.

68. "எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே" – தொல்காப்பியம்.

69. எல்லாமொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும்.

70. புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை உவமேயம் பயன்படுத்தி அழகு சேர்த்தனர்.

71. உலகம் ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது – தொல்காப்பியம்.

72. 'நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்...'
தொல்காப்பியம்


மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூதத்து இயற்கை போல்... – 
புறநானூறு


73. உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது. பழைமையானது – வானியல் கல்வி.

73. உலகம் தட்டை இல்லை, உருண்டையானது
முறையாகக் கணித்துக் கூறியவர் –
நிக்கோலஸ்கிராப்ஸ் (போலந்து நாட்டைச் சார்ந்தவர்) (15–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்).

74. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் – இளங்கோவடிகள்.

75. ஞாயிற்று வட்டம் – புறநானூறு

76. "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் " – 
புறநானூறு.

77. தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை – நாள்மீன்.

78. ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக்கூடியவற்றைக் – கோள்மீன்.

79. திங்கள் மறைப்பு – சந்திரகிரகணம்.

80. திங்களின் நிலையைக் கருதித் தேய்பிறை, வளர்பிறை எனவும் குறித்துள்ளனர்.

81. செந்நிறமாய் இருந்த கோளைச் – செவ்வாய்
வெண்மை நிறமுடைய கோளை – வெள்ளி (விடிவெள்ளி)
புதிதாகக் கண்டறிந்த கோளைப் – புதன் (அறிவன்)
பெரிய கோளாக வலம் வருவதனையே – வியாழன்.
வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும்.
சனிக்கோளைக் – காரிக்கோள் என அழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக இன்றைய அறிவியல் ஆய்வு கூறுகிறது


82. "வலவன் ஏவா வானவூர்தி" – புறநானூறு.

83. வானூர்தி ஓட்டுகிறவனைத் தமிழில் – வலவன்.

83. தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது – வானியல் அறிவியல்.

84. வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் – ஞாயிறு

85. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" – ஔவையார்.

86. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" – கணியன் பூங்குன்றன் (புறநானூறு).

87. பழங்காலத்தில், தமிழர் பிற நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம் எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

88. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற் பிரிவு

• காலில் (தரைவழி பிரிதல்)
• கலத்தில் (நீர்வழி பிரிதல்)

89. பழந்தமிழர், கிரேக்கரையும் உரோமானியரையும் யவனர் என அழைத்தனர்.

90. ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி என்பவை கடலைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்.

91. மரக்கலத்துக்கும் தமிழ்மொழியில் பெயர்கள் பல வழங்குகின்றன. அவை: கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.



92. கடலில் செல்லும் பெரிய கலம் – நாவாய்.

93. புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன. அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

94. கடற்கரை துறைமுகங்கள் 
காவிரிப்பூம்பட்டினம் – சோழ நாடு
முசிறி – 
சேர நாடு 
கொற்கை – 
பாண்டிய நாடு

94. சேர மன்னர்க்குரிய துறைமுகம் – முசிறி

95. பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள். இச்செய்தி – அகநானூறு.

96. பாண்டியநாட்டு வளத்தைப் பெருக்கியது கொற்கைத் துறைமுகம். 

97. பாண்டியநாட்டு வளத்தைப் பெருக்கியது கொற்கைத் துறைமுகம். இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததனை குறிப்பிட்டவர் – மார்க்கோபோலோ (வெனிசு நாட்டறிஞர்).

98. ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது. 

99. மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன. 

100. "விளைந்து முதிர்ந்த விழுமுத்து"  –மதுரைக்காஞ்சி.

101. கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர்.

102. சோழநாட்டின் துறைமுகம் – காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்),

103. ஏற்றுமதியான பொருள்களுள்
இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி.

104. இறக்குமதி ஆயினவை
சீனத்துப் பட்டும் சருக்கரையும்.
105. வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல்கள் –  பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி.

106. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி" – புறப்பொருள் வெண்பாமாலை.

107. "திரைகடலோடியும் திரவியம் தேடு" – ஒளவையாரும்.

108. சாதுவன் வாணிகம் செய்யும்பொருட்டுக் கடல்கடந்து சென்ற குறிப்பு –  மணிமேகலை.

109. தமிழர் சிங்கப்பூர், மலேசியா, பினாங்குத் தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

110. பரப்பளவில் சிறியதான ரியூனியன் தீவில் வாழ்பவர்களுள் பெரும்பான்மையோர் தமிழரே. அவர்கள் பிரெஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிருந்து ஒப்பந்தக் கூலிகளாக அங்குக் குடியமர்த்தப்பட்டார்கள்.

111. சிங்கப்பூர், மொரிசியசு, மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.

112. தமிழர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகள் பலவற்றில் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர்.

113. ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 192+ 43 (தற்போது) = 235.

114. தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக ரியூனியன் தீவில்  குடியமர்த்தப்பட்டார்கள்.

115. "வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி" – என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் –  பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

116. தமிழ், 3000 ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளம்மிக்க மொழி.

117. 'திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்' என்று பரிதிமாற்கலைஞர்செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

118. "பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.

119. உலகில் 6,000 மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர் மொழிநூலார்.

120. இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் 3000.

121. இவற்றுள்ளும் ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், சமற்கிருதம், இலத்தீன், ஈப்ரு, கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இலத்தீனும் ஈப்ருவும் வழக்கிழந்து போயின.

122. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளுள் ஒன்று – தமிழ்மொழி.

123. ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு, அதன் பழைமையும் வளமையும் மட்டும் போதா. அம்மொழிக்கு வேண்டியவை –

•  பேச்சுமொழியாக
• எழுத்துமொழியாக
• ஆட்சி மொழியாக, 
• நீதிமன்ற மொழியாக
• பயிற்றுமொழியாக நிலைபெற்றிடல்வேண்டும்.

124. இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, காலத்திற்கேற்ற புதுமை எனப் பலவகைகளிலும் சிறப்புப் பெற்றிருத்தல்வேண்டும். தமிழ்மொழிக்கு இவை அனைத்தும் பொருந்தும்.

125. கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் – குமரிக்கண்டம். (இலெமூரியாக் கண்டம்).

126. முதல் மாந்தன் தோன்றிய இடம் – குமரிக் கண்டம்.

127. தமிழ்ச்சான்றோரால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் இன்றைய மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது.

128. 'என்றுமுள தென்தமிழ்'  கம்பர்.

129. தமிழ் ஒன்றே பிறமொழிச் சொற்களை நீக்கினாலும் இனிதின் இயங்கவல்லது.

130. "கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம் முதலிய மொழிகளுக்குத் தாய்மொழியாகத் திகழ்கிறது. அது பிராகுயி முதலான வடபுல மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது" என்பார் –  கால்டுவெல்.

131. வேர்ச்சொற்கள் – 1800 (ஆயிரத்தெண்ணூறு) ----note this

132. உறவுப்பெயர்கள் – 180 (நூற்றெண்பது)

133. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகத் திகழ்கிறது தமிழ்.

134. இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது தமிழ்.

135. தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர்.

136. மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்த நூல் – திருக்குறள்.

137. உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை – சங்க இலக்கியங்கள்.

138. சங்க இலக்கியங்களின் மொத்த அடிகள் 26,350

139. "அக்காலத்தே இவ்வளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை" – கமில்சுவலபில் செக் நாட்டு மொழியியல் பேரறிஞரின் முடிபு.

140. "தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும், அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழியென்றும்" பாராட்டியவர்
  – மாக்கமுல்லர்.

141. 'சங்க இலக்கியம்' மற்றொரு பெயர் – மக்கள் இலக்கியம்.

142. தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்பார் – கெல்லட்.

143. நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழைமையானது – தொல்காப்பியம். 

144. எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் நூல் –தொல்காப்பியம்.

145. தொல்காப்பியரின் ஆசிரியர் –அகத்தியர்.

146. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியவர் –  அகத்தியர் (அகத்தியர்).

147. 'அகத்தியம்' என்னும் நூலை இயற்றியவர் –  அகத்தியர்.

148. சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம் கடந்தவை; இயற்கையோடு இயைந்தவை; உலகத்தார் ஏற்கும் பொதுக் கருத்துகள் உடையவை; மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துகளை மொழிபவை.

149. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், பிறன்மனை நோக்காப் பேராண்மை – சங்க இலக்கியங்கள்.

150. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' – புறநானூறு.

151. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' – திருக்குறள்.

152. திருக்குறள் மக்கட் பண்பில்லாதாரை மரம் எனப் பழிக்கிறது.

153. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" குடிமக்கள் காப்பியமான –  சிலப்பதிகாரம்.

154. 'இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது' என்பார் – முனைவர் எமினோ.

155. ஒருமொழிக்கு முப்பத்துமூன்று ஒலிகள் இருந்தாலே போதும் என்பர். ஆனால், தமிழோ ஐந்நூறு (500) ஒலிகளைக் கொண்டுள்ளது.

156. தமிழைச் செம்மொழி என அறிவித்தல்வேண்டும் என்ற முயற்சி 1901இல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது.

157. நடுவணரசு 2004 -ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது.

158. பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டது செம்மொழி எனக் கூறியவர் – பாவாணர்.


திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்


1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது – தமிழ்.

2. தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும்.

2. முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் முதலியவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர்.

3. இவற்றின் மூலம் பருப்பொருள்களை மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது, நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி பயன்படுத்தி மொழியை வளர்த்தனர்.

4. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300 க்கும் மேல் 

5. மொழிக்குடும்பங்கள் – 4

  1. இந்தோ – ஆசிய மொழிகள்
  2. திராவிட மொழிகள்
  3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
  4. சீன – திபெத்திய மொழிகள்

6. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர் – ச. அகத்தியலிங்கம்.

7. உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று என்று எந்த அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – மொகஞ்சதாரோ – ஹரப்பா.

8. திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுவது – மொகஞ்சதாரோ – ஹரப்பா நாகரிகம்.

9. திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது.

10. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் – குமரிலபட்டர்.

11. தமிழ் என்னும் சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

12.    தமிழ் ➔ தமிழா ➔ டிரமிலா ➔ ட்ரமிலா ➔ த்ராவிடா ➔ திராவிடா - ஹீராஸ் பாதிரியார்.

13. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் – வில்லியம் ஜோன்ஸ்.

14. 1816 ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

15. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தவர் – பிரான்சிஸ் எல்லிஸ்.

16. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டவர் –  பிரான்சிஸ் எல்லிஸ்.

17. மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதிவர் – ஹோக்கன் / மாக்ஸ் முல்லர்.(மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்).

18. 1856 -இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை இற்றியவர் – கால்டுவெல்.

19. திராவிட மொழிகள். ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார் – கால்டுவெல்.

20. திராவிட மொழிக்குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் – மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  1. தென்திராவிட மொழிகள்
  2. நடுத்திராவிட மொழிகள்
  3. வடதிராவிட மொழிகள்

21. மேலுள்ள பட்டியலில் உள்ள 24 மொழிகள் தவிர அண்மையில்க ண்டறியப்பட்ட எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் மொத்தம் – 28

22. திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை கொண்டிருப்பது – பொதுவான அடிச்சொற்களை.

23. "தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் கு டும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக்கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்" – கால்டுவெல்.



24. திராவிட மொழிகளில் பால்பாகுபாடு எதனை ஒட்டி அமைந்துள்ளது – பொருள்களின் தன்மையை.

25. வடமொழியில் பால்பாகுபாடு அமையவில்லை.

26. எந்த மொழியில் உயிரற்ற பொருள்களும் கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும்கூட ஆண், பெண் என்று பாகுபடுத்தப்படுகின்றன ? – வடமொழியில்.

27. எந்த மொழியில் கைவிரல்கள் பெண்பால் என்றும் கால்விரல்கள் ஆண்பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன ? – வடமொழி மற்றும் ஜெர்மன் மொழி.

28. எந்த மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டுமே தவிர திணை, பால், எண், இடம் ஆகிய வேறுபாட்டைக் காட்டுவதில்லை. – ஆங்கிலம் போன்ற.

29. எந்த மொழிகளின் வினைச்சொற்கள் திணை, பால், எண், இடம், காலம் ஆகிய வேறுபாட்டை தெளிவாகக் காட்டும் – திராவிட மொழி.

30. திணை, பால், எண் ஆகியவற்றைக் மட்டுமே காட்டும் மொழி – மலையாள மொழி.

31. பால் காட்டும் விகுதிகள் இல்லாத மொழி – மலையாள மொழி.

32. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்துகொள்ள முடியும் மொழி – மலையாள மொழி.

33. தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதரசன். (மு.வ) [சாகித்திய அகாதெமி].

34. இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில்தமிழ்இ லக்கணம் – செ. வை. சண்முகம்.

35. மலையாள இலக்கிய வலாறு –  ராம சரிதம்,  லீலா திலகம் (சாகித்திய அகாதெமி).


36. திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு என்னும் பொருளைத் தருவது. திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் என்னும் சொற்றொடர்களுள் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கூறியவர் – கால்டுவெல்.

37. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் – குமரிலபட்டர்.

38. திராவிடம் என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார் – கால்டுவெல்.

39. மொழியியல் அறிஞர், தொடக்கக் காலத்தில் தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளையும் –  தமிளியன் (Tamilian) அல்லது தமுலிக் (Tamulic) என்று வழங்கினர்.

40. திராவிட என்னும் சொல்லைத் தாம் கையாண்டதாகக் கூறியவர் – கால்டுவெல்.

41. அழிந்து வரும் பண்டைய தமிழ் ஒலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்  நிறுவனம் யுனெஸ்கோ.

42. கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் எக்கண்டத்தில் இருந்தது – இலெமூரியாக் கண்டத்தில்.

43.  எண்பது விழுக்காடு (80 %) அளவுக்குத் திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிடமொழி.

44. தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனைவளம், கலைவளம், பண்பாட்டுவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்ற மொழியே – செவ்வியல்மொழி.

45.  செவ்வியல்மொழி  எந்த மொழிக் கூறுகளாகவும் கருதப்படுகின்றன – செம்மொழிக்கான (Classical Language).

46. ____, ______ உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. மொரிசியஸ், இலங்கை.

தமிழின் தனித்தன்மைகள்

1. தொன்மையும் இலக்கண இலக்கியவளமும் உடையது தமிழ் மொழியாகும்.

2. இலங்கை, மலேசியா, பரமா. சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிஜித்தீவு ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், இங்கிலாந்து, கயானா, மடகாஸ்கர், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.

3. தமிழ்மொழி தனக்கெனத் தனித்த இலக்கணவளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும்மொழியாகும்.

4. திராவிட மொழிகளுள் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழேயாகும். 

5. தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது.

6. ஒரேபொருளைக் குறிக்கப் பலசொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழேயாகும்.

7. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

8. தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம்பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளில் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப்பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத் தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

தமிழ், பிற திராவிட மொழி களைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந் துணையாக அமைந்துள்ளது.

தமிழ் மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது.


Enable Notifications OK No thanks