சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்

சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்

(மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல. இருப்பினும், எனினும், இதனால்)

Related Topic Covered in Books (This Syllabus Not Available in Samcheer Books)

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக

(நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்)

  1. விண்மீன்
  2. மணிமாலை
  3. நீதிநூல்
  4. விண்வெளி
  5. தமிழ்மாலை
  6. கண்மணி
  7. எழுதுகோல்
  8. தமிழ்மொழி
  1. தமிழ்நூல்
  2. நீதிமொழி
  3. விண்மீன்
  4. நீதிமணி
  5. மணிமொழி
  6. மீன்கண்
  7. நீதிமாலை
  8. தமிழ்வெளி

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

கண்அழகு
மண்
விண்உண்டு
பண்
  1. கண் + அழகு = கண்ணழகு
  2. மண் + அழகு = மண்ணழகு
  3. விண் + அழகு = விண்ணழகு
  4. பண் + அழகு = பண்ணழழு
  1. கண் + உண்டு= கண்ணுண்டு
  2. மண் + உண்டு= மண்ணுண்டு
  3. விண் + உண்டு = விண்ணுண்டு
  4. பண் + உண்டு = பண்ணுண்டு

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)

எ.கா. பூமணி

விடை:
1. மணிமேகலை
2. தேன் மழை
3. பூமழை
4. வான்மழை
5. பொன்மழை
6. செய்விளக்கு
7. பொன்செய்
8. செய்மணி
9. செய்தேன்
10. வான்விளக்கு
11. பொன்மணி
12. பூந்தேன்
13. பூத்தேன்

TNPSC Group 4 Sample Questions 

1. அண்ணன் ________ தம்பி இருவரும் போட்டியில் கலந்து கொண்டனர்.
A) பிறகு
B) இருப்பினும்
C) ஆல்
D) மற்றும்

விடை:  D) மற்றும்

2. நீ நன்கு படிக்க வேண்டும் ________ நன்கு தொழில் கற்றுக்கொள்ள வேண்டும். 
A) மற்றும்
B) மட்டும் அல்ல
C) அல்லது
D) இருப்பினும்

விடை:  C) அல்லது

3. இன்பத்தமிழ் என்னும் பாடல் பாரதிதாசன் _________ இயற்றப்பட்டது.
A) கு
B) இன்கண்
C) ஆல்
D) பிறகு

விடை:  C) ஆல்

4. ___________ என்ன, அனைவரும் வந்து விட்டோம்.
A) அதனால்
B) இதனால்
C) இருப்பினும்
D) பிறகு

விடை : D) பிறகு

5. நான் புத்தகத்தை முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் __________ முழுவதும் படித்தேன்.
A) மற்றும்
B) வரை
C) இருப்பினும்
D) எனினும்

விடை : B) வரை

6. தேர்வில் அது முக்கியம் இது முக்கியம் _________ என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்
A) அதுவுமல்ல
B) இதுவுமல்ல
C) இருப்பினும்
D) இதனால்

விடை: B) இதுவுமல்ல

7. அவர் முயன்றார், __________ வெற்றி பெறவில்லை.
A) இதனால்
B) பிறகு
C) எனினும்
D) இருப்பினும்

விடை : D) இருப்பினும்

8. தெருவிளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன____________ நிலவொளி இருந்தது
A) பிறகு
B) இதனால்
C) எனினும்
D) மற்றும்

விடை: C) எனினும்

9. ஒரு விஷயத்தைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும், ___________ நீங்கள் அதைப் பற்றி ஒரு முடிவை எடுக்க முடியும்
A) வரை
B) பிறகு
C) இதனால்
D) அதனால்

விடை: C) இதனால்