கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்

கவனி : தேர்வில் ஒரு வினா மட்டுமே கேட்கப்படும்.

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

1921 ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல் இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில் கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின் உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார்.

ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் " தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா? அவர்தான் சர். சி. வி. இராமன்.

1. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
A) அ.வி.இராமன்
B)  வி.கே. பலராமன்
C) சர்.சி.வி. இராமன்
D) சர்.டி.கே. இரசிகமணி
E) விடை தெரியவில்லை

2. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
A) கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
B) கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
C) கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
D) கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
E) விடை தெரியவில்லை

3. தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
A) ஜனவரி 20ம் தேதி
B) பிப்ரவரி 28ம் தேதி
C) மார்ச் 16ம் தேதி
D) ஏப்ரல் 28ம் தேதி
E) விடை தெரியவில்லை


4. இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக
A)  சர்.சி.வி. இராமன்
B) வி.கே.பலராமன்
C) அ. வி. இராமன்

D) சர்.டி.கே. இரசிகமணி

பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். "யாரைப் பார்க்க வந்தீங்க?" என்று அன்புடன் வினவினார். "எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்..." என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், "அம்மா அனுப்பி விட்டாரா?" என்று காமராசர் கேட்டார். "இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க" என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். "ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க" என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்________
A) பெற்றோர்
B) சிறுவன், சிறுமி
C) மக்கள்
D) ஆசிரியர்கள்
E) விடை தெரியவில்லை

2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
A) ஏழ்மை
B) நேர்மை
C) உழைப்பு
D) கல்லாமை
E) விடை தெரியவில்லை

3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம்________
A) மகிழ்ந்தனர்
B) அழுதனர்
C) நெகிழ்ந்தார்
D) வருந்தினர்
E) விடை தெரியவில்லை


4. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
A) பண உதவி கேட்க
B) மன்னிப்பு கேட்க
C) பொருள் உதவி கேட்க
D) புத்தம் கேட்க
E) விடை தெரியவில்லை

5. காமராசர் செய்த உதவி யாது?
A) மருதுவ உதவிக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.
B) பள்ளிக்கு சேர்க்க வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.
C) தேர்வுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.
D) வீட்டுக்கடனுக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.
E) விடை தெரியவில்லை

பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

வீட்டிற்குள் வந்த வேலனைத் தந்தை அழைத்தார். "உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே. பெயர் கொடுத்து விட்டாயா?" என்று கேட்டார். "இல்லையப்பா, அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை" என்றான் வேலன். "போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்" என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். "நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா" என்றான்.


A) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
B) வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு.
C) அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்

D) உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.
E) விடை தெரியவில்லை

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று. ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.


1. கிடைக்கும் பொருள்களின் ________ க் கூட்டிப் புதிய பொருளாக

A) அளவை
B) மதிப்பை 

C) எண்ணிக்கையை
D) எடையை

E) விடை தெரியவில்லை

2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை________ மாற்றலாம்.
A) கோலமாவாக
B) அரிசிமாவாக
C) கருப்புமாவாக
D) கிஷர்மாவாக
E) விடை தெரியவில்லை

3. வணிகத்தின் நோக்கம் என்ன?
A) எல்லாப் பொருள்களையும் விற்க செய்வதே.
B) எல்லாப் பொருள்களையும் வாங்கச் செய்வதே. 
C) எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே.
D) எல்லாப் பொருள்களையும் எல்லோரிடமும் சேர செய்வதே.
E) விடை தெரியவில்லை

4. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக
A) வங்கம் 
B) நாவாய் 
C) வணிகம்
D) கப்பல்
E) விடை தெரியவில்லை

II. பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

விபத்தில்லா வாகனப் பயணம்

சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

  • ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
  • சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.
  • சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
  • தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழி விட வேண்டும்.
  • எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
  • மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

வினாக்கள்

1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?

சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?

  • தீயணைப்பு வாகனம்
  • அவசர சிகிச்சை ஊர்தி

3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?

சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?

கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.

வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று ‘காங்கேயம்’ கருதப்படுகிறது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள் ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

கடுமையாக உழைக்கக்கூடிய காங்கேயம் மாடுகள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன. இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூர் அமராவதி ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1. பின்வரும் நான்கு வினாக்களுக்கும் பொருந்தும் ஒரு விடையைத் தருக.

அ) மிடுக்குத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர் பெற்றவை எவை?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

ஆ) தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

இ) பிற மாநிலத்தவர் விரும்பி வாங்கிச் செல்கின்ற காளை இனம் எது?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

ஈ) மேற்கண்ட பத்தி எதைக் குறிப்பிடுகிறது?

விடை : காங்கேயம் இனக்காளைகள்

2. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

  1. கர்நாடகம்
  2. கேரளா
  3. இலங்கை
  4. ஆந்திரா

விடை : இலங்கை

3. பிரித்து எழுதுக:

கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  1. கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
  2. கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
  3. கண்டெடுக்க + பட்டு + உள்ளன
  4. கண் + டெடுக்க + பட்டு + உள்ளன

விடை : கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

4. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

  1. வினாத்தொடர்
  2. கட்டளைத்தொடர்
  3. செய்தித்தொடர்
  4. உணர்ச்சித்தொடர்

விடை : செய்தித்தொடர்

VI.கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

மெளனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம் ஆரம்பமாகி விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!“ பக்கத்திலிருந்தவன் “அடப்பாவி! பேசிட்டியே!“ என்றான். உடனே மூன்றாவது ஆள், “நீ மட்டும் என்ன? நீயும்தான் பேசிவிட்டாய்!“ என்றான். நான்காவது ஆள், “நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை!“ என்றான். இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது.

1. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

2. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

3. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

விடை:-

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.