
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் /
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற —— அமைய வேண்டும்
அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு —— ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி
3. தாய் மொழியில் படித்தால் —— அடையலாம்
அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை
4. தகவல் தொட ர்பு முன்னேற்றத்தால் —— சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
5. பழமொழியின் சிறப்பு —— சொல்வது
அ) விரிவாகச் ஆ) சுருங்கச் இ) பழைமையைச் ஈ) பல மொழிகளில்
6. நோயற்ற வாழ்வைத் தருவது —— சுத்தம்
7. உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை
8. கழுத்தில் சூடுவது ——
அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை
9. கதிரவனின் மற்றொரு பெயர் ——
அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்
10. ’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல்——
அ) ஏரி ஆ) கேணி இ) குளம் ஈ) ஆறு
11. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ——
அ) அடுக்குகள் ஆ) கூரை இ) சாளரம் ஈ) வாயில்
12. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.
அ) துருவப்பகுதி ஆ) இமயமலை இ) இந்தியா ஈ) தமிழ்நாடு
13. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ———————
அ) ஊக்கமின்மை ஆ) அறிவுடைய மக்கள் இ) வன்சொல் ஈ) சிறிய செயல்
14. ஒருவர்க்குச் சிறந்த அணி ——————
அ) மாலை ஆ) காதணி இ) இன்சொல் ஈ) வன்சொல்
15. உடல் நோய்க்கு ____________ தேவை.
அ) ஔடதம் ஆ) இனிப்பு இ) உணவு ஈ) உடை
16. நண்பர்களுடன் _____________ விளையாடு.
அ) ஒருமித்து ஆ) மாறுபட்டு இ) தனித்து ஈ) பகைத்து
17. மனிதன் எப்போதும் உண்மையையே ______________.
அ) உரைக்கின்றான் ஆ) உழைக்கின்றான் இ) உறைகின்றான் ஈ) உரைகின்றான்
18. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________.
அ) நூலறிவு ஆ) நுண்ணறிவு இ) சிற்றறிவு ஈ) பட்டறிவு
19. தானே இயங்கும் எந்திரம் _______________.
அ) கணினி ஆ) தானியங்கி இ) அலைபேசி ஈ) தொலைக்காட்சி
20. மாணவர்கள் நூல்களை ——– கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக ஆ) மாசுற இ) மாசற ஈ) மயக்கமுற
21. மாணவர் பிறர்__________ நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி ஆ) தூற்றும்படி இ) பார்க்கும்படி ஈ) வியக்கும்படி
22. நாம்__________சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர் ஆ) ஊரார் இ) மூத்தோர் ஈ) வழிப்போக்கர்
23. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________________.
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை இ) வழி தெரியவில்லை ஈ) பேருந்து வசதியில்லை
24. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள் ஆ) வந்தான் இ) கண்ணில்/கல்வி ஈ) தம்பி
25. தவறான சொல்லை வட்ட மிடுக.
அ) கண்டான் ஆ) வென்ரான் இ) நண்டு ஈ) வண்டு
26. பிறரிடம் நான் ——— பேசுவேன்.
அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்சொல்
27. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது ——— ஆகும்.
அ) வம்பு ஆ) அமைதி இ) அடக்கம் ஈ) பொறை
28. கதிர் முற்றியதும் ___________ செய்வர்.
அ) அறுவடை ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ) களையெடுத்தல்
29. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.
அ) செடி ஆ) கொடி இ) தோரணம் ஈ) அலங்கார வளைவு
30. பழையன கழிதலும்____________ புகுதலும்.
அ) புதியன ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான
31. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்.
பட்டுப் போன மரத்தைக் காண _____________ தரும்.
அ) அயர்வு ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு
32. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால் ஆ) நம் வீடு மாறினால் இ) நாம் நன்கு வரவேற்றால் ஈ) நம் முகவரி மாறினால்
33. நிலையான செல்வம் …………………….
அ) தங்கம் ஆ) பணம் இ) ஊக்கம் ஈ) ஏக்கம்
34. ஆராயும் அறிவு உடையவர்கள் ………………….. சொற்களைப் பேசமாட்டார்கள்.
அ) உயர்வான ஆ) விலையற்ற இ) பயன்தராத ஈ) பயன்உடைய
35. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்———-
அ) மகிழ்ச்சி ஆ) துன்பம் இ) வீரம் ஈ) அழுகை
36. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் ______________
அ) நுகர்வோர் ஆ) தொழிலாளி இ) முதலீட்டாளர் ஈ) நெசவாளி
37. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே)
38. தம்பி ____________ வா. (இவர் / இங்கே)
39. நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
40. யார் ___________ தெரியுமா? (அவர் / யாது)
41. உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே / என்ன)
42. கிடைக்கும் பொருள்களின் _______________ க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
(அ) அளவை (ஆ) மதிப்பை (இ) எண்ணிக்கையை (ஈ) எடையை
43. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம் ஆ) திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
44. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை ஆ) வைகைக்கரை இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்கரை
45. கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்
46. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________
அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்
47. காந்தியடிகள் _____________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
அ) நாமக்கல் கவிஞர் ஆ) பாரதிதாசன் இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்
48. அ) படித்தாள் ஆ) ஐ இ) மற்று ஈ) கு
49. அ) மதுரை ஆ) கால் இ) சித்திரை ஈ) ஓடினான்
50. அ) சென்றாள் ஆ) வந்த இ) சித்திரை ஈ) நடந்து
51. அ) மா ஆ) ஐ இ)உம் ஈ) மற்று
52. பரிசு பெறும்போது நம் மனநி்ல ……………… ஆகை இருக்கும்.
அ) கைவ்ல ஆ) துன்பம் இ) மகிழச்சி ஈ) வசாரவு
53. வாழவில் உயர கடினமாக ……………… வேண்டும்.
அ) பேச ஆ) சிரிக்க இ) நடக்க ஈ) உழக்க
54. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை ஆ) மண் இ) முக்காலி ஈ) மரங்கொத்தி
55. காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம் ஆ) வளையல் இ) சுவர் ஈ) யானை
56. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல் ஆ) வாழை இ) மீன்கொத்தி ஈ) பறவை
57. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.
அ) பகை ஆ) ஈகை இ) வறுமை ஈ) கொடுமை
58. பிற உயிர்களின் …………………….க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வை ஆ) செல்வத்தை இ) துன்பத்தை ஈ) பகையை
59. உள்ளத்தில் ………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி ஆ) மன்னிப்பு இ) துணிவு ஈ) குற்றம்
60. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ______________
அ) ஜீவ ஜோதி ஆ) ஆசிய ஜோதி இ) நவ ஜோதி ஈ) ஜீவன் ஜோதி
61. நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______________
அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர் இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர் ஈ) தம் குடும்பத்தையே எண்ணிவாழ்பவர்
62. ஒருவர் செய்யக் கூடாதது ______________
அ) நல்வினை ஆ) தீவினை இ) பிறவினை ஈ) தன்வினை
63. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் ———-
அ) மனித வாழ்க்கை ஆ) மனித உரிமை இ) மனித நேயம் ஈ) மனித உடைமை
64. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ———- காட்டியவர் வள்ளலார்.
அ) கோபம் ஆ) வெறுப்பு இ) கவலை ஈ) அன்பு
65. அன்னை தெரசாவிற்கு ———- க்கான ‘நோபல் பரிசு’ கிடைத்தது
அ) பொருளாதாரம் ஆ) இயற்பியல் இ) மருத்துவம் ஈ) அமைதி
66. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ———-
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம் ஆ) குழந்தைகளை நேசிப்போம் இ) குழந்தைகளை வளர்ப்போம் ஈ) குழந்தைகள் உதவி மையம்
67. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.
அ) கலம்பகம் ஆ) பரிபாடல் இ) பரணி ஈ) அந்தாதி
68. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்
69. மொழியின் முதல்நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.
அ) படித்தல் ஆ) கேட்டல் இ) எழுதுதல் ஈ) வரைதல்
70. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
71. தமிழின் கிளை மொழிகளுள் ஒன்று _________
அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்
72. பேச்சு மொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்
அ) இலக்கிய ஆ) உலக இ) நூல் ஈ) மொழி
73. பசு, விடு, ஆறு, கரு
பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து
ஆறு, மாசு , பாகு , அது
அரசு, எய்து, மூழ்கு, மார்பு
பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு
74. வாழை, கன்றை ________.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
75. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.
அ) பச்சை இலை ஆ) கோலிக்குண்டு இ) பச்சைக்காய் ஈ) செங்காய்
76. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்ப டுபவை _____.
அ) மண் ஒட்டிய பழங்கள் ஆ) சூடான பழங்கள் இ) வேகவைத்த பழங்கள் ஈ) சுடப்ப ட்ட பழங்கள்
77. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ____.
அ) காது ஆ) தந்தம் இ) கண் ஈ) கால்நகம்
78. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.
அ) வேடந்தாங்கல் ஆ) கோடியக்கரை இ) முண்டந்துறை ஈ) கூந்தன்குளம்
79. ‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.
அ) அரை ஆ) ஒன்று இ) ஒன்றரை ஈ) இரண்டு
80. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.
அ) போன்ம் ஆ) மருண்ம் இ) பழம் விழுந்தது ஈ) பணம் கிடைத்தது
81. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.
அ) ஐகாரக் குறுக்கம் ஆ) ஔகாரக் குறுக்கம் இ) மகரக் குறுக்கம் ஈ) ஆய்தக் குறுக்கம்
82. வாய்மை எனப்படுவது ______.
அ) அன்பாகப் பேசுதல் ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல் இ) தமிழில் பேசுதல் ஈ) சத்தமாகப் பேசுதல்
83. ______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன் ஆ) பொறாமை இல்லாதவன் இ) பொறாமை உள்ளவன் ஈ) செல்வந்தன்
84. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.
அ) தோரணம் ஆ) வானரம் இ) வாரணம் ஈ) சந்தனம்
85. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்,
அ) முயல் ஆ) நரி இ) பரி ஈ) புலி
86. மெத்தை வீடு என்று குறிப்பிடப்ப டுவது _____.
அ) மெத்தை விரிக்கப்ப ட்ட வீடு ஆ) படுக்கையறை உள்ள வீடு இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு ஈ) மாடி வீடு
87. இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ____________.
அ) நிலம் ஆ) நீர் இ) காற்று ஈ) நெருப்பு
88. மக்கள் __________ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் .
அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்
89. புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது _____________.
அ) காற்று ஆ) நாவாய் இ) கடல் ஈ) மணல்
90. தமிழர்கள் சிறிய நீரநிடலகடளக் கடக்கப் பயன்படுத்தியது ___________.
அ) கலம் ஆ) வங்கம் இ) நாவாய் ஈ) ஓடம்
91. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.
அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
92. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________.
அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்ணடை ஈ) சமுக்கு
93. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________.
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்
94. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________.
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்
95. வடமொழி என்று அழைக்கப ்படும் மொழி ___________.
அ) மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு
96. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது________.
அ) மயில் ஆ) குயில் இ) கிளி ஈ) அன்னம்
97. பின்வருவனவற்றுள் ‘ மலை’யைக் குறிக்கும் சொல் _______.
அ) வெற்பு ஆ) காடு இ) கழனி ஈ) புவி
98. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____.
அ) வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்
99. கல்வியைப் போல் _____ செல்வம் வேறில்லை.
அ) விலையில்லாத ஆ) கேடில்லாத இ) உயர்வில்லாத ஈ) தவறில்லாத
100. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் ______.
அ) கல்வி ஆ) காலமறிதல் இ) வினையறிதல் ஈ) மடியின்மை
101. கல்வியில்லாத நாடு ________ வீடு.
அ) விளக்கில்லாத ஆ) பொருளில்லாத இ) கதவில்லாத ஈ) வாசலில்லாத
102. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.
அ) 40 ஆ) 42 இ) 44 ஈ) 46
103. ‘எழுதினான்’ என்பது _______.
அ) பெயர்ப் பகுபதம் ஆ) வினைப் பகுபதம் இ) பெயர்ப் பகாப்பதம் ஈ) வினைப் பகாப்பதம்
104. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.
அ) நான்கு ஆ) ஐந்து இ) ஆறு ஈ) ஏழு
105. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
106. மயிலும் மானும் வனத்திற்கு _________ தருகின்றன.
அ) களைப்பு ஆ) வனப்பு இ) மலைப்பு ஈ) உழைப்பு
107. அன்னை தான் பெற்ற ______ சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.
அ) தங்கையின் ஆ) தம்பியின் இ) மழலையின் ஈ) கணவனின்
108. மிளகாய் வற்றலின் _________ தும்மலை வரவழைக்கும்.
அ) நெடி ஆ) காட்சி இ) மணம் ஈ) ஓசை
109. பொருந்தாத ஓசை உடைய சொல் ………………
அ) பாய்கையால்bஆ) மேன்மையால் இ) திரும்புகையில் ஈ) அடிக்கையால்
110. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்ப்பட்ட பொருள்களில் ஒன்று _______.
அ) மண்துகள் ஆ) நீர் வண்ணம் இ) எண்ணெய் வண்ணம் ஈ) கரிக்கோல்
111. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர்__________.
அ) எழுது ஆ) பாடு இ) படித்தல் ஈ) நடி
112. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர்__________.
அ) ஊறு ஆ) நடு இ) விழு ஈ) எழுதல்
113. _____________ தீமை உண்டாகும்.
அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்
114. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.
அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்
115. மரம் வளர்த்தால் _________ பெறலாம்
அ) மாறி ஆ) பாரி இ) காரி ஈ) பாரி
116. உழவர் சேற்று வயலில் __________ நடுவர்.
அ) செடி ஆ) பயிர் இ) மரம் ஈ) நாற்று
117. வயலில் விளைந்து முற்றிய நெற்ப யிர்களை __________ செய்வர்.
அ) அறுவடை ஆ) உழவு இ) நடவு ஈ) விற்பனை
118. திருநெல்வேலி_________ மன்னர்களோடு தொடர் பு உடையது.
அ) சேர ஆ) சோழ இ) பாண்டிய ஈ) பல்லவ
119. இளங்கோ வடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.
அ) இமய ஆ) கொல்லி இ) பொதிகை ஈ) விந்திய
120. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி ஆ) வைகை இ) தென்பெண்ணை ஈ) தாமிரபரணி
121. காந்தியடிகள் எப்போதும் ———–ப் பேசினார்
அ) வன்சொற்களை ஆ) அரசியலை இ) கதைகளை ஈ) வாய்மையை
122. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக ________ என்பது நெறி.
அ) தனியுடமை
ஆ) பொதுவுடைமை
இ) பொருளுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
123. செல்வத்தின் பயன் ________ வாழ்வு
அ) ஆடம்பர ஆ) நீண்ட இ) ஒப்புரவு ஈ) நோயற்ற வாழ்வு.
124. வறுமையை ப் பிணி என்றும் செல்வத்தை ________ என்றும் கூறுவர்.
அ) மருந்து ஆ) மருத்துவர் இ) மருத்துவமனை ஈ) மாத்திரை
125. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ________.
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) முடியரசன் ஈ) கண்ணதாசன்
126. __________ ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு ஆ) வயல் இ) மலை ஈ) தெளிந்த நீர்
127. மக்கள் அனைவரும் __________ ஒத்த இயல்புடையவர்கள்.
அ) பிறப்பால் ஆ) நிறத்தால் இ) குணத்தா ல் ஈ) பணத்தால்
128. மனித வாழ்க்கையில் தேவைப்ப டுவது _________.
அ) பணம் ஆ) பொறுமை இ) புகழ் ஈ) வீடு
129. கூடு கட்டத் தெரியாத பறவை
அ) காக்கை
ஆ) குயில்
இ) சிட்டுக்குருவி
ஈ) தூக்கணாங்குருவி
130. காயிதேமில்லத் _______பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
அ) தண்மை ஆ) எளிமை இ) ஆடம்பரம் ஈ) பெருமை
131. ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் _______ என்பது பொருள்.
அ) சுற்றுலா வழிகாட்டி ஆ) சமுதாய வழிகாட்டி இ) சிந்தனை யாளர் ஈ) சட்ட வல்லுநர்
132. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் _______ இயக்கத்தில் கலந்துகொண்டார்.
அ) வெள்ளையனே வெளியேறு ஆ) உப்புக்காய்ச்சும் இ) சுதேசி ஈ) ஒத்துழையாமை
133. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொ ழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் _______.
அ) சட்ட மன்றம் ஆ) நாடா ளுமன்றம் இ) ஊராட்சி மன்றம் ஈ) நகர் மன்றம்
134. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ______.
அ) பொருளாகு பெயர் ஆ) சினையாகு பெயர் இ) பண்பாகுபெயர் ஈ) இடவாகு பெயர்
135. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ______.
அ) முதலாகு பெயர் ஆ) சினையாகு பெயர் இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகுபெயர்
136. மழை சடசடவெ னப் பெய்தது. – இத்தொடரில் அமைந்துள்ளது ______.
அ) அடுக்குத்தொடர் ஆ) இரட்டைக்கிளவி இ) தொழிலாகு பெயர் ஈ) பண்பாகுபெயர்
137. அடுக்குத் தொடரில் ஒரே சொல் ______ முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
138. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
139. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ) நீரில்
140. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு
141. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை ஆ) இசைக்கலை இ) அச்சுக்கலை ஈ) நுண்கலை
142. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெ ழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
143. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார் இ) வ.உ. சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்
144. இதழ்களைக் குவிப்பதா ல் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ, ஆ
145. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு
146. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
147. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட், ண் ஈ) ப், ம்
148. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
அ) ம் ஆ) ப் இ) ய் ஈ) வ்
149. பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்பு.
அ) பயிலுதல் ஆ) பார்த்தல் இ) கேட்டல் ஈ) பாடுதல்
150. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பா ட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.
அ) கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு
151. வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில் ஆ) துகில் இ) வெயில் ஈ) கயல்
152. முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை ஆ) காலனை இ) ஆற்றலை ஈ) நலத்தை
153. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.
அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக
154. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
அ) மாடு ஆ) வயல் இ) புல் ஈ) மேய்ந்தது
155. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____.
அ) படித்தான் ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ) ஓடாது
156. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
அ) செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய
157. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.
அ) அடக்கமுடைமை ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை ஈ) பொருளுடைமை
158. ‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.
அ) எடுத்துக்காட்டு உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உவமை அணி ஈ) உருவக அணி
159. உடல்நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி ஆ) பணி இ) பிணி ஈ) மணி
160. நீலகேசி கூறும் நோயின் வகைகள் _______.
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து
161. காந்தியடிகள் _____ போற்ற வாழ்ந்தார்.
அ) நிலம் ஆ) வையம் இ) களம் ஈ) வானம்
162. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் _____ பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை
163. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின் ஈ) வாழ்வின்
164. உடல் எடை அதிகரிப்பதா ல் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.
அ) தலைவலி ஆ) காய்ச்சல் இ) புற்றுநோய் ஈ) இரத்தக் கொதிப்பு
165. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்கா க ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக ஈ) உணவுக்காக
166. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.
அ) முற்று ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்
167. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.
அ) படித்து ஆ) எழுதி இ) வந்து ஈ) பார்த்த
168. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை ஈ) பெயரை
169. கற்றவருக்கு அழகு தருவது ________.
அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி
170. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.
அ) சோம்பல் ஆ) அகம்பாவம் இ) வருத்தம் ஈ) வெகுளி
171. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.
அ) விளக்கு ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு
172. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் _____
அ) இளமை ஆ) முதுமை இ) நேர்மை ஈ) வாய்மை
173. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்
174. பெயர்ச்சொ ல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.
அ) எழுவாய் ஆ) செயப்படுபொருள் இ) பயனிலை ஈ) வேற்றுமை
175. எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்ப டுகிறது.
அ) எழுவாய் ஆ) செயப்படுபொருள் இ) விளி ஈ) பயனிலை
176. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.
அ) மூன்றாம் ஆ) நான்காம் இ) ஐந்தாம் ஈ) ஆறாம்
177. ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ________ வேற்றுமை பயின்று
வந்துள்ளது.
அ) இரண்டாம் ஆ) மூன்றாம் இ) ஆறாம் ஈ) ஏழாம்
178. ‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல் ஆ) அழித்தல் இ) கொடை ஈ) அடைதல்
179. காட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.
அ) முகில்கள் ஆ) முழவுகள் இ) வேழங்கள் ஈ) வேய்கள்
180. பசியால் வாடும் _____ உணவளித்தல் நமது கடமை.
அ) பிரிந்தவர்க்கு ஆ) அலந்தவர்க்கு இ) சிறந்தவர்க்கு ஈ) உயர்ந்தவருக்கு
181. நம்மை _____ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை ஆ) அகழ்வாரை இ) புகழ்வாரை ஈ) மகிழ்வாரை
182. மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.
அ) சிறை ஆ) அறை இ) கறை ஈ) நிறை
183. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.
அ) கல்வெட்டுகள் ஆ) செப்பேடுகள் இ) பனையோலைகள் ஈ) மண்பாண்டங்கள்
184. பானை______ ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல் ஆ) வனைதல் இ) முடைதல் ஈ) சுடுதல்
185. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____.
அ) வேற்றுமைத்தொகை ஆ) உம்மைத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) அன்மொழித்தொகை
186. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை.
அ) வினை ஆ) பண்பு இ) அன்மொழி ஈ) உம்மை
187. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர்.
அ) எழுவாய் ஆ) விளி இ) வினைமுற்று ஈ) வேற்றுமை
188. அரசரை அவரது _____ காப்பாற்றும்.
அ) செங்கோல் ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி ஈ) படை வலிமை
189. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேச
வேண்டும்.
அ) சொல்லின் ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்
190. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லாம் முளைத்தன.
அ) சத்துகள் ஆ) பித்துகள் இ) முத்துகள் ஈ) வித்துகள்
191. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று.
அ) காரி ஆ) ஓரி இ)வாரி ஈ) பாரி
192. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _____.
அ) பெருமழை ஆ) சிறு மழை
இ) எடைமிகுந்த மழை ஈ) எடை குறைந்த மழை
193. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____.
அ) தொல்காப்பியம் ஆ) அகநானூறு இ) புறநானூறு ஈ) சிலப்பதிகாரம்
194. சேரர்களின் தலைநகரம் _____.
அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) தொண்டி ஈ) முசிறி
195. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.
அ) புல் ஆ) நெல் இ) உப்பு ஈ) மிளகு
196. ஆன்பொருநை என்று அழைக்கப்ப டும் ஆறு _____.
அ) காவிரி ஆ) பவானி இ) நொய்யல் ஈ) அமராவதி
197. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
_____.
அ) நீலகிரி ஆ) கரூர் இ) கோயம்புத்தூர் ஈ) திண்டுக்கல்
198. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.
அ) ஐந்து ஆ) நான்கு இ) மூன்று ஈ) இரண்டு
199. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____
அ) இயல்பு ஆ) தோன்றல் இ) திரிதல் ஈ) கெடுதல்
200. சிங்கம் _____யில் வாழும்.
அ) மாயை ஆ) ஊழி இ) முழை ஈ) அலை
201. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _____.
அ) வீரம் ஆ) அச்சம் இ) நாணம் ஈ) மகிழ்ச்சி
202. வானில் முழுநிலவு அழகாகத் ___________ அளித்தது.
அ) தயவு ஆ) தரிசனம் இ) துணிவு ஈ) தயக்கம்
203. இந்த _________ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
அ) வையம் ஆ) வானம் இ) ஆழி ஈ) கானகம்
204. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்க ள்.
அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை
205. ஒன்றே _____ என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.
அ) குலம் ஆ) குளம் இ) குணம் ஈ) குடம்
206. மனிதர்கள் தம் _____ தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.
அ) ஐந்திணைகளை ஆ) அறுசுவைகளை
இ) நாற்றிசைகளை ஈ) ஐம்பொறிகளை
207. ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் _____.
அ) பகர்ந்தனர் ஆ) நுகர்ந்தனர் இ) சிறந்தனர் ஈ) துறந்தனர்
208. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________.
அ) வானம் ஆ) கடல் இ) மழை ஈ) கதிரவன்
209. ஆண்மையின் கூர்மை __
அ) வறியவருக்கு உதவுதல் ஆ) பகைவருக்கு உதவுதல் இ) நண்பனுக்கு உதவுதல் ஈ) உறவினருக்கு உதவுதல்
210. வறுமை வந்த காலத்தில் _____ குறையாமல் வாழ வேண்டும்.
அ) இன்பம் ஆ) தூக்கம் இ) ஊக்கம் ஈ) ஏக்கம்
211. அடுத்தவர் வாழ்வைக் கண்டு _____ கொள்ளக்கூடாது.
அ) உவகை ஆ) நிறை இ) அழுக்காறு ஈ) இன்பம்
212. நாம் நீக்கவேண் டியவற்றுள் ஒன்று _____ .
அ) பொச்சாப்பு ஆ) துணிவு இ) மானம் ஈ) எளிமை
213. உன்னுடன் நீயே_____கொள்.
அ) சேர்ந்து ஆ) பகை இ) கைகுலுக்கிக் ஈ) நட்பு
214. கவலைகள்_____அல்ல.
அ) சுமைகள் ஆ) சுவைகள்
இ) துன்பங்கள் ஈ) கைக்குழந்தைகள்