கி.வா.ஜகந்நாதன்

கி.வா.ஜகந்நாதன்

கி.வா.ஜகந்நாதன்


வயலும் வாழ்வும்


ஓடை எல்லாம் தாண்டிப்போயி –ஏலேலங்கிடி ஏலேலோ 
ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து –ஏலேலங்கிடி ஏலேலோ 
சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி –ஏலேலங்கிடி ஏலேலோ
சேத்துக்குள்ளே இறங்குறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோ 

நாத்தெல்லாம் பிடுங்கையிலே –ஏலேலங்கிடி ஏலேலோ 
நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோ
ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் –ஏலேலங்கிடி ஏலேலோ 

ஓடியோடி நட்டோமையா –ஏலேலங்கிடி ஏலேலோ

மணிபோலப் பால்பிடித்து –ஏலேலங்கிடி ஏலேலோ 

மனதையெல்லாம் மயக்குதம்மா –ஏலேலங்கிடி ஏலேலோ 
அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் –ஏலேலங்கிடி ஏலேலோ 
ஆளுபணம் கொடுத்துவாரான் –ஏலேலங்கிடி ஏலேலோ

சும்மாடும் தேர்ந்தெடுத்து –ஏலேலங்கிடி ஏலேலோ 

சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் –ஏலேலங்கிடி ஏலேலோ 
கிழக்கத்தி மாடெல்லாம் –ஏலேலங்கிடி ஏலேலோ 
கீழே பார்த்து மிதிக்குதையா –ஏலேலங்கிடி ஏலேலோ

கால்படவும் கதிருபூரா –ஏலேலங்கிடி ஏலேலோ 
கழலுதையா மணிமணியா –ஏலேலங்கிடி ஏலேலோ


–  கி.வா.ஜகந்நாதன்


1. நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது.

2. நாட்டுப்புற பாடல்களை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர்.

3. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை எவ்வாறு அழைப்பர் – மலை அருவி.

4. 'மலை அருவி' என்னும் நூலை தொகுத்தவர் – கி.வா. ஜகந்நாதன்.

5. உழவுத்தொழில் பற்றிய பாடல் – வயலும் வாழ்வும்.

6. 'வயலும் வாழ்வும்' – கி.வா. ஜகந்நாதன்.